Sunday, 26 December 2021

Christmas

ஆண்டவர்  பிறந்த  நாள் 
அகிலம்  முழுவதும்  அன்பு  மலர்ந்த  நாள் 
எளிமையின்  சின்னமாய், எல்லோரின்  பாவத்தையும்  
சிலுவையில்  சுமந்து , தியாகத்தின்  திருவுருவாய்  
இயேசுபிரான்  வந்து  பிறந்த  உன்னத  நன்னாளில் 
மனங்கனிந்த  கிறிஸ்துமஸ்  இனிய  நல்வாழ்த்துக்கள் !!

Ninaivil Ninra Kathai-8

நினைவில்  நின்ற  கதை -8

பார்த்தவுடன்  பதிப்பாசிரியருக்கு என்  மனங்கவர்ந்த 
பெண்ணைப்  பிடித்துப்   போயிற்று

மெல்ல  அவள்  குடும்பம்  பற்றிப்   பேசினார்

பெண்ணின்  தகப்பனாரும்  பதிப்பகம்  நடத்துவதாக  
சொன்னதும்  திருமணமே  முடிந்தது  போல மகிழ்ந்தார் 

இருவரும்  சந்தித்து  எங்கள்  காதல்  விவகாரம்  பற்றி  பேசினர்
 
"எதையாவது  சாதித்து  விட்டு  பணமும் , பேரும் , புகழுடன்
வந்தால் , தன்  மகளை  மணமுடித்து  தருவதாக  சொன்னார் "

பார்  போற்றும்  கவிஞனாய்  வரும்  முயற்சியில்  தான்  
வாரம்  ஒரு  கவிதை  வெளியிட்டு   வருகிறேன் 

வெள்ளைத்  தாமரையில்  வீற்றிருக்கும்
  அன்னை  கலைவாணி  அகிலம்  போற்றும்  

கவிஞனாக  என்னை  வெளிச்சத்திற்கு  
வெகுவிரைவில்  வெளிக்கொணர்வாள் 

அவள்  ஆசியுடன்  எங்கள்  திருமணம்  நிச்சயம்  நிகழும் 

அமுதமெனும்  இனிய  தமிழே  என்  இனிய  
இல்லறத்திற்கு  அஸ்திவாரமாய்  அமைவது  மகிழ்ச்சிக்குரியது 

தமிழ்  மேல்  பற்றுக்கொண்ட  எம்  தமிழ்  மக்களின்  
நல்லாதரவே  எனை  மேலும்  மேலும்  கவி  படைக்க  உதவும்  

என்  தமிழோடு  தொடர்ந்து  பயணிக்கும்  வாசகர்  
அனைவருக்கும்  தமிழ்த்தாயின்  அருளும்  ஆசியும் 
நிச்சயம்  கிடைக்கும் 

மொழிப்பற்றும்,  இனப்பற்றும்  கொண்ட  எம்  தமிழ்  குடிமக்கள் 
ஒற்றுமையோடு  காலங்கடந்தும்  வாழ்க! வாழ்க!  வாழ்க !!!

----த .சத்தியமூர்த்தி   

Saturday, 18 December 2021

Ninaivil Ninra Kathai-7

 நினைவில்  நின்ற  கதை-7

எப்படி  கெட்டியாக  மனதை  வைத்திருந்தாலும் 
இது  எப்படி  திடிரென்று  ஒருவர்  மேல் மையல்  கொள்கிறது
பார்க்காமல்  போனாலோ  மனம்  பதறுகிறது 

எதை வைத்து  அவள்  மேல்  இப்படி  ஒரு  எண்ணம்  ஏற்பட்டது 
அவளைப்  பற்றி  முழுமையாக  எதுவும்  தெரியாமல்  
அவள்  தான்  இனியெல்லாம்  என  எண்ணத்  தோன்றுகிறது

இருவரும்  சொல்லி  வைத்தார்  போல்  
இதைத்தான்  எண்ணிக்  கொண்டிருந்தோம் 

   பதிப்பாசிரியர்  கேட்டார் " எவ்வளவு  நாள்  பழக்கம் !
ஒரு  ஆறு  மாதமாக  பதில்  சொன்னேன் 

பெண்  எப்படி ? படித்தவளா , வசதியானவளா ,
எந்த  சமூகம் ? இந்த  ஊரா  
அடுத்தடுத்து கேள்வி  கேட்டார் 

ஒன்றுக்கும்  என்னிடம்  பதிலில்லை 
 
எதுவுமே  தெரியாது,
ஆனால்  அவளை  உன்னோடு  சேர்த்து  வைக்கவேண்டும்

எப்படிடா  எல்லோரும்  ஒரேமாதிரி  காதலிக்கிறீர்கள் ? 

பேசியது  உண்டா ?
ஆம் , விழியால்  பேசிக்கொள்வோம்

சுத்தம்,
அடுத்தமுறை  உன்னோடு  நானும்  வருகிறேன் 
உன்  மனம்  விரும்பியவளைக்   காண 

என்னை  நம்பித்தான்  உன்னை  சென்னைக்கு  
அனுப்பி   இருக்கிறார்கள்  உன்  பெற்றோர்." 

  விஷயத்தை    அவர்  காதில்  போட்ட  பின்னால் 
கொஞ்சம்  மனம்  இலேசானது 

எப்பொழுதும்  விரும்பிப்  படிக்கும்  பாரதியின் 
கவிதைக்குள்  நுழைந்தேன்

"எத்தனைக்  கோடி  இன்பம்  வைத்தாய்  பராசக்தி"

வாழ்நாள்  முழுவதும்  வறுமையில்  வாடிய  மாபெரும்
கவிஞனின்  பார்வையில்  எத்தனை  இன்பம் 

கண்ணம்மாவை,  அன்புமனைவியை  உயிராய் 
நேசித்ததால்  அவன்  உள்ளம்  எதற்கும்  கலங்கியதில்லை 

---த .சத்தியமூர்த்தி   





     













 



   








  


      


Saturday, 11 December 2021

Ninaivil Ninra Kathai-6

நினைவில்  நின்ற  கதை-6

எப்படியும்  என்  எண்ணத்தை  வெளிப்படுத்தி விட 
ஒவ்வொரு  முறை  முயன்றும்  எதோ  ஒன்று  தடுத்தது 

மயக்குகின்ற  மாலைப்பொழுதில்  மல்லிகையைத்  தலையில் சூடி 
மஞ்சள் பூசிய  மகாலட்சுமி  எனை நோக்கி  மெல்ல வந்தாள் 

"ஆளை  விழுங்குவது  போல  பார்த்துக்  கொண்டே  
இருந்தால்  போதுமா ?"
தேனிதழை  மெல்லத்  திறந்து  பேசினாள் 

அதிர்ச்சியும், ஆனந்தமும் , ஒரு  சேர  கலந்து,
அசையாமல்  அவளைப்  பார்த்தபடி  நிற்கிறேன் 

எனக்கில்லாத  தைரியம்  அவளுக்காவது  ஏற்பட்டதே !
மகிழ்ச்சியில்  என்  மனம்  துள்ளியது 

"காலத்தைக்  கடத்தினால்  கானல்  நீர்  போல்  
காணாமல்  போயிடுவேன்  

பெண்  பார்க்கும்  படலம்  வீட்டில் தொடங்கிவிட்டார்கள் "
மறுபடியும்  அவளே  பேசினாள்-- நான்  சிரித்தபடி 

"கண்ணில்  ஆரம்பித்த  நம்  காதல்  மங்களமாய்  
கல்யாணத்தில்  தான்  முடியும் , கவலைப்  படாதே "

என்  பேச்சைக்  கேட்டதும்  அவள்  கண்ணில்  
தாரை  தாரையாய்  கண்ணீர்  வழிந்தது 

என்ன  தான்  அவளுக்கு  ஆறுதல்  சொன்னாலும் 
எனக்குள்  ஒரு வித பயம்  ஆரம்பித்தது 

காதலிக்க  இரு மனம் ஒன்று  பட்டால்  போதும் - ஆனால் 
திருமணத்திற்கு  எத்தனை  மனம்  ஒன்று  சேர  வேண்டும் 
எப்படியாவது  எங்களை  ஒன்று  சேர்த்து  விடு 

கண்ணில்  பட்ட  தெய்வத்திடமெல்லாம்  
வேண்டுகோள்  வைத்தேன்  

களத்தில்  இறங்கி  அவள்  கவலையைத்  தீர்க்க 
பதிப்பக  முதலாளியைத்  தேடிச்  சென்றேன் 

-----த .சத்தியமூர்த்தி 












   
 










   




Saturday, 4 December 2021

Ninaivil Ninra Kathai-5

நினைவில் நின்ற  கதை-5

பூங்காவில்  ஊஞ்சலில்  அமர்ந்து  ஊர்வசி  ஆட 
அவள்  அழகில்  சொக்கிப்போனேன்

நான்  பார்ப்பதை  அவளது  உள்ளுணர்வு  உணர்த்தியதாலோ 
சட்டென  அவளும்  என்மேல்  பார்வையைப்  பதித்தாள் 

அந்த  பார்வையில்  பலநாள்  பழகியது  போல்
கனிவும்  பரிவும்  இருந்தது 

அந்தப்  பார்வைக்குத்  தான்  எத்தனை  மகிமை !!

கடைவீதியில்  ஒருநாள், ஆலயத்தில்  ஒருநாள் 
கல்லூரி  செல்லும்  வழியில்  ஒருநாள் 

அடுத்தடுத்து சொல்லி  வைத்தது  போல  
அவளும்  நானும்  பார்வையை  மட்டும்  
ரகசியமாய்  பரிமாறிக் கொண்டோம் 

அந்த  பார்வையில்  தான்  எத்தனை  எத்தனை  ஆசைகள் !!

அந்த  நாட்கள்  தான்  என்  வாழ்வில்  உண்மையிலே 
மறக்க முடியாத  பொன்னான  காலம் 

எத்தனை  உற்சாகம்,  எப்போதும்  சுறுசுறுப்பு ,
நடை,  உடை , பாவனை எல்லாவற்றிலும்  
அப்படி  ஒரு  அக்கறை  

ஒரு  பெண்ணை  வெற்றிக்  கொண்டதை  உலகமே  
என்  கைக்குள்  கிடைத்ததைப்  போல்  மகிழ்தேன் 

வசதி   வாய்ப்பு  குறைந்திருந்தாலும்
மனதளவில்  ராஜாவாக  வலம்   வந்தேன் 

நாட்கள்   நகர்ந்தது 
 
உள்ளத்தில்  உள்ளதை  ஏனோ 
வாய்விட்டுச்   சொல்ல  முடியவில்லை 

சொல்லி  இருந்தால்  சந்தோஷப்பட்டிருப்பாள் 

யதார்த்தத்தையும்  உணரவில்லை - என் 
நிலையையும்  உயர்த்திக்  கொள்ளவில்லை 

அதன்  விளைவு  

----த .சத்தியமூர்த்தி 
          

Saturday, 27 November 2021

Ninaivil Ninra Kathai-4

நினைவில்  நின்ற  கதை -4 

விடிந்த  பொழுதை  வரவேற்று 
கதிரவனைக்  கை  கூப்பி  வணங்கி  
பதிப்பகம்  நோக்கிப்  புறப்பட்டேன் 

வழியில்  வண்டியை  நிறுத்தி  கொஞ்சம்  
காலார  நடை  போட பூங்காவில்  நுழைந்தேன் 

பூத்துக்  குலுங்கிய  பூக்களெல்லாம்  எனை 
வரவேற்பது  போல்  தலையை  மெல்ல  அசைத்தது 

வீசுகின்ற  தென்றல்  வாஞ்சையோடு  எனை  
வருடிக்  கொடுத்து  புத்துணர்ச்சியாக்கியது 

சிறகடித்து  பறக்கும்  பட்டாம்பூச்சியின்  அழகு  என் 
சிந்தையைக்  கொள்ளைக்  கொண்டது 

எத்தனை  அழகோடு  அந்த  இறைவன்  
இந்த  பூமியைப்  படைத்திருக்கிறான் 

அவன்  படைப்பில்  மனம்  மகிழ்ந்திருந்த  வேளை,
எல்லா  அழகையும்  தோற்கடிப்பது  போல் 

வில்லேந்திய   விழிகளோடும், கலகலவென  சிரிப்போடும் ,
தோழிகள்  புடை  சூழ  கடற்கரையில்  கண்ட

அப்பேரழகி  
பூங்காவின்  அழகை  கூட்ட நந்தவனமாய்  நுழைந்தாள் !!

 பார்த்தவுடன்  எல்லோரையும்  வசீகரிக்கும்  பருவம் 
கனவினிலே  வந்து  மயங்க  வைத்த  உருவம்

காலையில்  தோன்றிய  மகிழ்ச்சிக்கானக்   காரணத்தை, 
அருகில்  செல்ல  அச்சப்பட்டு  இருந்த  இடத்திலிருந்தே ,
அவளைப்  பார்த்து  பார்த்து  பூரித்தப்போது
தான் புரிந்தது  

கனவில்  கண்டு  வந்த  என்  தேவதையை  
கண்முன்  கொண்டு  வந்து  நிறுத்திய  
கடவுளுக்கு  நன்றி  சொன்னேன்  

---த .சத்தியமூர்த்தி 

Saturday, 20 November 2021

Ninaivil Ninra Kathai-3

 நினைவில்  நின்ற  கதை -3

மழை நீரைச்  சேமிக்க  தடுப்பணைகள் எனது  ஊரில்  இல்லை. 
வானம்  பார்த்த  பூமியாக  நிலம்  வறண்டு  போனது.
 
ஊருக்கே  உணவளிக்கும்  விவசாயக்  குடியில் பிறந்த
நான் , வயிற்றுப்பிழைப்புக்காக  பட்டணம்  வந்த  போது  தான்,
கடற்கரையில்  அப்பேரழகியைக்  கண்டேன்  

பட்டணத்தின்  வனப்பு  பார்த்தவுடன்  பிரமிப்பை  ஏற்படுத்தியது

கல்லுரியில் படிக்கும்  காலம்  தொட்டு  கவிதையின்  மீது  
ஏற்பட்ட  காதல்  என்னை  கவிஞனாக  மாற்றி  இருந்தது .

நான்  கற்ற  தமிழ்  ஒரு  பதிப்பகத்தில்  சிறிய  வேலையில்  
குறைந்த வருவாயில்  எனைக்  கொண்டு  போய் சேர்த்தது, 

 மாதங்களில்  நான்  மார்கழியாக  இருக்கிறேன் 
கண்ணனின்  வாக்கு  கீதையிலே. 

அந்த மார்கழி  மாதத்து  பூபாளம்  பாடும்  
அழகிய  ஒரு  விடியற்காலை.

குதிரைகள்  பூட்டிய  தேரேறி,  அவனியெங்கும் 
ஒளி  வெள்ளத்தைப்  பாய்ச்சுவதற்காக ,

கதிரவன்  தன்  கடமையைக்  கச்சிதமாக  செய்வதற்கு
விரைந்து  வருகிறான்  வானில் .

இனி  இங்கு  இருக்க  இடமில்லையென
இருள்  விடை  பெற்றுச்  சென்றது  

பயிர்களை  வாழ வைத்து அதன்  மூலம்  
உயிர்களை  வாழ வைக்கும்  உத்தமனே  சூரியன்

என்  மனம்   என்றுமில்லாமல்  ஒரு வித மகிழ்ச்சியோடு 
  விடிந்த  பொழுதை  வரவேற்றது.

---த.சத்தியமூர்த்தி 
  

Saturday, 13 November 2021

Ninaivil Ninra Kathai-2

நினைவில்  நின்ற  கதை -2 

என்னை  முழுவதுமாக  நனைத்த  அலையை 
செல்லமாக  தட்டிக்கொடுத்து  திருப்பியனுப்பினேன்

கற்புள்ள  பெண்ணின்  சொல்லுக்கு  இயற்கை 
கை கட்டி சேவகம்  செய்யுமென்பதை ,

கண்ணகியின்  வரலாற்றில்  பூம்புகாரில்  கண்டோம் .

நிலவோடும் கடலோடும்  கொஞ்சி  விளையாடும் 
 இப்பெண்  கண்ணகியின்  வழித்தோன்றலோ!!

பல்வேறு  சிந்தனையிலிருந்து,  விடுபட்ட  நான் 
வானில்  மின்னல்  தோன்றி  மறைவதைப்   போல்

 அப்பெண்  கடற்கரையில்  காணாதது  கண்டு  திடுக்கிட்டேன்.
கரை  முழுதும்  தேடிய  பின்பும்  அவளைக்  காணவில்லை 

மத்தாப்பு  போல்  மனதில்  மகிழ்ச்சியைப்  பரப்பி
கொஞ்ச  நேரம்  எனை மயங்கச்செய்த  அப்பெண்ணின் 

சக்தியை  என்னென்பேன் !!

தனிமை  என்னை  சூழ்வதை  வெறுத்து  வேகமாக 
நடை  போட்டேன்  என்  இருப்பிடம்  நோக்கி 

வானம்  வரமாக  தரும்  மழையெனும்  கொடையை ,
பெய்த   பெருமழையின்  பெரும்பகுதியை ,

வீணாகக்  கடலில்  கலக்க  பார்த்து  நிற்கிறோம் !
 
காவிரியின்  குறுக்கே  கல்லணையைக்  கட்டி  
தஞ்சையை  நெற்களஞ்சியமாக்கினான்

"ஈடுஇணையற்ற மாமன்னன்  கரிகாலன்" 

வீட்டிற்கு  ஒருவர்  ஒன்று கூடி தங்கள்  ஊரில் 
உள்ள  கண்மாயை , குளத்தை ,ஏரியை 

நீர்நிலைகளை , தூர்  வாரினாளே ஏராளமான 
நீரைச்  சேமிக்கலாம் 

---த .சத்தியமூர்த்தி 




 
   












 

Saturday, 6 November 2021

Ninaivil Ninra Kathai-1

 நினைவில்  நின்ற  கதை -1

பௌர்ணமி  நிலவில்  கடற்கரையோரம்  நான் 
காலார  மெல்ல  நடந்தேன் 

பொன்னை  உருக்கி  விட்டது  போல்  கடல்  
தக  தகவென  காட்சி  அளித்தது 

நிலவின்  அழகில்  மயங்கி  நித்தம்  நித்தம் 
அலைகள்  எழுந்து  தழுவும்  முயற்சியோ !!

மணலில்  அமர்ந்து  மஞ்சள்  நிலவினை  
அண்ணாந்து  அதிசயமாய்ப்   பார்த்தேன் 

கனவில்  அடிக்கடி  கண்டு  வந்த  என் 
காதல்  நாயகியை  இதே  கடற்கரையில்  

இதுபோல்  ஒரு  பௌர்ணமி  நாளில்  தான் 
சந்தித்தேன் 

ஆயிரம்  நிலவின்  பிரகாசத்தோடு  
அவள்  எழில்  முகம் 

அவள்  அழகில்  வெட்கித்  தன்  தோல்வியை 
ஒத்துக்கொண்டு  மேகத்திற்குள்  

ஓடி  ஒளிந்தது  வானத்து  வெண்ணிலவு 

வெண்ணிலவு  மறைந்தாலும்,  அப்பெண்ணிலவின் 
பிரகாசத்தில்  கடற்கரை  ஜொலித்தது 

ஆயிரம்  ஆண்டுகள்  தவமிருந்து  அவளை
செதுக்கியிருப்பானோ  பிரம்மன் 

கண்ணாடி  வளையல்கள்  கல கலவென  ஓசையோடு , 
துள்ளி  குதித்து  மானைப்போல்  அங்குமிங்கும் 

மணல்  வெளியில்  கொலுசு  சத்தம்  எதிரொலிக்க ,
குழந்தைகளோடு   குழந்தையாய்  விளையாடினாள் 

அத்தனைக்  கூட்டத்திலும்  தேவதைப்  போல்  
பார்த்தவர்  கண்ணுக்கு  அமுதமாக  தோன்றினாள் 

வைத்த  கண்  வாங்காமல்  ஆசையோடு 
நான்  பார்த்ததாலோ  

ஆத்திரத்தில்  ஆவேசமாய் ஓடிவந்து  அடித்து
எழுப்பியது  என்னை   கடலலைகள் 

----தொடரும் ---

---த. சத்தியமூர்த்தி 

Thursday, 4 November 2021

Diwali

இல்லாமை இல்லாது போக

எல்லோரும் இன்புற்று வாழ

இன்பம் பொங்கும் திருவிழாவாக

மனதிற்கினிய மங்களம் பெருக

தீப ஒளி வீசும் தீபாவளி நன்னாள் 

மகிழ்ச்சி பொங்கும் திருநாளாகட்டும்

         -த.சத்தியமூர்த்தி

Saturday, 30 October 2021

Vaazhkai part-10

வாழ்க்கை -10 

வாழ்வைப்  புரட்டிப்  போடும்  மூன்று  காரணிகள் 
அவை  பிணி  மூப்பு  மரணம் 

திடமான  மன உறுதி  இருந்தால்  எந்த  
வியாதியையும்  விரட்டியடிக்கலாம் 

கடந்து  போன  காலம்  தரும்  
கசப்பான  பரிசு  மூப்பு 

தியானம் , எளிய   உடற்பயிற்சி ,
அளவான  உணவால் , வயோதிகத்தை  வெல்லலாம் 

வாழ்க்கையில்  சந்தித்தே   தீரவேண்டிய  
கடைசி  அனுபவம்  மரணம் 

மரணத்தின்  தருவாயில்  வாழ்வின்  
மகோன்னதம் புரிகிறது 

சமாதியின் முன்னிலையில்  
சகலமும்  புரிகிறது 

தீராப்பசியோடு  இருந்த  நெரும்பு 
உடலை  விழுங்குகிறது 

பற்றி  எரிந்தப்  பின்னர் 
 சாம்பல்  மிச்சமாயிற்று

மனிதனின்  வாழ்வை  இந்த  மரணம் 
முடித்து  வைக்கிறது 

அழிகின்ற  உடல்  கொண்டு
  அன்றாடம்  ஆயிரம்  நடிப்பு !!

உடலென்பது  உண்மையில்  மறைகின்ற  பதிப்பு !!
மற்றொரு  உடலோடு  கலந்தாடும்  களிப்பு !!

உடலாலே  செய்த  பிழை  ஆறாத  தழும்பு !!
கிடைப்பதற்கு  அரிது  இந்த  மானிடப்பிறப்பு..

நீ  மனிதனாக  பிறந்ததால்  யாருக்கு  சிறப்பு ?

"ஊருக்கு  உணவளிக்கும்  உத்தமரை,
நாட்டுக்கு  நலம்  சேர்க்கும்  நல்லவரை ,
மரணத்திற்கப்பாலும்  மக்கள்  நினைப்பர் 
வாழ்வின்  இலக்கணமே  இது தான் !!"

-----த .சத்தியமூர்த்தி 

Saturday, 23 October 2021

Vaazhkai part-9

வாழ்க்கை -9 

வாழ்க்கை ஒரு  கொலு  மண்டபம் 
நம்மை  பொம்மையாக்கி  அழகு  பார்க்கும் 

வாழ்க்கை  ஒரு  பளிங்கு  மண்டபம் 
நம்மையே  நமக்கு  அறிமுகப்படுத்தும் 

வாழ்க்கை  ஒரு  வசந்த மண்டபம்
தங்கி  கொஞ்சம்  இளைப்பாற  வைக்கும் 

வாழ்க்கை  ஒரு  பொது  மண்டபம் 
எல்லோருடைய  நடிப்பும்  தொடர்ந்து  நடக்கும் 

வாழ்க்கை  ஒரு  தியான  மண்டபம் 
புத்துணர்ச்சி  தந்து  பூபாளம்  பாடும் 

வாழ்க்கை  ஒரு ஆயிரங்கால்  மண்டபம் 
ஒவ்வொன்றும்  ஒரு  கலையைக்  கற்றுத்  தரும் 

வாழ்க்கை  ஒரு  கல்  மண்டபம் 
கரடு  முரடான  பாதைகளைக்  கடக்கும் 

வாழ்க்கை  ஒரு முத்து  மண்டபம் 
கனவில்  மிதந்து  கற்பனையில்   பறக்கும் 

வாழ்க்கை  ஒரு கல்யாண  மண்டபம் 
உறவுகளையெல்லாம்  ஒரு சேர  சேர்க்கும் 

வாழ்க்கை  ஒரு  பட்டி  மண்டபம் 
கருத்துக்கள்  மோதி  தெளிவு  பிறக்கும் 

வாழ்க்கை  ஒரு அர்த்த  நாரீஸ்வரர்  மண்டபம் 
நன்மையும் தீமையும்  கலந்தே  இருக்கும் 

வாழ்க்கை  ஒரு மண்  பாண்டம் 
காலம்  முடிந்ததும்  போட்டு  உடைக்கும்  

வாழ்க்கை  ஒரு மணி  மண்டபம் 
வாழ்ந்த  வாழ்க்கையைப்  பறை  சாற்றும்

வாழ்க்கை  ஒரு அட்சயப்பாத்திரம்  
முடிந்தவரை  அள்ளி  அள்ளிக்  கொடுங்கள் 

வறுமையை  இல்லாது  ஒழிக்க  
நம்  வாழ்க்கை  பிரகாசமாகும் 

----த.சத்தியமூர்த்தி 

Saturday, 16 October 2021

Vaazhkai part-8

வாழ்க்கை -8 

வாழ்க்கை  ஒரு  ரங்க  ராட்டினம் 
மேலும்  கீழுமாக சுற்றி  வரும் 

வாழ்க்கை  ஒரு  சர்க்கஸ்  கூடாரம் 
காட்சி  மாறிக்கொண்டே  இருக்கும் 

வாழ்க்கை  ஒரு  ஏணிப்படி  
படிப்படியாய்  தான்  ஏற  வேண்டும் 

பால்ய  வயதில்  பள்ளியில்  பாடம் 
பருவ  வயதில்  காதலில் பாடம் 

இள  வயதில்  குடும்பப்   பாடம்
நடு  வயதில்  தனிமைப்  பாடம் 

வயோதிக  வயதில்  தத்துவப் பாடம்
மூச்சடங்கும்  வேளை  முழுமைப்  பாடம்

வாழ்க்கை  முழுதும்  பாடம்  புகட்டும் 

வந்து  போனவன் எல்லாம்
  இங்கே  வாழ்ந்தவனல்ல 

வெற்றி    பெற்றவனை  மட்டும்  குறித்துக்  கொள்ளும் 

அனுபவம்  என்னும்  அறிவைப்  போதிக்கும் 
  ஆசான்  வாழ்கை!!
 
ஆசையெனும்  கடலில்  தள்ளி  
அவதிப்  பட வைப்பதும் வாழ்க்கை !! 

இருப்பதை  கொண்டு  மகிழ்வுடன்  வாழ 
சொல்லிக் கொடுப்பதும்   வாழ்க்கை !!

இல்லாததற்கு  ஆளாய்  பறந்து  
அவஸ்தைப்  பட  வைப்பதும்  வாழ்க்கை !!

வாழும்  போது  எதைப்பற்றியும் 
 சிந்திக்காதது  வாழ்க்கை !!

வாழ்ந்து  முடித்ததும், " இன்னும்  கொஞ்சம்  நல்லவனாய் 
வாழ்ந்திருக்கலாம்"  என  எண்ண  வைப்பதும்   வாழ்க்கை !!

வாழ்க்கை  முழுதும்  வான  வேடிக்கையாய்,  ஆரவாரமாய்,  
அமர்க்களமாய்,  ஆடம்பரமாய்,  வாழ்ந்தாலும் 

கூட்டிக்  கழித்து  முடிவில்  பார்த்தால் 
"வெறுமை  மட்டுமே  தனிமையில்  சூழும்" 

கிடைக்கும்  போதே  அடுத்தவர்க்கு 
 கொஞ்சம்   கொடுத்துவிடு. 

""பின்னால்  கொடுப்பதற்கு  இருக்க மாட்டாய்""

நினைக்கும்  போதே  தானம்  செய்து  புண்ணியம்  தேடு 
வாழும்  வாழ்க்கையின்  ரகசியமே   இதுதான் 

---த.சத்தியமூர்த்தி 

  











 
 








    
  
 

Saturday, 9 October 2021

Vaazhkai part-7

வாழ்க்கை -7

வாழ்க்கை   புஸ்வானம்  போன்றது 
பிரகாசத்துடன்  எரிந்து  சாம்பலாவது 

வாழ்க்கை  சங்குசக்கரம்  போன்றது 
நம்மைச்  சுற்றியோ  அல்லது  நம்மை  
சுற்றவைத்தோ  சட்டென்று  முடிப்பது 

வாழ்க்கை  கானல்  நீர்  போன்றது 
தூரத்துப்  பச்சையை  அதிகம்  நேசிப்பது 

வாழ்க்கையோடு  எதற்காகவும்  போராடலாம் 
ஆனால்  போராட்டமே  வாழ்க்கையாகக்   கூடாது 

மனம்  போனபடி  வாழ்வது  வாழ்க்கையாகாது 
கோடு  போட்டு  கொள்கையோடு  வாழ்வதே 
 வாழ்க்கையாகும் 

விட்டுக்   கொடுத்து  வாழ்பவன் வாழ்வு 
 கெட்டுப் போவதியில்லை 

ஒட்டு  மொத்தமாய்  ஆசைப்படுவதால் 
இலாபம்  ஏதுமில்லை  !

மலை  மீது  ஏறி  உச்சியைத்  தொட்டாலும் 
தரைக்கு  வர  கீழே  இறங்கி  வர  வேண்டும் 

வாழ்வின் இயல்பும்  இத்தகையதே !
 
உச்சாணிக்  கொம்பில்  உட்கார்ந்தவனையும் 
ஒருநாள்  உருட்டித்   தள்ளி  விடும் 

அடுத்தவர்  நலனைக்  காப்பவரைக்  
கோபுர  உச்சியில்  கொண்டு  போய்  சேர்த்து  விடும் 

கூடி  வாழ்வதே  கோடி  நன்மை 
கொடுத்து  வாழ்வதே  வள்ளல்  தன்மை 

ஊர்  மெச்ச  வாழ்வதே  வாழ்க்கை 
அதை  உண்மையோடு  வாழ்வதே  நேர்மை 

ஒன்று பட்டால்  உண்டு  வாழ்வு 
இதை  ஓங்கி  ஒலித்தால் ஏது  தாழ்வு !!

---த .சத்தியமூர்த்தி  

Saturday, 2 October 2021

Vaazhkai part-6

வாழ்க்கை -6

ஏராளமான  கனவுகளோடு  
துவக்குகிறோம்  வாழ்க்கையை !!

தாயின்  அணைப்பில்  கொஞ்சம்  ஆறுதல்
தந்தையின்  பராமரிப்பில்  வசதிகள் 

வாழ்க்கை  துணையின்  வருகையால்  வசந்தம் 
மழலையின்  தொடர்ச்சியால்  குதூகலம் 

மண்ணுக்கு  தனியாக  வந்து  பிறந்தாலும் 
உறவுகளின்  சங்கமம்  நம்மைச்  சுற்றி  சுழல்கிறது 

உலகமென்னும்  நாடக மேடையில்  நாள்தோறும்  
நம்  வேடம்  மட்டும்  மாறிக்  கொண்டேயிருக்கிறது

நமது  தேவைகளும்  கூடிக்கொண்டே  செல்கிறது 
பொருளீட்ட  முனைவதிலே  பொழுது  போகிறது 

ஓடி  ஓடி  களைத்து , 
வந்த  வழி  திரும்பிப்பார்த்தால் 
நம்  முன்னேற்றத்தை  தடுக்க  ஆங்காங்கே  முட்புதர்கள் 

நரை  திரை  விழுந்து, 
நாடியது  தளர்ந்து,
மூப்பு  மெல்ல  எட்டிப்பார்க்கும் போது 
வெறும்  பெருமூச்சு 

எட்டிக்காயை விடக்  கசப்பானது  இங்கே  
ஏழைகளின்  வாழ்வு  

தாராளமாய்  தானம்  செய்து  எல்லோரையும் 
வாழ வைப்போம்    

அளவுக்கு  அதிகமாய்  ஆண்டவன்   கொடுப்பதே  
அடுத்தவருக்கு  கொடுக்கத்தான் 

வாழ்க்கைச்  சக்கரத்தால்  மேடு  பள்ளம்  
இல்லாத  உலகைப்   படைப்போம் 

ஏற்றத்தாழ்வு  இல்லாத  சமூகமே--இந்த 
தேசம்  காணவேண்டிய  சமூகமாகும் 

---த .சத்தியமூர்த்தி  


  









 

  
 

Saturday, 25 September 2021

Vaazhkai part-5

 வாழ்க்கை -5

வாழ்க்கை  ஒரு  மந்திரக்கோல் 
அத்தனைக்கும்  ஆசை  பட  வைக்கும் 

வாழ்க்கை  ஒரு  திறவுகோல் 
அத்தனைக்கும்  மயங்க  வைக்கும் 

வாழ்க்கை  ஒரு  திறந்த  புத்தகம் 
படிக்க  சுவாரசியமாய்  இருக்கும் 

போதுமென்ற  மனமே  பொன்  செய்யும்  மருந்து 
இறைக்கிற  கிணறு  தான்  சுரக்கும் 

அன்னமிட்ட  வீட்டிலே  தான்  
அன்னலட்சுமி  விரும்பி  வாசம்  செய்வாள் 

வந்தாரை,  வாழ  வைக்கும்  வளமான  தமிழகம் 
வாழ்வை  செம்மையாக்கும்  வலிமையான  மந்திரங்கள்

சமூகத்தையே  வாழவைத்த  
பண்டைய  தமிழ்  நாகரிகம் !!

கூட்டுக்குடும்பமாய்  கள்ளங்கபடமில்லாமல்
வாழ்ந்த  நம்  மூதாதையர் ! 

விருந்தோம்பலை,  விரும்பிக்   கடமையாய்  செய்த 
நம்  தமிழ்  சொந்தங்கள்

வீரமும்  மானமும்  இரு  விழிகளாய் 
காத்த  உத்தமர்கள் 

தேசத்தின்  நலனுக்காக  வாழ்வை  தியாகம்  செய்த
கப்பலோட்டிய  தமிழன்   
சுப்பிரமணிய  பாரதி
சுப்பிரமணிய  சிவா

எப்பேர்ப்பட்ட பரம்பரைக்கு சொந்தக்காரர்கள்  நாம் !!

நம் வாழ்க்கை எப்போதும்  நம்  நலத்தோடு 
மட்டும்  முடிவதல்ல 

மண்ணுக்காய்  உயிர்  நீத்த  நம்  தேசியத்  தலைவர் 
மாவீரன் மேதகு  பிரபாகரனின் 
வழித்   தோன்றல்கள் 

அடுத்தவர்  நலனுக்காய்  நம்  காலடித்தடத்தை 
அழுத்தமாய்  பதிப்போம் 

வாழ்க்கைக்கு  புது  புது  அர்த்தத்தை  
வருங்கால தலைமுறைக்கு  எடுத்துரைப்போம் 

--த .சத்தியமூர்த்தி  

Saturday, 18 September 2021

Vaazhkai part-4

 வாழ்க்கை -4

மழலையில்  தொடங்கி  மரணத்தில்  முடிகிறது 
பிரம்மனும்  அடுத்தடுத்து  பிறவி  
தந்து  கொண்டே  இருக்கிறான் 

சலிக்காமல்  பாமரனும்  மீண்டும்  மீண்டும் 
இறந்து  போகிறான் 

படிப்பு , வேலை,  திருமணம்,  குழந்தை , பேரக்குழந்தை 
என  சம்சார  சக்கரத்தில்  ஏராளமான  சங்கிலிகள் 

இந்த  சாதாரண  வாழ்வை  சாமானியன்  வாழட்டும்
நாம்   இதிலிருந்து  கொஞ்சம்  மாறுபட்டவர்கள் 

ஆசை  ஆசையாய்  பழகிய  அத்தனை  
உறவுகளையும்  விட்டுவிட்டு  ஒருநாள்  

கூட்டைவிட்டுக்   குருவி  பறப்பது  போல்  
உடற்கூட்டை  விட்டு  ஆன்மா  பிரிகிறது 

எத்தனை  பேர்  விருப்பப்பட்டு  சாகிறார்கள் 
எத்தனை  பேர்  விருப்பப்படாமல்  சாவைத்  தடுத்துவிட்டார்கள் 

ஒருவருமில்லை 

எங்கிருந்து  வந்தோம் ! எங்கே  திரும்பி  போகிறோம் !
எதற்காக  வந்தோம் ! ஒன்றுக்கும்  பதிலில்லை.

ஆன்ம  தேடலில்  அத்தனைக்கும்  விடை கிடைக்கும் 
அதை  இந்த  பிறவியில்  இருந்து  துவக்குவோம் 

ஞானிகளும் , யோகிகளும் , சித்தர்களும் 
இந்த  புள்ளியிலிருந்து  தான்  புறப்பட்டார்கள் 

ஐயன்  வள்ளுவர்  பெருந்தகை  
"பிறவிப் பெருங்கடல்  நீந்துவர்  நீந்தார்
இறைவன்  அடி  சேரார்"  என்றார் 

வாழ்வைப்பற்றி  பேசும்போது  நம்மை மேம்படுத்தும் 
 யோக நிலையைப்  பற்றி  சொல்லவேண்டும் 

ஆன்ம  தேடலை  ஆரம்பிப்போம்  
நாம்  யாரென்ற கேள்விக்கு  பதில்  கிடைக்கும் 

--த .சத்தியமூர்த்தி  

Saturday, 11 September 2021

Puratchi kanal BHARATHI

புரட்சிக்   கனல் பாரதி   

இன்று   உங்கள்  நினைவு  நாள் 

உங்கள்  பெயரிலே  உள்ளது  எழுச்சித்தீ !
நீ  பறங்கியரைப்   பயமுறுத்திய  காட்டுத்தீ !
பாமரனை  தட்டியெழுப்பிய  வேள்வித்தீ !

பெண்  விடுதலைப்  பேசிய  புரட்சிப்புனல் 
கம்பீரமாய்  வலம்  வந்த  சுட்டெரிக்கும்  சூரியன் 

அச்சமில்லை,  அச்சமில்லை,  அச்சமென்பதில்லையே !
உச்சிமீது  வான்  இடிந்து  வீழுகின்ற  போதிலும் 
  அச்சமில்லை,  அச்சமில்லை, அச்சமென்பதில்லையே !

தமிழனை,  அவன்  உணர்வினை,   உசுப்பிவிட்டு
வெள்ளையனை  எதிர்க்க  அணி  திரட்டிய  
அற்புதப்   பாடல்   

சுதந்திர  கனலைப்  பற்றவைத்து  நாடுமுழுவதும் 
மக்களை  கிளர்த்தெழுந்து   போராட  
அழைப்பு  விடுத்த  அற்புத  கீதம் 

வாழ்நாள்  முழுவதும்  வறுமையில்  வாடியபோதும் ,

நாட்டுவிடுதனைக்காக  தன்னை  பற்ற  வைத்துக்கொண்ட 
மெழுகுவர்த்தி   

எட்டயபுரத்து  சீமானிடம்  அரசவைக்  கவிஞனாய்
வாழ்ந்திருந்தால்  வறுமையை  எட்டி  
உதைத்திருக்க  முடியும் 

தேசத்தைப்   பாடும்  பாரதியால்  தனி  மனித  துதி  
எப்படி  பாட  இயலும் ?

பாரதியின்  இறுதி  ஊர்வலத்தில்  வெறும்  11பேர் 
மட்டும்  கலந்துகொண்டார்கள்  என்ற  செய்தி  

தமிழனின்  நன்றி  உணர்ச்சிக்கு  
வரலாற்று  சான்றாய்  உள்ளது 

ஆங்கிலேயருக்கு  அந்நாளில்  பயந்தது  போல,
அதிகார  வர்க்கத்துக்கு  அடிமையாய்  
தமிழ்ச்சமூகம்  இன்றும்  கிடக்கிறது 

அச்சமில்லை,  அச்சமில்லை,  பாட்டு மட்டும்
தொடர்ந்து  ஒலித்துக்  கொண்டிருக்கிறது 

அச்சத்தோடு  தமிழ்ச்சமூகம்  வாய்பொத்திக்  
கிடக்கிறது 

மீண்டும்  ஒரு  பாரதி  வரும்  நாளைப்பார்த்து 

----த .சத்தியமூர்த்தி 









  






 



    










 


 

Saturday, 4 September 2021

Vaazhkai part-3

வாழ்க்கை -3 

வாழ்க்கை 
சிலருக்கு  இனிக்கிறது 
பலருக்கு  கசக்கிறது 

வாழ்க்கையின்  தேடலே 
வெறும்  பணத்தை  மையமாக  கொண்டுள்ளது 

அரசியலைக்  கற்றுத்தர, 
ஆன்மிகத்தை  வழிகாட்ட ,

உடல்நலத்தைப்   பேணிக்காக்க,
சேமிப்பை  வலியுறுத்த , 

ஒழுக்கத்தைச்   சொல்லித்தர , 
நற்பண்புகளை  வளர்த்துக்கொள்ள ,

நல்ல  நூல்களோடு  உறவாட ,
சமூகத்தை  பற்றி  சிந்திக்க 

 இப்படி 

வாழ்க்கையை  முழுமையாக்க  
ஏராளமான  காரணிகள்  உள்ளன 

ஆனால்  பணம்  என்ற  ஒற்றை மந்திரம் 
இதையெல்லாம் திரும்பி  பார்க்கக்கூட  
நம்மை  விடுவதில்லை .

அரசியல்  தெளிவு பெற 
நம்  சமூகத்தை  யாராலும்  ஏமாற்ற முடியாது 

ஆன்மீக  ஞானம்  வர 
நாம்  யாரென்ற  தெளிவு  வரும் 

சேமிப்பே  நம்மை  செல்வந்தனாக்கும் 

நற்பண்பும்  ஒழுக்கமும்  நம் 
உடலைப்   பலப்படுத்தும் 

நல்ல  நூல்களோ  நம்மை 
வெற்றியாளனாய்  வழிநடத்தும் 

வாழ்க்கையின்  மொத்த  பரிமானத்தையும் 
அனுபவித்து  ருசியுங்கள் 

வாழ்க்கையை  வாழ  ஆரம்பியுங்கள்  

--த .சத்தியமூர்த்தி 




Saturday, 28 August 2021

Vaazhkai part-2

 வாழ்க்கை -2

வாழ்க்கையின்  அடிச்சுவட்டை  ஆராய்ந்து  
பார்க்குங்கால்  வினோத  நிகழ்வுகள் தாராளம் 
விபரீத  நகர்வுகள்  ஏராளம் 

இல்லாதவனை  இகழ்வதும்,
  இருப்பவனைப்  புகழ்வதும், 
வறியோனை   வாட்டுவதும் ,
 வலுத்தவனை  கொழுத்தவனாக்குவதும்,

காசுக்காக  காவடி  எடுப்பதும்,
பல்லிளித்து  பல்லக்கு  தூக்குவதும்,  

எப்படியேனும்  வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டுமென  வெறிகொண்டு  அலைவதும், 

வாழ்க்கையே !!  நீ  விபரீதக்  கண்ணாடி -- அதன்
முன்னாடி  நின்று  பார்க்கும்போது  தான்  நம் 
முகமூடி  கிழிந்து  முழுவடிவம்  தெரியும்.    

இலட்சியத்தோடு  வாழ்பவனை, 
 கொள்கையோடு  நடப்பவனை, 
உண்மையோடு  இருப்பவனை,
 
உயிரோடு  இருக்கும்  காலம்  மட்டும் 
கண்டுகொள்ளாத உலகம் 

வரலாற்றில் அவன்  பெயரை 
பொன்னெழுத்தில்  பதிக்கும்
 
பிழைக்க  தெரியாதவன் என்று
பிதற்றுபவன்  எல்லாம் 

வாழும்  காலத்தில்  வசதியோடு  இருந்தாலும் 
மூச்சடங்கி  முடித்தபின்னே, 
கூட்டத்தில்  ஒருவராகி  காணாமல்  போயிடுவர். 

வாழ்க்கை  சொல்லித்தரும் 
அரிய  தத்துவம்  இதுவே !!

வாழும்  காலத்திற்கு பின்பும்  
வரலாற்றில் அழுத்தமாய் 
 நம்  பெயர்  பதிப்போம். 
 
வரலாற்றில் இடம்  பிடித்து  
சாதனை  படைப்போம். 

---த .சத்தியமூர்த்தி  

   










 




Saturday, 21 August 2021

Vaazhkai

வாழ்க்கை 

வாழ்க்கை    வாழ்வதற்கே 
வாழ்க்கை  சிலருக்கு  வசப்படும்  

வாழ்க்கை  பலருக்கு  போராட்டக்களம் 
வாழ்க்கை  சிலருக்கு  போதி மரம்

வாழ்க்கை  தினம்  தினம்  பாடம் புகட்டும்
வாழ்க்கையில்  வசந்தமும்  வீசும்
 
வாழ்க்கையில்  புயலும்  தாக்கும் 
வாழ்க்கை  வரலாற்றைப்  படைக்கும்
 
வாழ்க்கை  வசதி  வாய்ப்பைப்  பெருக்கும் 
வாழ்க்கை  வெற்றி  தோல்வியின்  கலவை 

வாழ்க்கை  திரும்பக்  கிடைக்காத  பொக்கிஷம் 
வாழ்க்கை  நீண்ட  தூரப்  பயணம்
 
வாழ்க்கை  வறண்ட  பாலையில்  தேனுற்று 
வாழ்க்கை  எப்போதும்  புது  புது  நம்பிக்கை
 
வாழ்க்கை  இயற்கை  அளித்த  நற்கொடை 
வாழ்க்கையின்   இலட்சியமே  பிறருக்கு  உதவுவதே 

வாழ்க்கையின்  வெற்றியே  மகிழ்வுடன்  வாழ்வதே 
வாழ்க்கையே  அழகான ஓவியம் 

வாழ்க்கையே  அன்பான  காவியம் 
எல்லோரையும்  நலமாக  வாழ வைத்து

நாமும்  ரசனையோடு  வாழ்வோம் 

-------------த .சத்தியமூர்த்தி 
   

Saturday, 7 August 2021

ezhathin parithaba nilai

ஈழத்தின்  பரிதாப  நிலை  

ஈழத்தமிழர்களின்  வழிபாட்டு தலங்கள்  மீதும் 
தொடர்  குண்டுகள்  வீசப்பட்டன 

தமிழரின்  யாழ்ப்பாண  நூலகம்  
தீ  வைத்து  எரிக்கப்பட்டது 

இரத்தக்  கறைப்படிந்த   பௌத்த  பிட்சுகளைப் 
பார்த்து  புத்தரின்  விழிகளில்  இரத்தம் வழிந்தது 

இந்தியாவில் தோன்றிய  புத்த  மதம்  நல்ல 
வேளையாக  நாடு  கடத்தப்பட்டது 

இறுதி  யுத்தம்  முடிந்து  ஆண்டு  பல  கடந்தும் 
இன்னும்  உரிமைக்  காற்றை  சுவாசிக்க  முடியவில்லை 

உலகமுழுவதும்   தமிழினம்  பரவி  இருந்தும் 
அதற்கென  சொந்தமாக ஒரு  நாடு  இல்லை 

அதன்  உரிமைக்கு  போராட  ஒரு  நாதியில்லை 

அதனால் தான்  அகதிகளாய்,  அடிமைகளாய், 
ஆங்காங்கே  அவதிப்படுகின்றோம் .

முகில்  கிழித்து  வெளிவரும்  முழுமதியை  போல்,
கடல்  கிழித்து  புறப்படும்  ஆயிரம்  சூரியன் போல்,

ஆர்ப்பரித்து  அணிவகுத்து  வரும்  கடலலையைப் போல்,
இனத்தைப்   பாதுகாக்க  தியாகத்தின்  திருவுருவமாய்
  
இன்னுயிரையும்  கொடையாய்  கொடுக்கவல்ல
மாசு  மருவற்ற  நம்  தலைவன்  மீண்டும்  தோன்றுவான் 

அவன்  தலைமையில்  தமிழினம்  கம்பீரமாய் 
வெற்றி  நடை  போடும் 

-----------------த .சத்தியமூர்த்தி 





 


 
 

       

Saturday, 31 July 2021

ezhathin enraiya nilai

 ஈழத்தின் இன்றைய  நிலை 

மீண்டும்  மீண்டும்  ஈழம்  பற்றிப்  பேச 
என்ன  இருக்கிறது ?

ஈழம்  முடிந்து  போன  கதையென்று  
சிங்களம்  கொக்கரிக்கிறது.

சொந்த  நாட்டு  மக்களையே  ரசாயன  குண்டு  போட்டு 
கொன்றக்   கொடுமை  ஈழத்தில்  நடந்தது 

ஏதோ  இலங்கையில்  என்றோ  நடந்தது 
என எண்ண  வேண்டாம் . 

இலங்கையைத்  தொடர்ந்து  இக்கொடுமை  
எங்கு  வேண்டுமானாலும்  நாளை  ஏற்படலாம் 

இன்னுமும்  ஐ .நாவில்  வெட்கமில்லாமல்  இலங்கையை 
மனசாட்சியற்ற  நாடுகள்  பாதுகாக்கிறது 

தமிழ்  மண்ணில்  சிங்கள  குடியேற்றம் 
வெற்றிகரமாய்  தொடர்கிறது 

நிலத்தை , வீட்டை ,தொழிலை ,உடைமையை 
எல்லாம்  இழந்து,  நடைபிணமாய்  தமிழினம் 

பயத்தில் , பதட்டத்தில் , நிம்மதியற்று 
கேட்பாரற்றுக்   கிடக்கிறது.

பக்கத்திலே  இருந்தும் , பரிதாபப்படும்  நிலையில்  தான் 
தமிழகம்  தலை  குனிந்து  நிற்கிறது .

தமிழத்தில்  உதித்த  சூரியன்  போல்  
தமிழீழத்திலும்  ஒருநாள்  விடியல்  உதிக்கும் 

கொல்லப்பட்ட  எம்  தமிழ்மக்கள்  விதையாய் விழுந்து
விருட்சமாய்  வளர்ந்து  வீரியத்தோடு  வருவார்கள் 

இலங்கையை  ஆண்ட  தமிழ்  வேந்தன்  இராவணனை  போல் ,
தமிழீழம்   ஆளும்  எழுச்சி  மிகு  தலைவனைக்  
காண  காலத்தோடு  சேர்ந்து  
நாமும் காத்திருப்போம்  

----த .சத்தியமூர்த்தி 

  











  





  

Wednesday, 28 July 2021

Penniyam Pesuvom part-4

பெண்ணியம்  பேசுவோம் -4 

ஆணுக்குப்   பெண்  அடிமை  
அடுப்படியில்  கிடப்பதே  பெண்ணுக்கு  பெருமை 

நாலு  சுவற்றுக்குள்  அடைபட்டுக்  கிடப்பதே  பெண்ணின்  நிலைமை 
பெண்ணுக்குக்   கல்வி  மறுப்பு 

 ஆணைச்சார்ந்தே  ஆயுளுக்கும்  கிடக்கவேண்டும் 
கணவன்  இறந்தால்  அவனோடு  உடன்கட்டை  ஏற வேண்டும்

பெண்ணுக்கு  சொத்துரிமை  கிடையாது 
பெண்ணுக்கென்று  தனிக்கருத்து  கூடாது 

விதவை  மறுமணம்  ஆச்சாரத்துக்கு  கேடு 
பருவமெய்து முன்னே  கொடிய  பால்ய விவாகம்

இப்படியெல்லாம்  கடந்த  காலத்தில் 
 கொழுப்பெடுத்த  ஆணினம்  
பெண்ணை  வீட்டிற்குள்  பூட்டி வைத்து
அடுக்கடுக்காய்  கொடுமை  செய்தது..

கீழ்  வான்  உதித்த  சூரியன்  போல்  
பாரதி  பெண்  விடுதலைப் பேசினான் 

பகுத்தறிவுப்  பகலவன்  தந்தை  பெரியாரும் 
பெண் விடுதலைக்கு  களம்  கண்டு  போராடினார் 

இராஜாராம்  மோகன் ராய்  எரியும்  நெருப்பிலே  
பெண்ணை  உயிரோடு  கொளுத்தும் கொடுமைக்கு
கடுமையான  சட்டம்  கொண்டுவந்து 
உடன்கட்டைக்கு  முற்றுப்புள்ளி  வைத்தார்..

சிறைப்பட்டுக்  கிடந்த பறவைக்  கூட்டை  திறந்ததும் 
தன்  சிறகை  விரித்து  வானில்  மகிழ்வுடன்  
வலம்   வருவது  போல்
 
அடைப்பட்டுக்கிடந்த  பெண்ணினம் 
கொஞ்சம்  கொஞ்சமாய்  விழிப்படைந்து 

கல்வியெனும்  அஸ்திரத்தைக்  கையில்  எடுத்து 
கம்பீரமாய்  உலா  வரத்துவங்கியது    

பெண்ணியம்  பேசப்படும்...

---த .சத்தியமூர்த்தி