ஈழத்தின் பரிதாப நிலை
ஈழத்தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும்
தொடர் குண்டுகள் வீசப்பட்டன
தமிழரின் யாழ்ப்பாண நூலகம்
தீ வைத்து எரிக்கப்பட்டது
இரத்தக் கறைப்படிந்த பௌத்த பிட்சுகளைப்
பார்த்து புத்தரின் விழிகளில் இரத்தம் வழிந்தது
இந்தியாவில் தோன்றிய புத்த மதம் நல்ல
வேளையாக நாடு கடத்தப்பட்டது
இறுதி யுத்தம் முடிந்து ஆண்டு பல கடந்தும்
இன்னும் உரிமைக் காற்றை சுவாசிக்க முடியவில்லை
உலகமுழுவதும் தமிழினம் பரவி இருந்தும்
அதற்கென சொந்தமாக ஒரு நாடு இல்லை
அதன் உரிமைக்கு போராட ஒரு நாதியில்லை
அதனால் தான் அகதிகளாய், அடிமைகளாய்,
ஆங்காங்கே அவதிப்படுகின்றோம் .
முகில் கிழித்து வெளிவரும் முழுமதியை போல்,
கடல் கிழித்து புறப்படும் ஆயிரம் சூரியன் போல்,
ஆர்ப்பரித்து அணிவகுத்து வரும் கடலலையைப் போல்,
இனத்தைப் பாதுகாக்க தியாகத்தின் திருவுருவமாய்
இன்னுயிரையும் கொடையாய் கொடுக்கவல்ல
மாசு மருவற்ற நம் தலைவன் மீண்டும் தோன்றுவான்
அவன் தலைமையில் தமிழினம் கம்பீரமாய்
வெற்றி நடை போடும்
-----------------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment