வாழ்க்கை
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை சிலருக்கு வசப்படும்
வாழ்க்கை பலருக்கு போராட்டக்களம்
வாழ்க்கை சிலருக்கு போதி மரம்
வாழ்க்கை தினம் தினம் பாடம் புகட்டும்
வாழ்க்கையில் வசந்தமும் வீசும்
வாழ்க்கையில் புயலும் தாக்கும்
வாழ்க்கை வரலாற்றைப் படைக்கும்
வாழ்க்கை வசதி வாய்ப்பைப் பெருக்கும்
வாழ்க்கை வெற்றி தோல்வியின் கலவை
வாழ்க்கை திரும்பக் கிடைக்காத பொக்கிஷம்
வாழ்க்கை நீண்ட தூரப் பயணம்
வாழ்க்கை வறண்ட பாலையில் தேனுற்று
வாழ்க்கை எப்போதும் புது புது நம்பிக்கை
வாழ்க்கை இயற்கை அளித்த நற்கொடை
வாழ்க்கையின் இலட்சியமே பிறருக்கு உதவுவதே
வாழ்க்கையின் வெற்றியே மகிழ்வுடன் வாழ்வதே
வாழ்க்கையே அழகான ஓவியம்
வாழ்க்கையே அன்பான காவியம்
எல்லோரையும் நலமாக வாழ வைத்து
நாமும் ரசனையோடு வாழ்வோம்
-------------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment