வாழ்க்கை -9
வாழ்க்கை ஒரு கொலு மண்டபம்
நம்மை பொம்மையாக்கி அழகு பார்க்கும்
வாழ்க்கை ஒரு பளிங்கு மண்டபம்
நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தும்
வாழ்க்கை ஒரு வசந்த மண்டபம்
தங்கி கொஞ்சம் இளைப்பாற வைக்கும்
வாழ்க்கை ஒரு பொது மண்டபம்
எல்லோருடைய நடிப்பும் தொடர்ந்து நடக்கும்
வாழ்க்கை ஒரு தியான மண்டபம்
புத்துணர்ச்சி தந்து பூபாளம் பாடும்
வாழ்க்கை ஒரு ஆயிரங்கால் மண்டபம்
ஒவ்வொன்றும் ஒரு கலையைக் கற்றுத் தரும்
வாழ்க்கை ஒரு கல் மண்டபம்
கரடு முரடான பாதைகளைக் கடக்கும்
வாழ்க்கை ஒரு முத்து மண்டபம்
கனவில் மிதந்து கற்பனையில் பறக்கும்
வாழ்க்கை ஒரு கல்யாண மண்டபம்
உறவுகளையெல்லாம் ஒரு சேர சேர்க்கும்
வாழ்க்கை ஒரு பட்டி மண்டபம்
கருத்துக்கள் மோதி தெளிவு பிறக்கும்
வாழ்க்கை ஒரு அர்த்த நாரீஸ்வரர் மண்டபம்
நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்
வாழ்க்கை ஒரு மண் பாண்டம்
காலம் முடிந்ததும் போட்டு உடைக்கும்
வாழ்க்கை ஒரு மணி மண்டபம்
வாழ்ந்த வாழ்க்கையைப் பறை சாற்றும்
வாழ்க்கை ஒரு அட்சயப்பாத்திரம்
முடிந்தவரை அள்ளி அள்ளிக் கொடுங்கள்
வறுமையை இல்லாது ஒழிக்க
நம் வாழ்க்கை பிரகாசமாகும்
----த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment