Saturday, 9 October 2021

Vaazhkai part-7

வாழ்க்கை -7

வாழ்க்கை   புஸ்வானம்  போன்றது 
பிரகாசத்துடன்  எரிந்து  சாம்பலாவது 

வாழ்க்கை  சங்குசக்கரம்  போன்றது 
நம்மைச்  சுற்றியோ  அல்லது  நம்மை  
சுற்றவைத்தோ  சட்டென்று  முடிப்பது 

வாழ்க்கை  கானல்  நீர்  போன்றது 
தூரத்துப்  பச்சையை  அதிகம்  நேசிப்பது 

வாழ்க்கையோடு  எதற்காகவும்  போராடலாம் 
ஆனால்  போராட்டமே  வாழ்க்கையாகக்   கூடாது 

மனம்  போனபடி  வாழ்வது  வாழ்க்கையாகாது 
கோடு  போட்டு  கொள்கையோடு  வாழ்வதே 
 வாழ்க்கையாகும் 

விட்டுக்   கொடுத்து  வாழ்பவன் வாழ்வு 
 கெட்டுப் போவதியில்லை 

ஒட்டு  மொத்தமாய்  ஆசைப்படுவதால் 
இலாபம்  ஏதுமில்லை  !

மலை  மீது  ஏறி  உச்சியைத்  தொட்டாலும் 
தரைக்கு  வர  கீழே  இறங்கி  வர  வேண்டும் 

வாழ்வின் இயல்பும்  இத்தகையதே !
 
உச்சாணிக்  கொம்பில்  உட்கார்ந்தவனையும் 
ஒருநாள்  உருட்டித்   தள்ளி  விடும் 

அடுத்தவர்  நலனைக்  காப்பவரைக்  
கோபுர  உச்சியில்  கொண்டு  போய்  சேர்த்து  விடும் 

கூடி  வாழ்வதே  கோடி  நன்மை 
கொடுத்து  வாழ்வதே  வள்ளல்  தன்மை 

ஊர்  மெச்ச  வாழ்வதே  வாழ்க்கை 
அதை  உண்மையோடு  வாழ்வதே  நேர்மை 

ஒன்று பட்டால்  உண்டு  வாழ்வு 
இதை  ஓங்கி  ஒலித்தால் ஏது  தாழ்வு !!

---த .சத்தியமூர்த்தி  

No comments:

Post a Comment