பெண்ணியம் பேசுவோம்-1
ஒரு பெண்ணின் கருவில் பிறந்து
பெண்களோடு இணைந்து வளர்ந்து
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டு
பெண்பிள்ளைகளை அடுத்தடுத்து பெற்றெடுத்து
பெண்களோடு சேர்ந்து பணியாற்றி
வாழ்நாள் முழுவதும் பெண்களோடு பயணிக்கும்
ஆணாதிக்கம் என்னும் வல்லாதிக்கத்தின் பிடியில்
பெண்குலம் படும் பாடு
அப்பப்பா !!! ----பெரும் பாடு..
இருபால் பிறப்புக்கும் இங்கே பொதுவாக பத்து மாதம்
இதில் ஆணை உயர்த்தி பெண்ணைத் தாழ்த்துவதேன் ??
ஆண் பிறந்தால் அமர்க்களம் அட்டகாசம் ஆரவாரம் ..
பெண் பிறந்தால் சோகம் ஏக்கம் பரிதாபம் ..
ஏன் இந்த மனோபாவம் ??
பெண் குழந்தையைக் குப்பையில் எறியும் கொடூரம்
தொடர்ந்து பெண்பிள்ளையைப் பெற்றதனால்
வாழ்வை தொலைத்த அபலைகள் ஏராளம்
குழந்தை பெண்ணாய் பிறக்க பெண் மட்டுமா காரணம் ??
எதை வைத்து ஆணுக்கு மறுமணம் செய்கிறீர் ??
மணமுடித்து கொஞ்சம் நாளானால்
குழந்தை பிறக்கவில்லையென்றாலும்
உடனே அங்கும் பெண் மீது தான் பழி ..
எல்லாவற்றுக்கும் பெண் மட்டுமா குற்றவாளி ??
பெண்ணியம் இன்னும் பேசப்படும் ..
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment