மானுடம் தரிப்போம் -5
ஏழைகளை ஆதரிக்கும் எண்ணம்
எல்லோருக்கும் வர வேண்டும்
வறியவர்க்கு கொடுப்பதை
வரமாகக் கருத வேண்டும்
பசியோடு யாரும் படுத்திடா வண்ணம்
அன்னமெனும் அமுதமளித்து
அரவணைக்க வேண்டும்
வடலூரில் வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த
அடுப்பு இன்றளவும் அணையாமல்
பாமரனின் பசிப்பிணியை அகற்றுகிறது
அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது
அரிதாக மானுடம் வெளிப்படுகிறது
வந்தாரை வாழவைக்கும் தமிழ் மண்ணில்
எம்மக்கள் எல்லோரும் கருணை உள்ளம்
படைத்தவர்கள் என்ற பண்பு நிலை
எய்த வேண்டும்
நம்மைக்காக்க இந்த சமூகம் உள்ளதென்று
நலிந்தோர்கள் நம்பிக்கையோடு
நடைபோட வேண்டும்
நமக்கென்ன என்று கடந்து போகாமல்
நம்மால் முடிந்ததை முனைப்போடு செய்வோம்
அடுத்தவர்க்கு இயன்றளவு உதவுவதை
வழக்கமாக்கிக் கொள்வோம்
காலப்போக்கில் அதுவே
பழக்கமாகிவிடும் ..
மானுடம் தரிப்போம்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment