பெண்ணியம் பேசுவோம்-8
பெண் தான் சக்தியின் இருப்பிடம்
பெண் தான் சமூகத்தின் காப்பகம்
பெண் தான் அன்பின் உறைவிடம்
பெண் தான் அழகின் கலை நயம்
பெண் தான் சேமிப்பின் பிறப்பிடம்
பெண் தான் செல்வத்தின் சிறப்பிடம்
பெண்ணை மகிழ்வுடன் வாழ வைத்தால்
ஒட்டு மொத்த சமூகத்தையும் வாழ வைப்பாள் ..
பெண்ணைப் படிக்க வைத்தால்
குடும்பத்தைத் தாங்கி நிற்பாள்
பெண்ணை அன்போடு அரவணைத்தால்
சமூகத்தில் இன்பத்தை பொங்க வைப்பாள்
பெண்ணை மதிப்போடு நடத்துவதால் நம்
தேசத்தின் பெருமை அகிலத்தில் உயரும் ..
பெண்ணின் உள்ளமோ கருணை பொழியும்
வற்றாத ஜீவநதி ..
பெண்ணின் ஆற்றலோ அளவிட முடியாத
சக்தி வாய்ந்த பேராற்றல்
ஆணுக்கு நிகராக அத்தனை வேலைகளையும்
பெண் சர்வ சாதாரணமாய் செய்து முடிப்பாள் ..
பெண்ணைக் கண்ணைக் காப்பது போல்
பொத்தி பொத்திக் காப்போம்..
மொத்தத்தில் பெண் என்பவள்
நம்மை வழி நடத்தும்
சக்தி வாய்ந்த வல்லமையே !!
வாழ்க பெண்கள் !!
புது வரலாறு படைத்து !!
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment