Saturday, 12 December 2020

Piriyaa Vidai part-3

பிரியா விடை -3

என்  பதில்  கேட்டு  கொஞ்சம்  இறங்கி  வந்த  கோதையவள் , 
புதிதாக  ஊருக்கு  வந்திருக்கும் 
தமிழாசிரியர்  மகள்  நான் .. என்று சொல்லிச்சென்றாள் 

எனைச்சுற்றி  ஓர்  தனிமை   சுழல்வதை  வெறுத்து 
நானும்  எழுந்து  மெல்ல  நடந்தேன் .. ஊர்  நோக்கி 

கவிபாடும்  பித்தன் , வேலை  வெட்டி  அற்றவன் , 
ஊரில்  உள்ளோர்  எனக்கு  வைத்த  செல்லப்  பெயர்கள் ..

ஊரின்  பெயரோ  பஞ்சவர்ணச்சோலை  
பெயரில்  தான்  சோலையே  தவிர 
 ஊரில்  தென்பட்டதோ 
எங்கும்  பஞ்சம்  தான் ...

ஊருக்கு  உணவளிக்கும்  விவசாய  குடிகள் 
கூலிவேலை  செய்து  வயிறு  பிழைக்கும் 
 கொடுமை நடந்தது.

மூன்று  வருடம்  தொடர்ந்து  மழை  பொய்த்ததால் 
நெல்  விளையும்  வயலெல்லாம்
  முட்புதராய்  மாறியது.

அதிகாரத்தில்  உள்ளோர்  அடுக்கடுக்காய்  
மரங்களை  வெட்டி  விட்டால் , 
மணலை  அள்ளி  விட்டால் ,

அவர்கள்  பை  வேண்டுமானால்   நிரம்பலாம்
மழை  எப்படி பெய்யும் ?

புயல்  வந்தால்  மட்டும்  தான் 
மழை  பெய்யும்  என்ற  
நிலைக்கு  நம்மை  தள்ளி  விட்டார்கள் ..

பிரியா விடை தொடரும் ...

--------த .சத்தியமூர்த்தி  

  

No comments:

Post a Comment