வாழ்க்கை -6
ஏராளமான கனவுகளோடு
துவக்குகிறோம் வாழ்க்கையை !!
தாயின் அணைப்பில் கொஞ்சம் ஆறுதல்
தந்தையின் பராமரிப்பில் வசதிகள்
வாழ்க்கை துணையின் வருகையால் வசந்தம்
மழலையின் தொடர்ச்சியால் குதூகலம்
மண்ணுக்கு தனியாக வந்து பிறந்தாலும்
உறவுகளின் சங்கமம் நம்மைச் சுற்றி சுழல்கிறது
உலகமென்னும் நாடக மேடையில் நாள்தோறும்
நம் வேடம் மட்டும் மாறிக் கொண்டேயிருக்கிறது
நமது தேவைகளும் கூடிக்கொண்டே செல்கிறது
பொருளீட்ட முனைவதிலே பொழுது போகிறது
ஓடி ஓடி களைத்து ,
வந்த வழி திரும்பிப்பார்த்தால்
நம் முன்னேற்றத்தை தடுக்க ஆங்காங்கே முட்புதர்கள்
நரை திரை விழுந்து,
நாடியது தளர்ந்து,
மூப்பு மெல்ல எட்டிப்பார்க்கும் போது
வெறும் பெருமூச்சு
எட்டிக்காயை விடக் கசப்பானது இங்கே
ஏழைகளின் வாழ்வு
தாராளமாய் தானம் செய்து எல்லோரையும்
வாழ வைப்போம்
அளவுக்கு அதிகமாய் ஆண்டவன் கொடுப்பதே
அடுத்தவருக்கு கொடுக்கத்தான்
வாழ்க்கைச் சக்கரத்தால் மேடு பள்ளம்
இல்லாத உலகைப் படைப்போம்
ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகமே--இந்த
தேசம் காணவேண்டிய சமூகமாகும்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment