பெண்ணியம் பேசுவோம் -4
ஆணுக்குப் பெண் அடிமை
அடுப்படியில் கிடப்பதே பெண்ணுக்கு பெருமை
நாலு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடப்பதே பெண்ணின் நிலைமை
பெண்ணுக்குக் கல்வி மறுப்பு
ஆணைச்சார்ந்தே ஆயுளுக்கும் கிடக்கவேண்டும்
கணவன் இறந்தால் அவனோடு உடன்கட்டை ஏற வேண்டும்
பெண்ணுக்கு சொத்துரிமை கிடையாது
பெண்ணுக்கென்று தனிக்கருத்து கூடாது
விதவை மறுமணம் ஆச்சாரத்துக்கு கேடு
பருவமெய்து முன்னே கொடிய பால்ய விவாகம்
இப்படியெல்லாம் கடந்த காலத்தில்
கொழுப்பெடுத்த ஆணினம்
பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்து
அடுக்கடுக்காய் கொடுமை செய்தது..
கீழ் வான் உதித்த சூரியன் போல்
பாரதி பெண் விடுதலைப் பேசினான்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும்
பெண் விடுதலைக்கு களம் கண்டு போராடினார்
இராஜாராம் மோகன் ராய் எரியும் நெருப்பிலே
பெண்ணை உயிரோடு கொளுத்தும் கொடுமைக்கு
கடுமையான சட்டம் கொண்டுவந்து
உடன்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..
சிறைப்பட்டுக் கிடந்த பறவைக் கூட்டை திறந்ததும்
தன் சிறகை விரித்து வானில் மகிழ்வுடன்
வலம் வருவது போல்
அடைப்பட்டுக்கிடந்த பெண்ணினம்
கொஞ்சம் கொஞ்சமாய் விழிப்படைந்து
கல்வியெனும் அஸ்திரத்தைக் கையில் எடுத்து
கம்பீரமாய் உலா வரத்துவங்கியது
பெண்ணியம் பேசப்படும்...
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment