வாழ்க்கை -3
வாழ்க்கை
சிலருக்கு இனிக்கிறது
பலருக்கு கசக்கிறது
வாழ்க்கையின் தேடலே
வெறும் பணத்தை மையமாக கொண்டுள்ளது
அரசியலைக் கற்றுத்தர,
ஆன்மிகத்தை வழிகாட்ட ,
உடல்நலத்தைப் பேணிக்காக்க,
சேமிப்பை வலியுறுத்த ,
ஒழுக்கத்தைச் சொல்லித்தர ,
நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள ,
நல்ல நூல்களோடு உறவாட ,
சமூகத்தை பற்றி சிந்திக்க
இப்படி
வாழ்க்கையை முழுமையாக்க
ஏராளமான காரணிகள் உள்ளன
ஆனால் பணம் என்ற ஒற்றை மந்திரம்
இதையெல்லாம் திரும்பி பார்க்கக்கூட
நம்மை விடுவதில்லை .
அரசியல் தெளிவு பெற
நம் சமூகத்தை யாராலும் ஏமாற்ற முடியாது
ஆன்மீக ஞானம் வர
நாம் யாரென்ற தெளிவு வரும்
சேமிப்பே நம்மை செல்வந்தனாக்கும்
நற்பண்பும் ஒழுக்கமும் நம்
உடலைப் பலப்படுத்தும்
நல்ல நூல்களோ நம்மை
வெற்றியாளனாய் வழிநடத்தும்
வாழ்க்கையின் மொத்த பரிமானத்தையும்
அனுபவித்து ருசியுங்கள்
வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment