நினைவில் நின்ற கதை-5
பூங்காவில் ஊஞ்சலில் அமர்ந்து ஊர்வசி ஆட
அவள் அழகில் சொக்கிப்போனேன்
நான் பார்ப்பதை அவளது உள்ளுணர்வு உணர்த்தியதாலோ
சட்டென அவளும் என்மேல் பார்வையைப் பதித்தாள்
அந்த பார்வையில் பலநாள் பழகியது போல்
கனிவும் பரிவும் இருந்தது
அந்தப் பார்வைக்குத் தான் எத்தனை மகிமை !!
கடைவீதியில் ஒருநாள், ஆலயத்தில் ஒருநாள்
கல்லூரி செல்லும் வழியில் ஒருநாள்
அடுத்தடுத்து சொல்லி வைத்தது போல
அவளும் நானும் பார்வையை மட்டும்
ரகசியமாய் பரிமாறிக் கொண்டோம்
அந்த பார்வையில் தான் எத்தனை எத்தனை ஆசைகள் !!
அந்த நாட்கள் தான் என் வாழ்வில் உண்மையிலே
மறக்க முடியாத பொன்னான காலம்
எத்தனை உற்சாகம், எப்போதும் சுறுசுறுப்பு ,
நடை, உடை , பாவனை எல்லாவற்றிலும்
அப்படி ஒரு அக்கறை
ஒரு பெண்ணை வெற்றிக் கொண்டதை உலகமே
என் கைக்குள் கிடைத்ததைப் போல் மகிழ்தேன்
வசதி வாய்ப்பு குறைந்திருந்தாலும்
மனதளவில் ராஜாவாக வலம் வந்தேன்
நாட்கள் நகர்ந்தது
உள்ளத்தில் உள்ளதை ஏனோ
வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை
சொல்லி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாள்
யதார்த்தத்தையும் உணரவில்லை - என்
நிலையையும் உயர்த்திக் கொள்ளவில்லை
அதன் விளைவு
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment