நாட்டு நடப்பு-4
ஒட்டிய வயிறோடும்
ஒடுங்கிய உடலோடும்
ஏங்கிய விழியோடும்
ஏழைகள் பிணியோடும்
பாதையின் ஓரத்தில்
பல காலம் கிடக்கின்றார்
யார் இதற்குப் பொறுப்பு ?
யார் இவர்களைப் பார்ப்பது ?
சமதர்ம சமுதாயம்
பொதுவுடைமை உபதேசம்
சோஷலிச சித்தாந்தம்
கம்யூனிஸ வேதாந்தம்
ஜனநாயக தத்துவமெல்லாம்
பேச்சளவில் இனிக்கிறது
எழுத்தளவில் இருக்கிறது
ஏட்டளவில் மணக்கிறது
முதலாளித்துவ மார்க்கம் மட்டும்
நாட்டளவில்
நடைமுறையில்
காணப்படுகிறது
இந்தியாவின் இருப்பு முழுதும்
இருபது பண முதலைகளிடம்
முடங்கிவிட்டது
தேர்தல் காலங்களில்
எல்லா கட்சிகளும்
இவர்களிடம் கையேந்துகிறது
தேர்தெடுக்கும் அரசாங்கம் பதிலுக்கு
பல சேவைகளையும்
சலுகைகளையும்
கொடுக்கிறது
இந்தியாவை மறைமுகமாய்
பண முதலைகளே
ஆள்கிறது
நாட்டு நடப்பு தொடரும் .....
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment