நாட்டு நடப்பு -7
இன்று இனிய தீபாவளி திருநாள்
இன்ப தீபப் பெருநாள்
அசுரனை அழித்து அமைதி
திரும்பிய பொன்னாள்
வறுமை ஒழிந்து வசந்தம் வீச
கட்டியம் கூறும் நன்னாள்
கடைக்கோடி மக்களும் கட்டாயம்
கொண்டாட வேண்டிய திருநாள்
இல்லாமை என்பது இல்லாது போக
இருப்பவர்கள் பகிர்ந்து கொடுக்க வேண்டிய பெருநாள்
ஏழ்மையை விரட்டி ஏற்றத்தை நோக்கி
சமூகம் பீடு நடை போட துவக்க நாள்
மனதில் தோன்றும் அசுர எண்ணங்களை
பொசுக்க வேண்டிய பொன்னாள்
அனைவரையும் சமமாய் மதித்து நடக்க
ஆரம்பமாகும் பெருநாள்
பசியோடு யாரும் படுத்திடாமல்
பார்த்து உதவ வேண்டிய திருநாள்
ஒற்றுமையோடு மக்கள் எல்லோரும்
ஒருங்கிணைந்து வாழத்துவங்கும் நன்னாள்
யாரும் யாரையும் ஏமாற்றாமல்
மனசாட்சியோடு வாழ ஆரம்பிக்கும் பெருநாள்
உழைப்பின் மூலம் உலகையாளும்
சூத்திரம் சொல்லும் திருநாள்
எம் மக்கள் எல்லோர்க்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
---த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment