நாட்டு நடப்பு --3
ஒரு ரூபாய் சாதனைக்கு
ஒன்பது ரூபாய் விளம்பரம்
கறை வேட்டிக் கட்டிக் கொண்டு
திரு வீதி ஊர்வளம்
ஆட்சி அலுவல்களில்
கட்சிக்காரன் தலையீடு
சுதந்திரமாய் முடிவெடுக்க முடியாமல்
அதிகாரிகளின் திண்டாட்டம்
அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சத்தை ஆரம்பித்து
அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள்
அரசியலில் வந்ததாலே
வசதி வாய்ப்புகள் பெறுகிப்போச்சு
எழுதப் படிக்க தெரியலேன்னாலும்
ஏழு தலைமுறைக்கு சொத்தாச்சி
பட்டிமன்ற விவாதங்கள்
பகட்டான விளம்பரங்கள்
வரவேற்பு வளையங்கள்
வான வேடிக்கைகள்
மக்களின் வரிப்பணம்
பல வழியில் பாழாச்சு
குலத்தொழிலை ஒழித்துக் கட்ட
போராடி வெற்றி பெற்றோர்
குலத்தொழிலில் விதி விலக்காய்
அரசியலை மட்டும் விட்டார்
வாரிசுவை உருவாக்கி
அரசியலில் வரவழைத்தார்
அதிகாரத்தில் அமர வைத்து
அலங்கரித்து அழகு பார்த்தார்
நாட்டு நடப்பு தொடரும் ...
------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment