பிரியா விடை -2
"சற்று முன்பு கேட்ட பாடல் நீ பாடியதோ ?
சாந்தமுடன் அவளை நோக்கி நான் கேட்டேன்
நாணமது முகத்திரையாய் வந்து விழ,
மின்னலது பார்வையென வந்து மோத,
தித்திக்கும் பாகாக வார்த்தை வந்து விழ,
அலட்சியமாய் எனைப்பார்த்து
அழகாக அவள் சொன்னாள்..
தெரிந்து கொண்டு என்ன பயன் ?
பாடலை ரசித்தீரா?
பாடலை பாடிய எனை ரசித்தீரா ?
தனிமையிலே, ஒருமையிலே வரும்
மயில் எந்தன் வழி மறித்து
மடமையாக கேள்வி வேறு
கேட்பது தான் தமிழ் பண்போ ?
நான் கேட்ட ஒரு கேள்விக்கு
அடுக்கடுக்காய் அடுத்தடுத்து பல
கேள்விகளைக் கேட்டு நின்றாள்
"தவறாக உனைப்பார்த்து நான் என்ன
கேட்டு விட்டேன்"
பாடலையும் ரசித்தேன்
பாடலுக்குரிய உன்னையும் ரசித்தேன்
உன் தமிழ் பண்பாட்டைக் கண்டு வியந்தேன்
"நானொன்றும் நீ நினைப்பது போல்
காமுகன் அல்ல ! கவிஞன்
அழகை ரசிக்க ஆண்டவனால்
அனுப்பப்பட்ட தூதன்
பிரியா விடை தொடரும்...
------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment