மானுடம் தரிப்போம் -3
முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவள்ளல்
மயிலுக்குப் போர்வை போத்திய பேகன்
அவ்வைக்கு ஆயுள்வளர்க்கும் அதிசய
நெல்லிக்கனி தந்த அதியமான்
தஞ்சமடைந்த புறாவுக்கு தன் தசையை
தானமாய் தந்த சிபி சக்கரவர்த்தி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
என பாடிய வள்ளல் பெருமான்
இவர்கள் எல்லோரும் நம்மைப்போல்
மானிடர் தான்..
ஆபத்து நேரத்தில் குருதியை
உவந்து தந்த கொடையாளர்கள்
இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த
இதயம் வாய்த்தது ?
அன்பு , கருணை , இரக்கம் இவை தான்
மனிதனின் உண்மை அடையாளம்
காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்கள்
சுயநலத்தால் சுத்தமாய் மொத்தமாய்
மாறிப்போனார்கள் ..
காலில் முள் குத்த கண் அழுவதைப் போல்
அடுத்தவர் நிலைக்கண்டு ஓடிச்சென்று
உதவும் உள்ளம் பெறுவோம்..
தன்னைக் கரைத்துக்கொண்டு
வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற
மெழுகினைப் போல்
நமக்காக மட்டும் வாழாமல்
சமூகத்திற்கும் சேர்த்து வாழ்வோம்
மனிதநேயம் வளர்த்து மக்கள்
ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்போம்..
மானுடம் தரிப்போம்
--த. சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment