பெண்ணியம் பேசுவோம் -7
பெண் தான் பேரன்போடு
குடும்பத்தை வழி நடத்தும்
கலங்கரை விளக்கம் ..
நிலவைக்காட்டி அன்னம் ஊட்டி ,
நித்தம் கண்ணை இமை காப்பது போல் ,
வாரியெடுத்து கொஞ்சி மகிழ்ந்து,
புதையலைப் போல எனை பொத்திக்காத்து ,
பசியெடுக்குமுன்னே பாலும் சோறும்
பிசைந்து ஊட்டி ,
தோளில் தூக்கி சுமந்து திரிந்து
தொட்டிலிட்டு தூங்கவைத்து ,
அலங்கரித்து தினம் அழகு பார்த்து ,
கண்ணேறு படாமல் காக்க மையிட்டு ,
வாஞ்சையோடு எனை வாரியெடுத்து
வாயார தினம் முத்தம் தந்து,
தத்தி தத்தி நடை பழக வைத்து,
தங்கமே ! பொன்னே ! என கட்டியணைத்து ,
தாயின் மடியில் நாம் கிடந்த நாளெல்லாம்
தரணியில் ராஜாவாக வலம் வந்த காலம் ..
தாயன்பு இறையன்பை விட மேலானது
தாயன்பு புனிதம் கலந்த மகத்துவமானது
பெண்ணின் உச்சமே தாய் தான்
தாயன்பை வணங்கி பெண்மையைப் போற்றுவோம் ..
பெண்ணின் பெருமையால் இந்த
தேசம் ஒளிரட்டும் ..
பெண்ணைப் போற்றி இந்த
தேசம் மிளிரட்டும் ..
பெண்ணியம் இன்னும் பேசப்படும் ..
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment