பெண்ணியம் பேசுவோம் -3
கேடு கெட்ட குடியாலே சீரழிந்த
குடும்பத்தின் எண்ணிக்கையோ ஏராளம்
எல்லா ஒழுக்கக் கேட்டிற்கும்
பிதாமகனாய் இருப்பது மது அரக்கனே !
ஜாதி , மதம் , இனம் , மொழி , கடந்து
சமரசம் உலாவும் இடமே டாஸ்மாக் தான்
அந்தி சாய்ந்தால் அத்தனை பேரும்
அணி திரள்வது டாஸ்மாக்கிலே ..
ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் குறை சொல்லவில்லை
ஒருசிலரின் வக்கிரப்புத்தியை எடுத்துச்சொல்கிறேன் ..
கஜானாவை நிரப்ப மாற்றுவழி தேடாமல் அரசே
நாடுமுழுதும் டாஸ்மாக்கைத் திறந்து வைத்து
தமிழரைத் தள்ளாட வைத்தார்கள் .
ஐந்தாண்டிற்கு ஒரு முறை ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுத்து
ஒவ்வொரு மாலையிலும் குடிமகனிடம் குறைந்தது
ஐநூறு ரூபாய் வசூலிக்கும்
செப்படி வித்தை வெற்றிகரமாய் தொடர்கிறது
சாராய ஆலை முதலைகளை அரசியலில் அதிகாரத்தில்
அமர வைத்ததால்
ஒரு தலைமுறையே அநியாயத்திற்கு
குடிக்கு அடிமையானது ..
வருங்காலத்தைத் தீர்மானிக்கும் இளைய சமூகமே
மதியை மயக்கும் மதுவுக்கு
அடிமை ஆகாதீர்கள் ..
பெண்ணியம் பேசப்படும்
---த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment