நாட்டு நடப்பு -6
தேர்தலின் முடிவை இனி பணமோ , ஜாதியோ
மதமோ முடிவு செய்யக்கூடாது - அதற்கு
குறைந்தது 70 - 75 சதவீதம் வாக்குப்பதிவை
நாடெங்கும் நடத்திக்காட்டுங்கள்
மக்களிடமிருந்து உண்மையான மக்களின்
பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்
இனி யாராலும் எங்களைப் பிரித்தாள்வதோ
விலைகொடுத்து வாங்குவதோ நடக்காது
என்று நடந்துக்காட்டுங்கள்
ஆதிக்க சக்திகளை வீழ்த்துவதற்கு ஆயுதமாக
உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்
உண்மையான ஜனநாயகம் இந்தியாவில் மலர்ந்ததென்று
உலகிற்கு உரத்தக்குரலில் எடுத்துச்சொல்லுகள்
வறுமைக்கு விடைகொடுத்து புது
வாழ்வுக்கு வழி காணுங்கள்
மாநில உரிமைக்குக் குரல் கொடுத்து
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
பரவட்டும் வெளிச்சமிங்கு மக்களின்
அறியாமை இருள் கிழித்து
ஒழியட்டும் முதலாளித்துவ
மனசாட்சியற்ற மார்க்கமிங்கு
தோன்றட்டும் மக்களிடையே
எழுச்சியென்னும் புது வெள்ளம்
நாட்டு நடப்பு தொடரும்...
-----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment