Saturday, 11 September 2021

Puratchi kanal BHARATHI

புரட்சிக்   கனல் பாரதி   

இன்று   உங்கள்  நினைவு  நாள் 

உங்கள்  பெயரிலே  உள்ளது  எழுச்சித்தீ !
நீ  பறங்கியரைப்   பயமுறுத்திய  காட்டுத்தீ !
பாமரனை  தட்டியெழுப்பிய  வேள்வித்தீ !

பெண்  விடுதலைப்  பேசிய  புரட்சிப்புனல் 
கம்பீரமாய்  வலம்  வந்த  சுட்டெரிக்கும்  சூரியன் 

அச்சமில்லை,  அச்சமில்லை,  அச்சமென்பதில்லையே !
உச்சிமீது  வான்  இடிந்து  வீழுகின்ற  போதிலும் 
  அச்சமில்லை,  அச்சமில்லை, அச்சமென்பதில்லையே !

தமிழனை,  அவன்  உணர்வினை,   உசுப்பிவிட்டு
வெள்ளையனை  எதிர்க்க  அணி  திரட்டிய  
அற்புதப்   பாடல்   

சுதந்திர  கனலைப்  பற்றவைத்து  நாடுமுழுவதும் 
மக்களை  கிளர்த்தெழுந்து   போராட  
அழைப்பு  விடுத்த  அற்புத  கீதம் 

வாழ்நாள்  முழுவதும்  வறுமையில்  வாடியபோதும் ,

நாட்டுவிடுதனைக்காக  தன்னை  பற்ற  வைத்துக்கொண்ட 
மெழுகுவர்த்தி   

எட்டயபுரத்து  சீமானிடம்  அரசவைக்  கவிஞனாய்
வாழ்ந்திருந்தால்  வறுமையை  எட்டி  
உதைத்திருக்க  முடியும் 

தேசத்தைப்   பாடும்  பாரதியால்  தனி  மனித  துதி  
எப்படி  பாட  இயலும் ?

பாரதியின்  இறுதி  ஊர்வலத்தில்  வெறும்  11பேர் 
மட்டும்  கலந்துகொண்டார்கள்  என்ற  செய்தி  

தமிழனின்  நன்றி  உணர்ச்சிக்கு  
வரலாற்று  சான்றாய்  உள்ளது 

ஆங்கிலேயருக்கு  அந்நாளில்  பயந்தது  போல,
அதிகார  வர்க்கத்துக்கு  அடிமையாய்  
தமிழ்ச்சமூகம்  இன்றும்  கிடக்கிறது 

அச்சமில்லை,  அச்சமில்லை,  பாட்டு மட்டும்
தொடர்ந்து  ஒலித்துக்  கொண்டிருக்கிறது 

அச்சத்தோடு  தமிழ்ச்சமூகம்  வாய்பொத்திக்  
கிடக்கிறது 

மீண்டும்  ஒரு  பாரதி  வரும்  நாளைப்பார்த்து 

----த .சத்தியமூர்த்தி 









  






 



    










 


 

No comments:

Post a Comment