நாட்டு நடப்பு -2
அனுபவ அறிவு இல்லை
ஆளுகின்ற திறமை இல்லை
விஷய ஞானம் ஏதுமில்லை
விளம்பரப் பிரிய முண்டு
திறமையான திட்டமில்லை
தில்லு முல்லுவுக்கு குறைவில்லை
பொது வாழ்வில் ஒழுக்கமில்லை
போர்ஜரிக்கு அளவுமில்லை
லட்சியத்திற்கு வெற்றியில்லை
லஞ்சத்துக்கு பஞ்சமில்லை
கொள்கைக்கு மதிப்பில்லை
கொள்ளைக்கு முடிவில்லை
புத்தன் பிறந்த மண்ணில் இன்னும்
புனிதம் வந்து கலக்கவில்லை
காந்தி கண்ட கனவு பல
காலம் சென்றும் மலரவில்லை
தேசியவாதி வேடம் போட்டும்
தேசம் பற்றி நினைவுமில்லை
வருங்கால தலைமுறையின்
வாழ்வுக்கு உத்திரவாதமில்லை
அடிப்படைக் கல்வி கூட
கிடைப்பதற்கு வசதியில்லை
பட்டுச்சட்டை போட்டு தினம்
பார்த்து மகிழும் ஆசையில்லை
ஒட்டுப் போட்ட சட்டை கூட
ஒரு சிலருக்குக் கிடைப்பதில்லை
விருந்து போல உணவுண்டு
செரிப்பதற்கு மருந்து உண்ணும்
மேட்டுக்குடி மக்களல்ல..
பசிப்பிணியைப் போக்கிக்கொள்ள
பழைய கஞ்சி கிடைத்தாலும்
அமுதமென கருதுகின்ற
தெருவோர பிரஜைகள்..
நாட்டு நடப்பு தொடரும் .....
------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment