நாட்டு நடப்பு -5
மதத்தாலே பிரிந்து நின்று
இனத்தாலே மாறுபட்டு
ஜாதிக்கொரு சங்கம் வைத்து
வீதிக்கொரு கூட்டம் போட்டு
நாளுக்கொரு போராட்டம்
நாடெங்கும் நடத்திக்கொண்டு
இந்தியாவின் ஒற்றுமையை
இமையமெனப் புகழ்வதுண்டு
ஒன்று பட்ட இந்தியாவென்பது
ஒருமித்த மனமுடைய மக்களின்
ஒற்றுமையை ஓங்கி உலகுக்கு பறைசாற்றுவதே
இனம்கடந்து , மொழிகடந்து , மதங்கடந்து
இதயத்தால் ஒன்று படும் பொன்னாலே
இந்தியாவின் வளர்ச்சிக்கி
வித்திடும் திருநாளாகும்
இராமன் ஆண்டால் என்ன ?
இராவணன் ஆண்டால் என்ன ?
என்று ஒரு தலைமுறை ஏமாந்தது போதும்
இளைய தலைமுறையே பட்டிதொட்டியெல்லாம் சென்று வாக்குப்பதிவின் அவசியத்தை உணர்த்துங்கள்
அனைவரும் வாக்களிப்பதின் மூலமாகத்தான்
வருங்கால தலைமுறையின் தலையெழுத்தை
மாற்றமுடியும்
அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு
அனைவரும் கட்டாயம் செல்லுங்கள்
அலட்சியமாய் இல்லாமல் ஆற்ற வேண்டிய
ஜனநாயக கடமையை தவறாமல் செய்யுங்கள்
நாட்டு நடப்பு தொடரும் ..
--------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment