மானுடம் தரிப்போம்-1
ஆயிரமாயிரம் ஜீவ ராசிகளில்
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
எத்தனை தவம் செய்து இருந்தால்
கிடைத்தற்கரிய இம் மானிடப் பிறப்பு கிட்டும்
விதை விழுந்து , முளைத்து , செடியாகி , மரமாகி
காய் தந்து , கனி தந்து ,இளைப்பாற இடம் தந்து
தான் பிறந்ததன் பயனை
செவ்வனே செய்தது ..
வானிலிருந்து விழும் மழைத்துளிகள் மக்கள்
தாகத்தைத் தீர்த்து , தன் வரவின்
மகத்துவத்தைப் பறைசாற்றியது ..
ஆடு , மாடு ,கோழி,பன்றி ,அத்தனையும்
மனிதனின் நாவிற்கு ருசியாகி
வயிற்றுக்குள் அடைப்பட்டுப் போனது ..
இயற்கையின் படைப்புக்களை அதன் அனுமதியின்றி
கிடைத்ததையெல்லாம் அனுபவிக்கும்
அதிகாரத்தை மனிதனுக்கு யார் தந்தது ?
சிரிக்கவும் , சிந்திக்கவும் , ஆற்றல் படைத்த
மனித இனம் இந்த பிரபஞ்சத்திற்கு
திருப்பி எதைக் கொடுத்தது ?
சக மனிதனின் சுக துக்கத்தைக் கண்டு கொள்ளாத
மனித மனம் பாறையாய் உறைந்து போனது ஏன் ?
புழுவை விட ஈனப்பிறவியா மானிடப்பிறவி
எதைக் கொண்டுவந்தாய்
இருப்பதையெல்லாம் இரும்புப்பெட்டிக்குள்
பூட்டி வைத்துவிட்டு
எதைக்கொண்டு செல்லப்போகிறாய் !
வாழ்வின் பயனை அறிந்திடு மானிடா..
மானுடம் தொடரும் ..
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment