பெண்ணியம் பேசுவோம் -6
பெண் சிறார்களைப் பச்சிளம் பருவத்தில் பாலியல்
வன்மம் செய்வது சமீபத்தில் அதிகமாய் தொடருது..
மானிடம் தொலைத்த மனசாட்சியால்
வக்கிரபுத்தி தலையெடுக்குது ..
பெண்ணாய் பிறந்ததால் இன்னும் எத்தனை
கொடுமைகளைத் தான் சந்திப்பது ..?
பெண் பிள்ளை பெற்றோர் வயிற்றில்
நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் ..
பொள்ளாச்சி போன்ற சம்பவங்களால்
வெட்கித்தலைகுனியும் அளவிற்கு தமிழகம் தள்ளப்பட்டது ..
வெட்கமில்லாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி
குற்றவாளிகளைத் தப்ப வைக்க முயல்கிறார்கள் ..
மனசாட்சியற்ற இக்கயவர்களை அரசியல்
அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் ..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில்
இரவும் பகலும்
பெண்களுக்கு இளைஞர்கள் பாதுகாப்பாய்
நின்றது போல ,
ஒவ்வொரு குடிமகனும் தன் குடும்பத்தைப் போல
அக்கம் பக்கத்தில் உள்ள பெண் பிள்ளைகளைப்
பேணிக் காக்க வேண்டும் ..
கடுமையான சட்டங்களைக் கொண்டு
இக்கயமையை ஒழிக்க வேண்டும்..
ஒழுக்கத்தை தன் உயிரினும் மேலாய்
போற்றக்கூடிய ஒப்பற்றக் குடி
நம் தமிழ் குடி ..
அதன் மான்பைக் காப்போம்..
பெண்ணியம் பேசப்படும் ...
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment