நினைவில் நின்ற கதை -2
என்னை முழுவதுமாக நனைத்த அலையை
செல்லமாக தட்டிக்கொடுத்து திருப்பியனுப்பினேன்
கற்புள்ள பெண்ணின் சொல்லுக்கு இயற்கை
கை கட்டி சேவகம் செய்யுமென்பதை ,
கண்ணகியின் வரலாற்றில் பூம்புகாரில் கண்டோம் .
நிலவோடும் கடலோடும் கொஞ்சி விளையாடும்
இப்பெண் கண்ணகியின் வழித்தோன்றலோ!!
பல்வேறு சிந்தனையிலிருந்து, விடுபட்ட நான்
வானில் மின்னல் தோன்றி மறைவதைப் போல்
அப்பெண் கடற்கரையில் காணாதது கண்டு திடுக்கிட்டேன்.
கரை முழுதும் தேடிய பின்பும் அவளைக் காணவில்லை
மத்தாப்பு போல் மனதில் மகிழ்ச்சியைப் பரப்பி
கொஞ்ச நேரம் எனை மயங்கச்செய்த அப்பெண்ணின்
சக்தியை என்னென்பேன் !!
தனிமை என்னை சூழ்வதை வெறுத்து வேகமாக
நடை போட்டேன் என் இருப்பிடம் நோக்கி
வானம் வரமாக தரும் மழையெனும் கொடையை ,
பெய்த பெருமழையின் பெரும்பகுதியை ,
வீணாகக் கடலில் கலக்க பார்த்து நிற்கிறோம் !
காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டி
தஞ்சையை நெற்களஞ்சியமாக்கினான்
"ஈடுஇணையற்ற மாமன்னன் கரிகாலன்"
வீட்டிற்கு ஒருவர் ஒன்று கூடி தங்கள் ஊரில்
உள்ள கண்மாயை , குளத்தை ,ஏரியை
நீர்நிலைகளை , தூர் வாரினாளே ஏராளமான
நீரைச் சேமிக்கலாம்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment