பிரியா விடை -4
முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞன் அந்த
ஊரிலேயே நான் ஒருவன் தான்
வேலைத் தேடி கிடைக்காமல் அலுப்போடு
ஊர் வந்து சேர்ந்தவன் ,
மீண்டும் வேலை தேடி , நகரம் செல்ல
புறப்பட்டப் போது தான்
தமிழாசிரியர் பெண்ணவளைச் சந்திக்கும்
வாய்ப்பு பெற்றேன்
தமிழாசியர் ஆசிரியர் பணியோடு மாலையில்
ராமாயணச் சொற்பொழிவை
பாராயணம் செய்துவந்தார்
தமிழ் சொல்லும் அழகு கேட்டு
கதையோடு ஒன்றிப்போனேன்
அவரோடு இலக்கியத்தைப்பற்றி
மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தேன்
தமிழறிஞர் என்ற காரணத்தால்
உயிராக மதித்தேன்
நான் எழுதும் கவிதைக்கெல்லாம்
மதிப்புரை எழுதும் அளவிற்கு
குருவாகப் பார்த்தேன்
அவர் வாயார பாராட்டிய போதெல்லாம்
மனமார மகிழ்தேன்
மகளை மணமுடித்து கொடுத்தவுடன்
தமிழாராச்சியில் முழுநேரம்
இறங்கப்போவதாக சொல்லக்கேட்டேன்
--இதற்கிடையில்
பூங்கவனம் கிராமத்திற்கு அதிகாரியாக
வேலைக்கிடைத்த மகிழ்ச்சியில்
தமிழாசிரியர் இல்லம் நோக்கி
அரசு ஆணையோடு புறப்பட்டேன் ...
பிரியா விடை தொடரும்
-----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment