Saturday, 18 September 2021

Vaazhkai part-4

 வாழ்க்கை -4

மழலையில்  தொடங்கி  மரணத்தில்  முடிகிறது 
பிரம்மனும்  அடுத்தடுத்து  பிறவி  
தந்து  கொண்டே  இருக்கிறான் 

சலிக்காமல்  பாமரனும்  மீண்டும்  மீண்டும் 
இறந்து  போகிறான் 

படிப்பு , வேலை,  திருமணம்,  குழந்தை , பேரக்குழந்தை 
என  சம்சார  சக்கரத்தில்  ஏராளமான  சங்கிலிகள் 

இந்த  சாதாரண  வாழ்வை  சாமானியன்  வாழட்டும்
நாம்   இதிலிருந்து  கொஞ்சம்  மாறுபட்டவர்கள் 

ஆசை  ஆசையாய்  பழகிய  அத்தனை  
உறவுகளையும்  விட்டுவிட்டு  ஒருநாள்  

கூட்டைவிட்டுக்   குருவி  பறப்பது  போல்  
உடற்கூட்டை  விட்டு  ஆன்மா  பிரிகிறது 

எத்தனை  பேர்  விருப்பப்பட்டு  சாகிறார்கள் 
எத்தனை  பேர்  விருப்பப்படாமல்  சாவைத்  தடுத்துவிட்டார்கள் 

ஒருவருமில்லை 

எங்கிருந்து  வந்தோம் ! எங்கே  திரும்பி  போகிறோம் !
எதற்காக  வந்தோம் ! ஒன்றுக்கும்  பதிலில்லை.

ஆன்ம  தேடலில்  அத்தனைக்கும்  விடை கிடைக்கும் 
அதை  இந்த  பிறவியில்  இருந்து  துவக்குவோம் 

ஞானிகளும் , யோகிகளும் , சித்தர்களும் 
இந்த  புள்ளியிலிருந்து  தான்  புறப்பட்டார்கள் 

ஐயன்  வள்ளுவர்  பெருந்தகை  
"பிறவிப் பெருங்கடல்  நீந்துவர்  நீந்தார்
இறைவன்  அடி  சேரார்"  என்றார் 

வாழ்வைப்பற்றி  பேசும்போது  நம்மை மேம்படுத்தும் 
 யோக நிலையைப்  பற்றி  சொல்லவேண்டும் 

ஆன்ம  தேடலை  ஆரம்பிப்போம்  
நாம்  யாரென்ற கேள்விக்கு  பதில்  கிடைக்கும் 

--த .சத்தியமூர்த்தி  

No comments:

Post a Comment