நினைவில் நின்ற கதை -3
மழை நீரைச் சேமிக்க தடுப்பணைகள் எனது ஊரில் இல்லை.
வானம் பார்த்த பூமியாக நிலம் வறண்டு போனது.
ஊருக்கே உணவளிக்கும் விவசாயக் குடியில் பிறந்த
நான் , வயிற்றுப்பிழைப்புக்காக பட்டணம் வந்த போது தான்,
கடற்கரையில் அப்பேரழகியைக் கண்டேன்
பட்டணத்தின் வனப்பு பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது
கல்லுரியில் படிக்கும் காலம் தொட்டு கவிதையின் மீது
ஏற்பட்ட காதல் என்னை கவிஞனாக மாற்றி இருந்தது .
நான் கற்ற தமிழ் ஒரு பதிப்பகத்தில் சிறிய வேலையில்
குறைந்த வருவாயில் எனைக் கொண்டு போய் சேர்த்தது,
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்
கண்ணனின் வாக்கு கீதையிலே.
அந்த மார்கழி மாதத்து பூபாளம் பாடும்
அழகிய ஒரு விடியற்காலை.
குதிரைகள் பூட்டிய தேரேறி, அவனியெங்கும்
ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சுவதற்காக ,
கதிரவன் தன் கடமையைக் கச்சிதமாக செய்வதற்கு
விரைந்து வருகிறான் வானில் .
இனி இங்கு இருக்க இடமில்லையென
இருள் விடை பெற்றுச் சென்றது
பயிர்களை வாழ வைத்து அதன் மூலம்
உயிர்களை வாழ வைக்கும் உத்தமனே சூரியன்
என் மனம் என்றுமில்லாமல் ஒரு வித மகிழ்ச்சியோடு
விடிந்த பொழுதை வரவேற்றது.
---த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment