பெண்ணியம் பேசுவோம் -2
பெண் தான் குடும்பத்தை ஒருங்கிணைப்பவள்
பெண் தான் குடும்பத்தை அரவணைப்பவள்
பெண் தான் குடும்பத்தின் குத்து விளக்கு
பெண் தான் குடும்பத்தின் அச்சாணி
பெண் தான் குடும்பத்தின் ஆணிவேர்
பெண் தான் குடும்பத்தின் ஒட்டு மொத்த பலமே !
புகார் பட்டிணத்திலும், குமரிக்கண்டத்திலும்
கோலோச்சி நாகரிகத்தின் உச்சியிலே நின்ற
உலகத்தில் தோன்றிய முதல் குடியாம்
மூத்தக் குடியாம் எம் தமிழ்
குடிமக்களுள் பலர் மதியிழந்து மதுவுக்கு
அடிமையாகி குடும்பத்தைத் தவிக்க விட்டார்கள்
ஆலையில் அகப்பட்ட கரும்பு போல்
அனலில் மிதிப்பட்ட புழு போல்
குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல்
பொத்தி பொத்தி வளர்த்த பெண்களெல்லாம்
இக்கயவர்கள் கையில் சிக்கி
சின்னா பின்னமானார்கள்
ஒரு நாளெல்லாம் ஓடாய் உழைத்து
ஈட்டிய பொருளின் பெரும்பகுதியை
ஒரு நான்கு நிமிடத்தில் டாஸ்மாக்கில்
கொண்டு போய் கொட்டி
குடும்பத்தை வறுமையின் பிடியில்
சிக்க வைத்தார்கள்
தாமும் உழைத்தால் மட்டுமே தள்ளாடும்
தன் குடும்பத்தைக் கரையேற்ற
கூலி வேலைக்கும் தயாரானார்கள்
நம் தாய்மார்கள்.. .
பெண்ணியம் பேசப்படும் ...
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment