மானுடம் தரிப்போம்-6
அடிபட்டு காகம் ஒன்று விழுந்துக் கிடக்க
கூட்டமாய் காகங்கள் கரைந்து நின்று
வட்டமாய் பாதுகாப்பு வளையம் அமைக்கிறது
வீதியில் அடிபட்டு துடித்து ஒருவன் கிடக்க
ஆளாளுக்கு கைப்பேசி மூலம் படமெடுத்து
பரப்பும் அநாகரீகம் மனித வக்கிரத்தின் உச்சம்
பகலில் சூரியனும் , இரவில் வெண்ணிலவும் , நட்சத்திரங்களும்
மனிதனின் நடத்தையைக் கண்காணிக்கிறது
அதனால் இருட்டில் செய்யும் தவறு கூட
அரங்கத்தில் அம்பலத்தில் அரங்கேறுகிறது
நிழல் கூட நம்மை விட்டு விலகலாம் - ஆனால்
நாம் செய்யும் பாவம் ஒருபோதும் விலகுவதில்லை
மானுடம் மட்டும் தான் மனிதனை
இப்பிறப்பிலிருந்து கரையேற்ற உதவும்
உறக்கத்தில் சுகம் காணும்
உடல் விழிப்பதற்கு முன்பே
மனமே நீ விழித்துக்கொள் !!
மண்ணில் வந்த நோக்கம் எதுவென்று
நீ தெரிந்து கொள் !!
மரம் , செடி , கொடி , போல்
மற்றவர்க்கு உதவும் கலையைக் கற்றுக்கொள்
பூரண நிலவு போல் உன் முகம் பிரகாசிக்க
உதவும் பண்பை உனதாக்கிக்கொள்
வாழ்ந்த பிறகும் வரலாற்றை சொந்தமாக்க
வாழும் போது வள்ளலாய் வாழக்கற்றுக்கொள்
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment