மானுடம் தரிப்போம் -4
கல்லுக்குள் ஈரம் கசிவது போல்
நெஞ்சிக்குள் கருணை பிறந்தால்
அன்பு பிரகாசிக்கும்
இயற்கையின் படைப்புகள் எல்லாம்
இன்றளவும் தன் தன்மை மாறாமல் உள்ளது
உள்ளதையெல்லாம் அள்ளித்தந்து
எல்லோர்க்கும் பொதுவில் உள்ளது
மனித மனம் மட்டும் தான் காலப்போக்கில்
தன் சுயம்புவை விட்டுவிட்டு
ஒன்றையொன்று ஏய்க்கப்பார்க்கிறது
அகப்பட்டதையெல்லாம் சுருட்டிக்கொண்டு
ஆணவத்தின் உச்சியிலே அகம்பாவம் கொண்டு
அடுத்தவரை வஞ்சித்து அவசர கதியிலே
ஆளவட்டம் போடுகிறது
மாடமாளிகைகள் கூடகோபுரங்கள்
வான்முட்டும் அளவில் கட்டிமுடித்தது
வகை வகையாய் அறுசுவை உணவை
அடுக்கிவைத்து ருசித்துப பார்த்து உடல் கொழுத்தது
எதையும் யாரோடும் பகிர்ந்து கொள்வதில்லையென
சத்தியம் செய்து
எல்லாம் எனக்கேயென பூட்டிவைத்தது
தன் உயிரைமட்டும் பூட்டத்தெரியாமல்
கூடுவிட்டு ஆவி பிரிந்தபோது
சேர்த்தப்பொருள் எல்லாம் வாய்விட்டு சிரித்தது
வாழ்ந்த நாளில் ஒரு நாள் கூட
தர்மம் செய்யாமல் கருமியாய் வாழ்ந்ததால்
பாவி ஒருவன் மடிந்தான் என்னும்
பழிச்சொல்லோடு வாழ்வு முடிந்தது ..
மானுடம் தரிப்போம் ..
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment