Sunday, 25 December 2022

Kalvi

  கல்வி

கேடில்  விழுச்செல்வம்  கல்வி  ஒருவர்க்கு
 
கற்க  கசடற  கற்றவை  - கற்றபின் 
நிற்க  அதற்குத் தக - வள்ளுவன்  வாக்கு 

அன்னசத்திரம்  ஆயிரம்  அமைத்தல் 
ஆண்டவனுக்கு  ஆலையம்  கட்டுதல் 

பொதுவிடத்தில்  குளம்  வெட்டுதல்  
எல்லாவற்றிக்கும்  மேலாய்  

ஆங்கோர் ஏழைக்கு  கல்வி  கற்கச்  செய்வதே 
அனைத்திலும்  சாலச்சிறந்தது 

பொன்  படைத்தோர்க்கு  வாழும்  இடம்  சிறப்பு 
கற்றவர்க்கு  செல்லுமிடமெல்லாம்  சிறப்பு 

  கல்வி  மனிதர்க்கு  கண்களுக்கு  ஒப்பானது 
  கல்வி தான்  மானுடத்தை  உயர்ந்த  நிலைக்கு  செதுக்குகிறது 

கல்வி தான்  வறுமைக்கு  விடை  கொடுக்கிறது 
  கல்வி தான்  நம்பிக்கையோடு  நம்மை  வாழ  வைக்கிறது 

  கல்வி அறிவை  வளர்த்து , ஆற்றலைப்  பெருக்குகிறது ,
கல்வி  தான்  சமூகத்தைக்  கட்டியெழுப்பும்   தூண்களாகும் 

பள்ளிக்கூடங்கள்  அமைத்து  , மதிய  உணவும்  அளித்து ,
சீருடைத்  தந்து,  மாணவர்களைச்   சரிசமமாக்கி 

கல்விக்குக்  கண்  திறந்த  பெருந்தலைவர்  காமராசரை 
இக்கணத்தில்  நன்றியோடு நினைத்துப்  பார்ப்போம் 

வாசிப்பை  நேசிப்பவன் வாழ்வு  வசந்தமாகும் 
நல்ல  நல்ல  நூல்களெல்லாம்  நன்னெறிக்கு  வழிகாட்டும்     

அனுபவம்  கூட  அன்றாடம்  படிக்கும்  பாடமாகும் 
படிப்பறிவும் , பட்டறிவும்  பட்டைத்  தீட்டிக்கொள்ளவேண்டும்  

எழுத்தறிவித்தவன்  இறைவனாவான்  
மக்களின்  தலையெழுத்தை  மாற்றுபவனே 
 மாபெரும்  தலைவனாவான்

அறிவார்ந்த  சமூகம் அமைத்து  அனைவரையும்  பாதுகாப்போம் 

--த .சத்தியமூர்த்தி   

Saturday, 17 December 2022

Porumai

பொறுமை 

பொறுத்தார்  பூமி  ஆள்வார் 
பொறார்  காடு  கொள்வார் 

பொறுமை  கடலினும்  பெரிது 
பொறுமையே  எல்லோருக்கும்  பெருமை 

அமைதியின்  உச்சமே  பொறுமை 
அகிம்சையின்  வெள்ளமே  பொறுமை 

மழலைக்காக  தாய்  பத்துமாதம்  தவமிருப்பது  பொறுமை 

தவழ, நடக்க, ஓட , பேச , எழுத , கற்க  
எல்லாவற்றிற்கும்  தேவை பொறுமை 

வேலை  தேடி  அலைபவர்க்கு , நிச்சயம்  தேவை பொறுமை 
வேண்டியதெல்லாம்  கிடைப்பதற்கு  தேவை பொறுமை 

காதலிக்காக  காலமெல்லாம்  காத்திருப்பது  பொறுமை 
மனைவியை  மகிழ்ச்சியுடன்  வாழவைக்க  தேவை பொறுமை 

அதிகாரத்தில்  இருப்பவர்க்கு , அவசியம்  தேவை பொறுமை 
மக்களுக்கான  உரிமையை  மீட்டெடுக்க  காலம்  தந்த  கொடையே  பொறுமை 

சண்டை  , சச்சரவின்றி  நம்மை  வாழவைப்பதும் பொறுமை 
சமாதானத்தை  நிலைநாட்டும்  அட்சயப்பாத்திரமே  பொறுமை 

பொறுமையென்னும்  நகையணிந்து  பெண்கள்  
பெருமை கொள்ளவேண்டும் 

அவ்வையின்  அமுத வாக்கை  தெய்வவாக்காக கொள்ளவேண்டும் 

தனிமனிதனின்  பொறுமை  சமூகத்தை  உயர்த்தும் 
சமூகத்தின்  பொறுமை  தேசத்தை  உயர்த்தும்  

மக்களுக்கான  தலைவனை அடையாளம்  காண  தேவை பொறுமை 

   மானம் , வீரம்,  நிறைந்த தமிழ்  சமுதாயத்தின்  
அடையாளமே  தமிழ்க்  குடியின்  பொறுமை 

சகிப்புத்தன்மையும் , நம்பிக்கையும் , பொறுமையும், 
  வெற்றியின்  சின்னங்களாகும் 

பொறுமையைப்  பேணி  பெருமை  கொள்வோம் 

---த .சத்தியமூர்த்தி 

  

Sunday, 4 December 2022

Paadam

பாடம்  

அடிமைகளாய் கிடந்த  மக்களை  ஒன்று  திரட்டி ,
விடுதலைக்கு  வித்திட  வீரர்களாய்  மாற்றியது  ஒரு  பாடம் 

பசியால்  வாடும்  பாமரருக்கும்  அவர் தம் பசிப்பிணி 
போக்கி  வாட்டம்  தீர்ப்பது  ஒரு  பாடம் 

மக்களுக்கான  அரசாங்கத்தை  மக்களே  தீர்மானிக்கும் 
ஜனநாயகம்  கற்றுத் தந்தது   ஒரு  பாடம் 

ஊர்  கூடி  இழுக்க  தேர்  நகரும் - அது  போல 
ஒற்றுமையே  நம்மை  உயர்த்தும்  என்பதும்  ஒரு  பாடம் 

மதமெனும்  மாயை  விடுபட  விடுபட  இந்த  
மானுடம்  உயரும்  என்பது  ஒரு  பாடம் 

ஜாதியின்  பேரால்  தமிழினம்  பிரிந்து  கிடப்பதால் 
தன்னிலை  மறந்து  தாழ்ந்து  கிடப்பது  ஒரு  பாடம் 

ஆதியிலிருந்த  பெருமைகளையெல்லாம்  பாதியிலே  
தொலைத்ததனால்  அடிமைப்பட்டு  கிடப்பது  ஒரு  பாடம் 

மதுவுக்கு  அடிமையாகி  ,மதியை  இழந்ததால் 
தொழிலிலிருந்து  தமிழரை  அப்புறப்படுத்தியது  ஒரு  பாடம் 

வந்தரையெல்லாம்  வாழவைத்து , கொழுக்க வைத்து 
வாடி  வதங்கி  தமிழர்கள் கிடப்பதும் ஒரு  பாடம் 

பணத்தை  வாங்கிக்கொண்டு , வாக்கை  செலுத்தி விட்டு
காலமெல்லாம்  கஷ்டப்படுவதும்  ஒரு  பாடம் 

அனுபவம்  சொல்லித்  தந்த  அத்தனை  பாடத்தையும் 
அனுபவித்தப்  பின்னும்  தமிழினம்  தலையெடுப்பது  எக்காலம் ?

மண்ணுக்கான  தலைவனை  மக்கள்  அடையாளங்காண்பது 
எக்காலம் ?

அது தான்  தமிழர்களின்  பொற்காலம் ..

-த .சத்தியமூர்த்தி  

Sunday, 20 November 2022

Madham

மதம்  

மதமெனும்  பேய்  எனைப்  பிடியாதிருக்க வேண்டும் 
வள்ளலார்  வாக்கு  - ஆம் 

மதம்  தான்  மனிதனைப்  பிளவுபடுத்துகிறது 
மதம் தான்  மனிதனை  மிருகமாக்குகிறது 

மதத்தை  கொண்டு வந்து அரசியலோடு  கலப்பதால் 
மானுடம்  தன்னைத்  தாழ்த்திக்கொள்கிறது 

சகிப்புத்தன்மையும் , பொறுமையும்  தான்  
நம்மைக்  காப்பாற்றும்  பெருந்தன்மையாகும்

மதத்தை  வைத்து  நம்மை  பிரித்தாளும்  
சூழ்ச்சிக்கு  யாரும்  இடம்  தராதீர் 

மதத்தை  வைத்து  கலவரம்  செய்வதும் ,
மதமாற்றம்  செய்வதும்  சட்டப்படி  தடுக்க  வேண்டும் 

ஜாதி , மத பேதங்கடந்து  மக்கள்  வாழும் வரையில்  தான் 
அமைதி  தவழும்  தேசமாய்  பாரதம்  திகழும் 

மதவாத  அரசியலை  புறந்தள்ள  வேண்டும் 
மதசார்பற்ற ஜனநாயக  சக்திகளை  வலுப்படுத்தவேண்டும் 

எல்லா  மதமும்  அன்பைத் தான்  போதிக்கிறது 
அரசியல் தான் மதத்தில் விஷத்தைக்  கலக்கிறது 

ஆண்டவனை  நேசிப்பதை  விட  அடுத்த  
வீட்டுக்காரன்  நலனை  நேசிப்பதே  உத்தம  தர்மம் 

நாயன்மாரும்  , ஆழ்வாரும்  ,சித்தர்களும்  அவதரித்த  தேசம் 

பகைவர்க்கும்  அருள்வாய்  நன்னெஞ்சே  - பாரதி வாக்கு  

தீமை செய்தவர்க்கும்  அவர்  நாண  
நன்மை  செய்வோம்  - வள்ளுவன்  வாக்கு 

வாடிய பயிரைக்  கண்ட  போதெல்லாம் 
வாடினேன் - வள்ளலார்  வாக்கு 

  சமத்துவம்  , சகோதரத்துவம்  , சகிப்புத்தன்மை 
இவை தான்-  இஸ்லாத்தின்  உயிர்  நாடி 

உன்னை  நீ  நேசிப்பது  போல  பிறரையும்  
நேசிக்கக்  கற்றுகொள் - பைபிள்

இவையெல்லாம்  தான்  நமது  இயல்பு 

இந்தியா  இன்னமும்  மதசார்பற்ற  நாடு 
இந்தியர்கள்  அனைவருக்கும்  உரிமையுள்ள  நாடு  

வாழ்க  நம்  பாரதம்  !
வெல்க  நம்  பாரதம் !

---த .சத்தியமூர்த்தி       

Sunday, 30 October 2022

Ena Unarvu

 இன  உணர்வு 

இலங்கையில்  தமிழினம்  கொன்று  அழித்தபோது  
இன  உணர்வு  அற்று  கிடந்தோம்  

தமிழக  மீனவர்கள்  தொடர்ந்து  தாக்கப்படும்போதும் 
அமைதி  காத்தோம் 

சமீபத்தில்  தமிழக  மாணவர்கள்  ஆந்திராவில்  சுங்கச்சாவடியில் 
பயங்கர  ஆயுதங்களால்  கொடுமையாக  தாக்கப்பட்டார்கள் 

இதைக் கண்டித்து  அரசு  சார்பில்  ஒரு  குரலும்  ஒலிக்கவில்லை 
ஏனிந்த    இழிநிலை ?

ஜாதிப்பற்று  மிகுந்து , ஜாதிசங்ககள்  அமைத்து  
தமிழர்கள்  பிரிந்துக்  கிடைப்பதால், 

இனப்பற்று  இம்மியளவும்  இல்லாமல்  போனதால் ,
மொழியால்  நாம்  எல்லோரும்  தமிழர்  என  உணராததால்,

பிரித்தாளும்  சூழ்ச்சிக்கு  இரையாகிப்  போனதால்,
ஆரியமும் , திராவிடமும்  சேர்ந்து  நம்மை  ஏமாற்றியதால், 

நம்மால்  நம்மை  காப்பாற்றிக்கொள்ள  முடியவில்லை !!

நமக்காக  குரல்  கொடுக்கும்  அரசு  இங்கு  அமையும் வரை 
நமக்கு  இதுதான்  தொடரும்  

மொழிப்பற்றையும்  இனப்பற்றையும்  இரு  விழியாக  கொள்வோம் 

ஜாதி , மதங்கடந்து  தமிழர்கள்  அனைவரும்  ஓரணியில் 
அணி  திரள  வேண்டும்  

தெலுங்கர் , கன்னடர் , மலையாளர் , இவர்களைப்  பார்த்தாவது 
தமிழர்களே !! இன  உணர்வு  கொள்ளுங்கள் 

கடல் கடந்து  ஆட்சி  செய்த  தமிழினம்  
இனியாவது  விழித்துக்கொள்ளுமா ?

தனக்கான  தலைவனை  சரியாக  தேர்தெடுக்குமா ?

---த .சத்தியமூர்த்தி 



Sunday, 16 October 2022

Ponniyin Selvan

 பொன்னியின்  செல்வன் 

புலிக்கொடி பறந்து,  புயலென  புறப்பட்டு,  சீறிவரும்
அலை மீதே , சிங்கமென  கடற்படை  நடத்தி , 

இலங்கை,  தென்கிழக்கு ஆசியாவையே  தன்  வசப்படுத்தி ,
அகண்ட  பேரரசை  அமைத்த , ஈடு  இணையற்ற  

ஒப்பற்ற  ஒரே  இந்தியப்  பேரரசு  
"சோழ  சாம்ராஜ்ய  பேரரசு"     

சோழ நாடு  சோறுடைத்து  
கங்கை  கொண்டான்  
கடாரம்  கொண்டான் 
இவையெல்லாம்  சோழனின்  பெருமைக்கு  சான்று 

கல்லணை  அமைத்து,  நீர்  மேலாண்மையைப்  படைத்தது ,
காவிரி  டெல்டா பகுதியில்  விவசாயத்தில்  புரட்சி  செய்து  ,

அனைவருக்கும்  உணவளித்த  மாபெரும்  அரசே  
சோழப்   பேரரசு!!

தமிழனின்  பெருமையை  தரணிக்கு  எடுத்துச்சொல்ல  
தஞ்சைப்  பெரிய  கோயிலை  பிரம்மாண்டமாய்  வடிவமைத்து,  

கட்டுமானத்துறையில்  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே  
மாபெரும்  சரித்திரம்  படைத்தது  சோழப்  பேரரசு!!

மாவீரன்  இராஜராஜசோழன், மாவீரன்  இராஜேந்திரசோழன், 
இவர்களின்  வரிசையில்  மாவீரம்  மேதகு  பிரபாகரன் ,

இவர்களெல்லாம்  தமிழனின்  மாண்பை  உயர்த்திப்பிடித்த  
வணக்கத்துக்குரியவர்கள்

சேர , சோழ , பாண்டிய  மூவேந்தர்களும்  
ஆண்ட  காலமே  தமிழகத்தின்  பொற்காலம்   

தலைப்பையொட்டி  சொன்ன  செய்தி  கொஞ்சம்தான்
 
தமிழனின்  உண்மை  வரலாற்றை,  இளைய  சமூகம்
முழுமையாய்  கற்றுத்   தெளிந்திட  வேண்டும்.

வீரம்  ,மானம்,  ஈகை , இன  உணர்வு  நிறைந்த 
தமிழ்  சமுதாயம்  உருவாக  உண்மையாக  பாடுபடுவோம்  

----த .சத்தியமூர்த்தி
   

Sunday, 2 October 2022

Gandhi Jayanthi

காந்தி  ஜெயந்தி  

அகிம்சையைப்  போதித்த  அண்ணலின்  ஜெயந்தி
மனிதகுலம்  அதிசயத்த  மாமனிதனின்  ஜெயந்தி 

எளிமையின்  சின்னமாய்  வாழ்ந்த  மகாத்மாவின்  ஜெயந்தி 
சுதந்திரக்  காற்றை  சுவாசிக்க  வாய்த்த  புனிதனின்  ஜெயந்தி 

வெள்ளையரை  நடுங்க  வைத்த  வேங்கையின் ஜெயந்தி 
பரங்கியரைத்  துரத்தியடித்த  பாமரனின்  ஜெயந்தி 

மண்ணை  நேசித்த  மனிதருள்  மாணிக்கத்தின்  ஜெயந்தி 
மாபெரும்  சரித்திரம்  படைத்த  சாதனையாளரின் ஜெயந்தி 

விடுதலையைப்    போற்றிய  மாவீரனின்  ஜெயந்தி 
அனைவரையும்  ஒருங்கிணைத்த  அதிசயத்தின்  ஜெயந்தி 

சுதேசியின்  சின்னமாய்  வாழ்ந்த  சுதந்திரத்தின்  ஜெயந்தி 
கைராட்டையை  ஆயுதமாய்  பயன்படுத்திய  காவியத்தின்  ஜெயந்தி 

விடுதலைக்குப்  பின்பு  பதவியை  விரும்பாத  தியாகியின்  ஜெயந்தி 
மக்களின்  ஒற்றுமைக்காக  தன்னுயிரை  ஈந்த 
மாபெரும்  தலைவனின்  ஜெயந்தி 

அடிமையென்னும் விலங்கை  உடைத்தெறிந்த  அற்புதச்சுடரின்  ஜெயந்தி 
வாழ்நாள்  முழுவதும்  மக்களுக்காகவே  உழைத்த  வள்ளலின்  ஜெயந்தி 

கொலை செய்த  பாவியையும்  மன்னித்த  உத்தமனின்  ஜெயந்தி 
மக்களின்  நம்பிக்கையின்  ஒற்றைச்  சொல்லாய்  ஒலித்த  
மகாத்மா  காந்தியின் ஜெயந்தி 

நன்றியோடு  வணங்குவோம்  -- அந்த 
உத்தம  தலைவனின்  பாதம்  தொட்டு
  
காலங்காலமாய்  இங்கே  தொடந்து  
வாழ்வது  காந்தீயக்  கொள்கைகளே 

----த .சத்தியமூர்த்தி   

Sunday, 18 September 2022

Arambam

ஆரம்பம்  

இல்லறத்தின்  இனிய  துவக்கம்  தான்  
நல்ல  குடும்பத்தின்  ஆரம்பம் 

இரு   மனங்களின்  இணைப்பின்  துவக்கம்   தான் 
இனிய  மழலைகளின்  வருகைக்கான  ஆரம்பம்

தவழ்வதற்கு , நடப்பதற்கு , பேசுவதற்கு  துவக்கமே 
மழலைகளின்  இடைவிடாத   ஆரம்பம்

வெற்றிக்கான   ஆரம்பமே,  தொடர்ந்த  பயிற்சியும் 
விடாத  ஊக்கமும் , கடின  உழைப்பே  ஆகும் 

சமூகத்தின்  வளச்சிக்கான   ஆரம்பமே  அவர்களின்  
விழிப்புணர்வை  பொறுத்தே  அமையும் 

 ஆரம்பம்  அமர்க்களமாய்  அமைந்து   விட்டால்  
அடுத்தடுத்த  நிலைகளைத்  தாமாக  எட்டி விடலாம் 

நாளை செய்யலாம்,  என  நாளைத்  தள்ளிப்  போடாமல் 
 இன்றே  இப்பொழுதே,  ஆரம்பித்தால்   வெற்றி  நிச்சயம்  

நல்லதொரு  துவக்கமே  மிகப்பெரிய  
எழுச்சிக்கு   வித்திடும்  

நல்ல  நல்ல  நூல்களைத் தேடித்தேடிப்  படிப்பதே 
அறிவைப்  பெருக்கிக்  கொள்ளும்   ஆரம்பம்

அச்சமின்றி  அனைவரும்  உண்மைக்காக  ஓரணியில் 
திரள்வதே  நாட்டின்  நன்மைக்கான   ஆரம்பம்

பதுக்கி  வைக்கும்  பழக்கத்தை  விட்டு , பங்கு  போடும் 
சமதர்மத்தைக்  கடை  பிடித்தால்  பொதுவுடமைக்கான  ஆரம்பம்

நல்லவர்கள்  கையில்  நாட்டை  ஒப்படைப்பதே 
உண்மை  ஜனநாயகத்தின்   ஆரம்பம்

கூடி  வாழும்  சமூகமே  கோடி நன்மை  பெறும் 
ஒன்று  பட்ட  சமூகமே  வாழ்வாங்கு  வாழும் 

அதற்கான  இனிய  துவக்கமே  நல்ல   ஆரம்பம்

--த .சத்தியமூர்த்தி 
,

Sunday, 11 September 2022

Neethi Enge?

 நீதி  எங்கே ?

நீதி  என்பது  ஆதிக்க  வர்க்கத்தின்  சட்டைப் பைக்குள்  
அடக்க  நினைக்கும்  கரன்சி  நோட்டல்ல 

நீதி  அறத்தோடு  சார்ந்தது , அறம்  தர்மத்தோடு  இணைந்தது,
அகிலமுழுவதும்  வியாபித்துள்ளது , அதனால்  தான்  
பிரபஞ்சமே  சுற்றுகிறது  

  ஆயிரம்  கரங்கள்  மறைத்து  நின்றாலும்  ஆதவன்  மறைவதில்லை 
அதுபோல, 

ஆட்சி  அதிகாரம் , ஆதிக்கவர்க்கம்,  பள்ளிக்  கல்வித்துறை ,
காவல்  துறை , ஒருசில  ஊடகங்கள் , எல்லாம்  கை  கோர்த்து  
பள்ளி  நிர்வாகத்தைக்  காப்பாற்ற  முயன்றாலும் 
நீதி  தோற்பதில்லை 

நீதி  கேட்டு  போராடினால்  உடனே  அந்த  தாயின்  மீதே 
 அவதூறு பரப்புவது,  ஆளை  மிரட்டுவது ,

ஜனநாயக  நாட்டின்  மரபுக்கே  கேடு இது . 

வழக்கு  இன்னும்  ஆரம்ப  நிலையிலே  
குற்றப்பத்திரிக்கை  தாக்கல்  செய்யவில்லை
  
சாட்சிகள் இன்னும்  விசாரிக்கப்படவில்லை   
ஆனால்  அதற்குள் வழக்கு  முடிந்துவிட்டது 

இது  வழக்கு  விசாரணையை  
எப்படி  நேர்மையாக  நடத்த  உதவும் 

வானளாவ  அதிகாரம்  படைத்தவன்  இங்கே  
அனைத்தையும்  முடிவெடுக்கும்  ஆண்டவன் தான் 

எல்லாரும்  உண்மைக்கு , நேர்மையுடன் உழைத்தால்  தான் 
நீதிகிடைக்கும்.  ஜனநாயகம்  பிழைக்கும் .

த .சத்தியமூர்த்தி 

Sunday, 28 August 2022

Seyalaaku

 செயலாக்கு 

கண்ணும் கருத்துமாய்  படிப்பைக்  கற்று  
பட்டம்  பெறுவதில்  செயலாக்கு 

ஏழை ,எளியோரின்  துயர்  நீக்கவே  
உழைப்பதை நாளும்  செயலாக்கு 

கவிதைகள்   மூலம் மக்கள்  மனதினில்  
நம்பிக்கை  விதைப்பதைச்  செயலாக்கு 

காலம்  மாறும் ,வசந்தம்  வீசும் 
கலப்பையை  உழுது  செயலாக்கு 

கைத்தொழில்  மூலம்  அர்ப்பணிப்போடு  
ஒன்றி   பாடுபட செயலாக்கு 

வேலை  செய்தால்  மட்டுமே  நல்ல  வேளை  வரும்  
என ஊருக்கு  உரைத்திட  உண்மையாகவே செயலாக்கு 

படிப்படியாக   வளர்ந்து,  பணக்காரர் வரிசையில் , 
நம்மையும்  இணைத்திட ,  முனைப்புடனே  செயலாக்கு 

வீண்  பேச்சை   பேசியே  வீணானது போதும் 
இனியாவது   செயலில் இறங்கி  வெற்றி காணவே  செயலாக்கு 

 விடியும்   பொழுதினை, விரும்பியே  வரவேற்று  
உற்சாகமுடன்  செயல்பட  செயலாக்கு 

சட்டமும்  நிதியும்,  பணம்  படைத்தவர்க்கே! 
ஏழை   சொல் அம்பலத்தில்  ஏறாது!   என்றால் 
மக்கள்  சக்தியை  ஒருங்கிணைக்கும் ஜனநாயகக்  
கடமையை செயலாக்கு 

நல்ல  நல்ல  செயல்   திட்டத்தால்  தான் 
மக்களிடம்  நம்பிக்கை  பெற முடியும்
      
இல்லையென்றால்  ஆட்சிகள் மாறும்  காட்சிகள்   
நாளை  இங்கே  அரங்கேறும்  

என்ன  நன்மை  செய்தார்கள்  என்பதை  வைத்தே 
மக்கள்  எதிர்காலத்தில்  நல்ல  முடிவெடுப்பார்கள் 

--த .சத்தியமூர்த்தி 

Sunday, 21 August 2022

Vaaimai

வாய்மை  

பொய்களின்  முகத்திரையைக்  கிழித்தெறிந்து  வான் 
உதித்த  சூரியன்  போல்  வெளிபடுவதே  வாய்மை

ஆதிக்க  சக்திகளின்  அதிகாரத்தைக்  கடந்து  கடல்  
அலைபோல்  பொங்கி  மேலெழுவதே  வாய்மை 

வஞ்சக  நரிகளின்  பொய் கூடாரத்தில் மறைத்து  வைத்தாலும் ,
தக்க  சமயத்தில் தன்னை  வெளிச்சம்  போட்டுக் காட்டுவதே வாய்மை

ஜனநாயகத்தின்  பேராலே,  கொள்ளையடிக்கும்  கூட்டத்தை 
கூண்டோடு  வீட்டுக்கு  அனுப்புவதே  வாய்மை

காலங்கடந்து  தீர்ப்பு வந்தாலும், நீதிமன்றங்களில் 
 இன்னமும்  கர்வத்தோடு  நடைபோடுவதே  வாய்மை

சாதாரண  சாமானியனின்  பக்கம்  ஆட்சி  , அதிகாரம்  , இல்லாது  
போனாலும்  இன்னமும்  கவசம்  போல்  மக்களைக்  காக்கும்  
கேடயமே  வாய்மை

பொய்மை  மொத்தமாய்  ஆலவட்டம்  போட்டு,  ஆட்டம்  போட்டாலும், 
கடைசியில்  வழக்கம்  போல்  வெற்றி  பெறுவது  வாய்மை

பச்சை  கரன்சி  நோட்டுக்காக,  பல்லிளித்து  வெட்கமில்லாமல் 
ஆயிரம்  வேடங்கள்  போட்டாலும்,  மக்கள்  மன்றத்தில்  துரத்தப்பட்டு  
பின்  நீதிமன்றத்தால்  தண்டிக்கப்படுவதே  வாய்மை

நல்லவரை  போல்  நடமாடும்  கபடதாரிகளை  நம்மிடத்தில்  
காட்டிக்  கொடுப்பதே  இந்த  வாய்மை

அடிமேல்  அடிவாங்கி  அடித்தட்டு  மக்களெல்லாம் , 
ஜாதிவெறியர்களாலும்  , மதவெறியர்களாலும்  துண்டாடப்பட்டு ,

புழுவாய் துடித்தபோதும்,  இன்னமும்  பொறுமையோடு  இருப்பதற்குக்  
காரணமே  

என்றாவது  ஒருநாள் நீதி வென்று  வாய்மை  வெளிப்படும்  
என்ற  நம்பிக்கையில்  தான் 

வாய்மை   என்பதே   தூய்மை !  நேர்மை !!
அது   தான்  வெல்லும்  என்பதே  உண்மை !!! 

---த .சத்தியமூர்த்தி 

Sunday, 14 August 2022

Suthanthiram-75

  சுதந்திரம் -75

 சுதந்திரத்தின்  பொன் விழா  ஆண்டு  

உத்தமதலைவன்  மகாத்மா காந்தியின்  கறைபடியா 
கரத்தை  அலங்கரித்தது   நம் தேசியக்  கொடி 

ஜனநாயக  சிற்பி  ஜவஹர்லால்நேருவின் கரத்தை 
வலுப்படுத்தியது  நம்  தேசியக்  கொடி  

கர்மவீரர்  காமராஜரின்  தியாகத்தால்  பல  ஆண்டுகள் 
சிறைக்குப்பின்  மலர்ந்தது  நம் தேசியக்  கொடி 

 வெள்ளையனின் தடியடிக்குப்  பின்பும் , திருப்பூர்  குமரனின் 
உடலிலிருந்து  உயிர்  பிரிந்த  பின் தான்  , கையை விட்டு  
பிரிந்தது  நம் தேசியக்  கொடி 

கப்பலோட்டிய   தமிழன் வ .உ .சிதம்பரனாரும்  ,
சிங்கமென கர்ஜித்த  சுப்பிரமண்ய  சிவாவும்,
 
 உணர்ச்சிபொங்க  சுதந்திரகீதம் பாடிய  
மகாகவிஞன் சுப்பிரமண்ய  பாரதியும்,     

சுதந்திரம்  எனது   பிறப்புப்புரிமை  எனச்  சொல்லிய
பால  கங்காதர  திலகரும்  இன்னாளில் 

நாம்  நன்றியோடு   நினைத்து போற்றப்படவேண்டியவர்கள் .

நாடுவிட்டு   நாடு  சென்று ,, படைதிரட்டி  வெள்ளையனை  
எதிர்த்த  மாவீரன்  நேதாஜி  சுபாஷ்  சந்திர  போஸும்,

அவருக்கு பக்கபலமாய்  துணை  நின்ற  ஐயா  
பசும்பொன்  முத்துராமலிங்க  தேவரும் , 

சுதந்திர  போராட்டத்தில்  ஈடுபட்ட  அபுல்  கலாம்  ஆசாத்தும்,  
தங்கள்  இன்னுயிரைத்   தந்த  மாவீரன்  பகத்சிங் , சுகதேவ்  ,ராஜகுரு,
 
வாஞ்சிநாதன் , சந்திரசேகர  ஆசாத் , சூர்யா  சென் இதுபோன்ற 
இலட்சோப  இலட்ச  தியாகிகளின்  தியாயகத்தால்  
மலர்ந்தது  நம் தேசியக்  கொடி

"என்று  தணியும்  இந்த சுதந்திர  தாகம் 
என்று  மடியும்  எங்கள்  அடிமையின்  மோகம் "

"வந்தே  மாதரம்  என்போம் .  எங்கள் 
மாநிலத்தாயை   வணங்குதல்  செய்வோம்" 

வாழ்க  பாரதம் !  வாழ்க  பாரத  மணிக்கொடி !
வளர்க  பாரதம் ! ஜெய்  ஹிந்த் ..

த .சத்தியமூர்த்தி 

Sunday, 31 July 2022

Petrorgalin Kavanathirku

 பெற்றோர்களின்  கவனத்திற்கு 

தாலாட்டி , சீராட்டி , கண்போல்  வளர்த்த பிள்ளைகளைப்  
பள்ளியில்  சேர்க்கும்  போது  பெற்றோர்கள் அதிக 
கவனம்  செலுத்த வேண்டும்

கார்ப்பரேட்  பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எப்படியாவது 
 அந்தப்  பள்ளியில்  தங்கள்   பிள்ளைகளைச் சேர்க்க  வேண்டும் 
என்ற  பெற்றோர்களின்  முனைப்பும்   ஒரு காரணமாகும் 

 அருகில்  இருக்கும் பள்ளியைத்   தவிர்த்துவிட்டு  பெண் பிள்ளைகளைக் 
கல்விக்காக  வெகுதூரம்  அனுப்புவதைத்  தவிர்க்க  வேண்டும் 

பணம்  ஆதிக்கம்  செலுத்தும்  ஒரு  சமூகத்தில்  நம்  பிள்ளையைப் 
பாதுகாப்பான  பள்ளியில்  சேர்ப்பது  நமது  பொறுப்பும்  கடமையுமாகும் 

எளியோரைத்  தாழ்த்தி ,வலியோரை  வாழ்த்தும்  வழக்கமான 
சமூகத்தில்   குற்றப்  பின்னணியுடைய  பள்ளியில்  தொடர்ந்து  நம் 
குழந்தைகளைச்  சேர்ப்பது  எத்தனை  கொடுமையானது ?

காலப்  போக்கில்  எதையும்  மறப்பதால்   இது போன்ற
தவறுகள் தொடர்கதையாகிறது   
 
காலம்  எப்போதும்  கயவர்களுக்கு  துணை  போகாது
 
மக்களின் எழுச்சிக்கு  முன்பாக   எந்த  கூட்டமைப்பும் 
எந்த  பள்ளியையும்  காப்பாற்ற  முடியாது  

தர்மதேவதையின்   கண்கள் கட்டப்பட்டிருந்தாலும்  
நீதிதேவனின்  தண்டனையிலிருந்து  தப்ப  முடியாது 

பெற்றோர்கள்  தங்கள்  பிள்ளைகளிடம்  மனம்  விட்டு  
நண்பர்கள்  போல்  பழக  வேண்டும்

மதிப்பெண்களுக்குத்   தரும்  மதிப்பை விட  
மகளின் பாதுகாப்பில்  தனி  கவனம்  செலுத்துங்கள் 

 அரசுப்  பள்ளியில்  படித்த  ஐயா அப்துல்கலாம்  அவர்கள்  
விஞ்ஞானியாகி , குடியரசுத்   தலைவரானார் 

விழிப்புணர்வோடு  செயல்படுங்கள் 
பொறுப்புணர்ந்து  பிள்ளைகளைப்  பாதுகாத்துக்  கொள்ளுங்கள் .

---த .சத்தியமூர்த்தி  

Sunday, 24 July 2022

Pen Sirargalin Kavanathirku

  பெண்  சிறார்களின்  கவனத்திற்கு 

கல்விக்கண்  திறந்த  கர்மவீரர்  காமராசர்
சிற்றூர் , பேரூர் , நகரம்  என  எல்லா  இடங்களிலும் 

 மதிய உணவு  திட்டத்துடன்  அரசுப்   பள்ளிகளை 
ஆரம்பித்து  கல்வியில்  புரட்சி  செய்தார் 

அதன்  பயனாய்  தமிழகம்  முன்பை விட 
அதிவேகமாக  கல்வி  பயில ஆரம்பித்தது 

காலப்போக்கில்  எல்லாமும்  தனியார்  வசமாக கல்வியிலும் 
 வணிக  நோக்கோடு  தனியார்  பள்ளிகள்  முளைத்தது    
   
அரசுப்  பள்ளியைக்  காட்டிலும்  கட்டிடத்தில் , ஆடம்பரத்தில் 
வசதி  வாய்ப்பில்  பிரமண்டத்தைக்  காட்டி  மக்களை  ஈர்த்து 

தனியார்  பள்ளிகள்  கட்டணக்  கொள்ளையில்  ஈடுபட்டு  
கார்ப்பரேட்  முதலாளிகளாக தங்களை  வளர்த்துக்கொண்டார்கள் 

படிக்கின்ற  மாணவ  , மாணவியரின்  பாதுகாப்பில்  
அக்கறை  செலுத்த ஆர்வம்  காட்டுவதில்லை 

பள்ளி  வளாகத்தில் மரணங்கள் , அடுத்தடுத்து  நிகழ்ந்தாலும் 
தங்கள்  வசம்  உள்ள  பணத்தால்,  அதிகாரவர்க்கத்தை 
சரிக்கட்டி  தங்களைப்  பாதுகாத்துக்  கொள்கிறார்கள் 

பெண்  பிள்ளைகள்  பள்ளியை  விட்டு  வந்ததும் , தங்கள்  
தாயாரிடம் பள்ளியில்  நடந்த அத்தனையையும்
  பகிர்ந்து  கொள்ளவேண்டும்  

அச்சுறுத்தலோ , அசம்பாவிதமோ , மிரட்டலோ , 
பாலியல்  தொல்லைகளோ,  எதுவென்றாலும்  
 தயங்காமல் தங்கள்  தாயாரிடம்  வெளிப்படுத்தவேண்டும்

விடுதியில்  தங்கிப்  படிக்கும் மாணவிகள்  தங்கள்
பாதுகாப்பைப்   பெற்றோர்  மூலம் 
  உறுதி செய்துக் கொள்ளவேண்டும்

பள்ளிக்  கல்வித்துறை  தனியார்   பள்ளிகளை , விடுதிகளை 
ஆய்வுசெய்து , மாணவிகளின்  பாதுகாப்பைக்  
கண்காணிக்கவேண்டும் 

 எத்தனை  வேளை   இருந்தாலும் , பள்ளி  ஆசிரியரிடம்  சென்று 
பெற்றோர்  தங்கள்  பிள்ளைகளின்  நிலையை  
அறிந்துகொள்ளவேண்டும் 

மாணவச்  செல்வங்களே ! வருங்கால   தூண்களே !
 உங்கள்  பின்னால்  தமிழகமே  உள்ளது  என்பதை  
இனியாவது  புரிந்துகொள்ளுங்கள் 

----த .சத்தியமூர்த்தி 

Sunday, 10 July 2022

Ezhuthukol

 எழுதுகோல் 

வரலாற்றைப்  பதிவு  செய்து  அடுத்த  தலைமுறைக்கு  
நகர்த்திடும்  நெம்புகோலே  எழுதுகோல்  

எண்ணத்தின்  வெளிப்பாட்டை  எழுத்து  வடியில்  
படிக்கச்  செய்யும் எந்திரமே  எழுதுகோல்

ஆட்சிகளின்  அவலங்களை  அம்பலப்படுத்தி  ஆட்டங்காண  
வைக்கும்  வெடிமருந்தே  எழுதுகோல் 

காவியங்கள்  பல  பிறக்கக்   காரணமாய்  
அமைவது  ஏற்றமிகு  எழுதுகோல் 

 சிந்தனையின் கதவு  மெல்ல  சிறகடித்து  பறக்கும்போது 
கண்டதையெல்லாம்  பதிவு  செய்யும்  காலச்சக்கரம்  எழுதுகோல் 

எங்கோ  ஒரு  மூலையில்  நடக்கும் நிகழ்வுகளை  எல்லா 
இடத்திற்கும்  வெளிச்சம்  போட்டுக்  காட்டும்
  காலக்கண்ணாடி எழுதுகோல்

கல்வியறிவில்லாத  சமூகத்தையும்   கைப்பிடித்து மெல்ல , 
மெல்ல  கற்றுத்தந்து , தன்னம்பிக்கை  ஊட்டும்  
நிலைக்கண்ணாடி  எழுதுகோல் 

 படித்தவனைப்  பாராட்டும்  பண்புள்ள  சமூகத்தில்  
பாமரனையும்  படிக்கவைக்கும்  கருவியே  எழுதுகோல் 

ஆயுதத்தால்  சாதிக்க  முடியாததையெல்லாம்  
அழுத்தமான  வார்த்தையாலே  வென்றுகாட்டும்
வலிமையான  ஆயுதமே  எழுதுகோல் 

மக்களையெல்லாம்  ஒன்று  திரட்டி , 
மண்ணைக் காக்கும்  மகத்துவம்  எழுதுகோல் 

எம்  எழுதுகோல்  வாய்மையைப்  போதிக்கும் 
எம்  எழுதுகோல்  நேர்மையை  நேசிக்கும் 

எம்  எழுதுகோல்  உண்மையை  உலகுக்கு  உரக்க  
எடுத்துச்சொல்லும் 

எம்  எழுதுகோல்  தமிழருக்காக , தமிழுக்காக  
காலமெல்லாம்  போராடும்  

---த .சத்தியமூர்த்தி 

Sunday, 3 July 2022

Adambara Thirumanangal

 ஆடம்பரத்  திருமணங்கள் 

ஒரு  இரவில்  படோடாபம்  காட்ட  பல  
இலட்சங்கள் வாரி  இறைத்து  திருமணம்  
செய்ய யாரிட்டது  கட்டளை ?

பக்கத்தில்  இருப்பவனைப்  பார்க்கக்கூட  மனமில்லாத  
மனம்  படைத்தோர்  கல்யாணத்தில்  மட்டும்  
கவலையில்லாமல்   செலவு செய்வது  யாருக்காக ?

சாப்பிட  ஆரம்பிக்கும் போது இலையில்  வைக்க 
ஆரம்பித்தவர்கள்  சாப்பிட்டு  முடியும்  போதும்  யாருக்காக  வகைவகையாய்  வைத்துக்கொண்டே  போகிறார்கள் 

 பாதிக்கும்  மேலாக  இலையுடன்  குப்பைக்கு  
போகும்   உணவு வகைகளை  பசியோடு  இருக்கும்  
 பாமரனுக்கு  பகிர மனம்  உண்டா  ?

  சிக்கனமாய்  செய்யுங்கள் என  சொல்ல  வரவில்லை 
தேவைக்கு  மேலே  வீண்  செலவு  எதற்காக ?

படிப்புக்காக , மருத்துவத்திற்காக , சமூகநலத்திற்காக  ,
இன்னும்  அரசாங்கத்திடம்  உதவி  கேட்கும்   நிலையில் 
மக்கள்  உள்ளார்கள் 

திருமனச்  செலவில்  ஒரு   பகுதியை  இதுபோல 
நல்ல  காரியத்திற்கு  மடை  மாற்றம்  செய்தால்  
மணமக்கள்  வாழ்வு  சிறக்குமல்லவா !

 வசதிப்  படைத்தோர்  சிந்திப்பீர் ! 
ஆடம்பரத்  திருமணத்தைத்  தவிர்ப்பீர் ! 

கல்யாணம்  என்பது  இரு  மனங்களின்  
சங்கமம்  தான்  

அதற்காக   கட்சிக்   கட்டிக்கொண்டு 
 காசை வாரி  இறைக்காதீர்! 

செல்வம்  அதிகமாய்   ஆண்டவன்  கொடுத்தது 
இல்லாத  ஏழைக்கும் சேர்த்துத்தான் 

வாழ்க! மணமக்கள் பல்லாண்டு!
 வளமோடும் , நலமோடும்  நூறாண்டு !

த .சத்தியமூர்த்தி 

Sunday, 26 June 2022

Mana Amaithi

மன அமைதி  
 
ஆசையெனும்  மாயையில்  சிக்கி  
அவதியுறும்போது   நமக்கு  தேவை  மன  அமைதி 

ஓடி  ஓடி  சளித்தப்பின்  நமக்கு  
புத்துணர்ச்சி  தருவது  மன அமைதி 

எண்ண  அலைகள்  எண்ணிக்கையில்  அடங்காமல் 
அடுத்தடுத்து  தொல்லைத்  தரும்போது  தேவை  மன  அமைதி

குடும்ப  பாரம்  நம்மை  அழுத்தும்போது 
குதூகலத்துடன்  சமாளிக்க  உதவுவது  மன  அமைதி

காலை  எழுந்தவுடன்  கண்மூடி  தியானத்தால்  வரும் 
அமைதி  அந்த  நாள்  முழுவதும்  செயல்பட உதவும் 

பரபரப்பாய்  இயங்கும்  அவசர  உலகில்  
பாதுகாப்பாய் இருக்க  உதவும்  மன  அமைதி

கோடி  பணம்  கிடைத்தாலும்  கிட்டாத  சுகமே 
கொஞ்சநேரம்  கிடைக்கும் மன  அமைதி

கண்டதையும்  நினைத்து  சதா  கவலைப்படும் 
மனதிற்கு  கட்டாயம்  தேவை சலனமற்ற  அமைதி

ஆலையம்  சென்று  ஆண்டவனைத்   தரிசிப்பதால்
அனந்தமுடன்  கிடைக்கும்  மன  அமைதி

சித்தர்  சமாதியில்  தியானம் செய்ய  
கிடைத்திடும்  நிர்மூலமான  அமைதி

இருப்பதில்  கொஞ்சம்  பகிர்ந்து  கொடுக்க 
இல்லாதவன்  சிரிப்பிலே  தோன்றும்  அமைதி

ஒற்றுமையுடன்  சமூகம்  சேர்ந்து  வாழ  முற்பட்டால்  
நாடு  முழுவதும்  தோன்றும்  நல்லதோர்  மன  அமைதி

----த .சத்தியமூர்த்தி 

Sunday, 19 June 2022

Engum Thamizh Ethilum Thamizh

 எங்கும்  தமிழ்  எதிலும்  தமிழ் 

கற்கண்டு  சொற்கொண்டு  கவிதை  நடையில்  
காவியம்  பல  செய்து  தமிழுக்கு  பெருமை  
சேர்த்தது  ஒரு  காலம் 

எல்லா  பாடத்திலும்  முதன்மையாய்  தேர்ச்சி  
ஏனோ  எம்  தமிழில்  மட்டும்  குறைவாய்  பயிற்சி 

தமிழ் மட்டும்  அவனுக்கு/அவளுக்கு  சரியாய்  வராது 
தமிழ்  பெற்றோர்  பெருமையாய்  சொல்லிக்  கொள்வது  

பத்திரிகையைப்  படித்துத் தான்  தமிழைக்  கற்றுக்கொண்டேன் 
அப்படியானால்  பள்ளியில்  படிக்கும்போது  என்ன  செய்தீர்கள் ?

ஒரு  மொழி  அழிந்தால்  , அவன்  இனம்  அழியும்  
இனம்  அழிந்தால்  , அவன் வாழ்ந்த  நிலம்  அழியும் 

நிலமற்று  நாடோடியாய்  இன்று  திரிபவர்கள் அன்று 
தங்கள்  தாய்  மொழியை  கற்க  மறந்தவர்கள் 

தமிழ்க்குடிகள்  முறையாய்  தமிழைக்  கற்கவில்லையென்றால் 
வேறு  யார்  இம்  மொழியைக்  காப்பது ?

பள்ளியில்  தனிக்  கவனம்  செலுத்தி  தமிழை  
முறையாய்  கற்றுத்  தரவேண்டும்

மாணவர்  மன்றம், புலவர்  மன்றம்  போல்  தமிழுக்கு 
 தேர்வு  நடத்தி  சான்றிதழுடன்  பரிசுகள்  தரவேண்டும்

தமிழ்  மொழியின்   வளர்ச்சிக்கு அரசாங்கம்  
அக்கறையோடு  பாடுபடவேண்டும்  

தமிழ்  வழியில்  பயின்றவர்க்கு  அரசு  வேலையில்
முன்னுரிமைத்  தரவேண்டும் 

விழிக்கு  இணையான  எம்  மொழியை  
தமிழை  வணங்கி வாழ்த்துவோம் 

----த .சத்தியமூர்த்தி  

Sunday, 12 June 2022

Thane Thanaku Ellam

தானே  தனக்கு  எல்லாம்  

உன்னையே  நீ  அறிவாய்
                                            -- தத்துவமேதை   சாக்ரடீஸ் 

தன்னைத் தானே  உணர  தனக்கொரு  கேடில்லை 
தன்னைத் தானே  வெல்ல  தனக்கொரு பகையில்லை 

தன்னைத் தானே  செதுக்க  தனக்கொரு இணையில்லை 
தன்னைத் தானே நம்ப  தனக்கொரு வீழ்ச்சியில்லை  

தன்னைத் தானே தேற்ற  தனக்கொரு குறையில்லை      
தன்னைத் தானே அளக்க  தனக்கொரு கருவியில்லை 

தன்னைத் தானே உயர்த்த  தனக்கொரு  தடைகளில்லை 
தன்னைத் தானே காக்க  தனக்கொரு  தயக்கமில்லை 

தன்னைத் தானே வழி நடத்த  தனக்கொரு  தலைமை  தேவையில்லை 
தன்னைத் தானே திருத்திக்கொள்ள  தனக்கொரு அறிவுரைத்  தேவையில்லை 

சிலர்  தானே  தனக்கு  சுமையாவான்
சிலர்  தானே  தனக்கு  சுகமாவான் 

சிலர்  தானே  தனக்கு  பகையாவான் 
சிலர்  தானே  தனக்கு  உறவாவான் 

சிலர்  தானே  தனக்கு  விதையாவான் 
சிலர்  தானே  தனக்கு  உரமாவான் 

சிலர்  தானே  தனக்கு  பலமாவான் 
சிலர்  தானே  தனக்கு  வினையாவான் 

சிலர்  தானே  தனக்கு  எமனாவான் 
சிலர்  தானே  தனக்கு  சிவனாவான் 

தன்னை  உணர்ந்து  ஜெகத்தினை  வெல்வோம் 
தன்னை  இணைத்து  தரணியை  வெல்வோம் 

---த .சத்தியமூர்த்தி  

Sunday, 5 June 2022

Kadarkarai Sollum Seithi

 கடற்கரை சொல்லும் செய்தி  

காசு  குறைவாக  இருந்தாலும்  பொழுது  போக்க  
தைரியமாய்  செல்லுமிடம்  கடற்கரை 

அனல்   பறக்கும் கோடையைச்   சமாளிக்க
 சாமானியர்கள் கூடுமிடம்   கடற்கரை 

நீண்ட  நெடிய   கடற்கரையைத்  தன்னகத்தேக் 
 கொண்டது  சென்னைப்  பட்டணம் 

வேர்த்து , வியர்த்து ,  வரும் மக்களின்  மேல் 
குளிர்ந்தக்  காற்றை  வீசி  ஆசுவாசப்படுத்தவது   கடற்கரை 

தேங்காய் , மாங்காய் ,பட்டாணி , சுண்டல் ,காலங்காலமாய் 
கடற்கலையில்  விற்கும்  நொறுக்குத்தீனி  

 கடற்கரையின்  அழகே  இடைவிடாது  கரையை  
முத்தமிட்டுக்  கொண்டிருக்கும்  கடல்  அலைகள் தான் 

மணலிலே  ஓவியம்  வரைந்து   அதை  அலைகள்  வந்து  
 கலைத்திடாமல்  இருக்க  குழந்தைகள்  படும்பாடு  குதூகலமானது 

  சோர்ந்து  கிடந்த  மனதையும் , உடலையும் , சுறுசுறுப்பாக்கி  
மகிழ்ச்சியோடு  திருப்பியனுப்பும்  மாமருந்து   கடற்கரை 

திருமண  தம்பதிகளும் , இனிய  காதலர்களும் 
உறவை  வளர்த்துக்கொள்ள  உதவும்   கடற்கரை 

கைகோர்த்து,  பாதுகாப்பாய்  வரிசையில்  நின்று  
ஆக்ரோஷமாய்  வரும்  அலையையே  ஆவலாய்  எதிர்பார்த்து  

ஓங்கியடித்து  நம்  உடையை  நனைத்ததும்  சந்தோஷத்தில்  
துள்ளிகுதிப்பதும் , கூச்சலிடுவதும் , கடற்கரையில்  நிகழும்  அற்புதம் 

இத்தனை  பெருமைமிகு   கடற்கரையில்  இன்று  வடநாட்டு  
மக்கள் தான்  கூட்டம்  கூட்டமாய்  கூடுகிறார்கள் 

எங்கே  போனார்கள்  நம்   தமிழ்  குடிகள் ?
 கடற்கரைக்கு  வருவதற்கும்  முடியாமலா  போனார்கள் !

சென்னையை  விட்டு  வெகுதூரம்  புறநகர்  நோக்கி 
 தமிழர்கள் நகர்ந்துக்  கொண்டிருக்கிறார்கள் 

தம்  சொந்த   மண்ணிலே  ஒவ்வொரு  அடையாளத்தையும் 
தொலைத்துக்  கொண்டு  இருக்கிறார்கள் 

 கடற்கரை  சொல்லும்  செய்தி  இதுதான் 

த .சத்தியமூர்த்தி 

Saturday, 28 May 2022

Appa

 அப்பா!

அப்பா!  அப்பா!  மந்திர வார்த்தையிது 
மகுடிக்குக்  கட்டுப்பட்ட  நாகம்  போல் 

நம்மை  இம்  மண்ணுக்கு  கொண்டு வந்தது 

கடந்த  காலங்களில்   நம்மைப்  பொத்திப்   பொத்தி  பாதுகாத்தது
 
நம்  கண்  அசைவை  வைத்தே  நம்  தேவைகளை  
ஒவ்வொன்றாய்  பூர்த்தி  செய்தது  

கம்பீரமாய் கையைப் பிடித்து கடை  வீதியில்
உலா வந்து  மகிழ்ந்தது  

ஆசை  ஆசையாய்  கேட்டதையெல்லாம்  அள்ளிக்கொண்டு  
வீடு  வந்து  சேர்ந்தது 

பண்டிகைக்   காலங்களில் நம்மை  மகிழ்விக்க 
வேண்டியதையெல்லாம்  கொண்டு  வந்து  சேர்த்தது     

அதிர்ந்து  பேசாமலே  ஆயிரம்  விஷயங்களை  
அற்புதமாய்  செய்தது 

நம்மை  படிக்க வைத்து ஆளாக்க  
படாத  பாடு  பட்டது 

திருமணம்  செய்து  வைத்து  நமக்கொரு  
குடும்பத்தைக்  கொடுத்தது 

குடும்பத்தைக்  கட்டிக்காக்கும்  குத்துவிளக்காய்  தாயிருக்க 
விளக்கில்  சுடர்விட்டு  பிரகாசிக்கும்  தீபமாய்  எம்  தந்தை  

தடுக்கி  விழுந்தால்  தூக்கி விட  தாயுண்டு  ஒருகாலத்தில் 
ஓடிவந்து  அரவணைத்து  ஆறுதல்சொல்ல  தந்தையுண்டு 
அதுவும்  ஒரு  காலத்தில் 

ஆனால்  இன்றோ  விழுந்தாலும் , எழுந்தாலும் 
அழுதாலும்  ஆறுதலுக்கு  நமக்கு  நாம்  மட்டுமே 

எந்த  ஒரு  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  உண்மையாக 
அன்பு  செய்வது   தாய் தந்தை  மட்டுமே 

நமக்காகவே  காலமெல்லாம்  வாழ்ந்து  
நம்  கண்  முன்னே  மூச்சடங்கி  போனது 

வாழ்வின்  நீண்ட  நெடிய  பயணத்தைப்  புரியவைத்து 
ஒரு  சிறிய  படத்துக்குள்  அடக்கமாகி  போனார்கள் 

வாழ்க  எம்  பெற்றோர்   

--த .சத்தியமூர்த்தி 

Sunday, 22 May 2022

May 18

மே 18

ஒரு குடும்பம்  நாட்டின்  கஜானாவை  முழுவதுமாய்  கொள்ளையடித்ததால் 
ஒட்டு மொத்த  இலங்கையும்  இன்று  திவாலானது 

கொத்து  கொத்தாய்  இரசாயன குண்டுகளை  வீசி  எம்  
தமிழினத்தைக்   கொன்று    குவித்தபோது ,வாய் மூடி
  
மௌனியாய்  மௌனித்த  சிங்கள  இனம் 
தமிழினத்தின்  சாபத்தால்  இன்று  நிலை  குலைந்து  போனது 

உரிமைக்காக  போராடியது  வீரமிகு  எம்  தமிழினம் 
சோத்துக்காக , பாலுக்காக  போராடுகிறது  சிங்கள  இனம் 

பன்னாட்டு  இராணுவத்தை  எதிர்த்து  ஆண்மையோடு 
களத்தில்  நின்று  போராடிய  வீரமிகு  எம்  தலைவன்  எங்கே !

உயிருக்கு  பயந்து  கோழையாய்  ஓடி  ஒளிந்த  
சிங்கள  சர்வாதிகாரி  எங்கே !

இரத்த  வெறிபிடித்த பௌத்தப்   பிட்சுகளின்  
பேச்சைக்  கேட்டு  இன்னமும்  நீங்கள்  ஆட்சி  செய்தால்  

இதைவிட  மோசமான  நிலை தான்  மிஞ்சும் 

இனிமேலாவது  சிங்கள மக்கள்  தங்களை  மாற்றிக்  கொண்டு 
தமிழர்களின்  உடைமைகளை , உரிமைகளை  பகிர்தளியுங்கள் 

உரிமைக்காக  போராடிய  எந்த  இனமும்  
வீழ்ந்ததாய்  வரலாற்றில்  பதிவுகள்  இல்லை 

இனி  இழப்பதற்கு  ஒன்றுமில்லை  என்று சொல்லுமளவுக்கு 
தமிழினம்  எல்லாவற்றையும்  இழந்தது 

சர்வதேச சமூகம்  இந்த  படுபாதக  செயலைச்  செய்த 
குற்றவாளிகளைக்  கூண்டில்  ஏற்றி  தண்டிக்கவேண்டும் 

எம் தலைவனின்  வீரம் , மானம் ,இவற்றோடு  
இளைய  தலைமுறையின்  வழிகாட்டுதலில்  

எம்  இனம்  வெற்றி  நடை  போடட்டும் 

--த .சத்தியமூர்த்தி 

Saturday, 30 April 2022

Pen Parkkum Padalam- 2

பெண்  பார்க்கும்  படலம் -2

படித்தப் பெண்  என்பதால்  மெல்ல  மெல்ல  புரிந்துக்  கொண்டு 
அவளே  முன் வந்து உங்கள்  ஆசையை  நிறைவேற்றுவாள் 

பிறந்ததிலிருந்து  அவள் ஆசைப்  பட்டதையெல்லாம் 
அப்படியே  வாங்கித்தரும்  நீங்கள்  அவள்  

திருமணத்தில்  மட்டும்  உங்கள்  எண்ணத்தைத்  திணிக்காதீர்கள்  
பெண்ணை   அவள்   விருப்பப்படி வாழ  விடுங்கள் 

ஜாதியின்  பேரால் , மதத்தின்  பேரால், பெண்ணை 
பலியிடுவதைத்  தடுத்து  நிறுத்துங்கள் 

எந்த   மதமும் , எந்த  ஜாதியும்  உங்கள்  
அன்பு  மகளைத்  திரும்ப  தரப்  போவதில்லை 
 
ஆவணக்  கொலைகளைத்    தடுக்க  கடுமையான  
சட்டம்  கொண்டு  வாருங்கள் 
  
ஒவ்வொரு முறை பெண்  பார்க்கும்  படலம்  நடக்கும்  போதும் 
இந்த  வரனாவது  முடியாதா !  என  பெண்ணைப் பெற்றோர் 

ஏங்குகின்றனர் , ஆனால்  
கூட்டமாக  வந்து  அமர்ந்துக்  கொண்டு , கொடுக்கும்  

தின்பண்டத்தைக்   கொறித்துக்   கொண்டு , பெண்ணை 
கண்காட்சி  பொம்மையாகப்  பார்ப்பதும் , 

தங்களுக்குள்  முணுமுணுத்துக்  கொள்வதும்,
எதோ  இந்திரலோகத்திலிருந்து   வந்த அழகு  

சுந்தரிகள்  போல்  தங்களைப்  பாவித்துக் கொண்டு,
பெண்ணை  விமர்சிப்பதும் , எந்தவொரு  பதிலும்  

சொல்லாமல்  எழுந்து  செல்வதும் , காலங்காலமாக  
பெண்   சமூகம் சந்திக்கும்  சகிக்க  முடியாத   கொடுமையாகும் 

பெண்  பார்க்க   வரும்  மாப்பிள்ளை  வீட்டார்  தங்கள் 
வீட்டிலும்  திருமணத்திற்கு  தயாராய்  ஒரு  பெண்  

இருக்கிறாள்  என்பதைப்  புரிந்துக்கொண்டு  
நாகரிகமாக  நடக்க  வேண்டும் 

பெண்ணியம்  பேசும்  நாம்  பெண்ணின்  திருமண 
உரிமையையும்  சேர்த்துப்  பேசுவோம் 

--த .சத்தியமூர்த்தி 


Sunday, 24 April 2022

Pen Parkkum Padalam

 பெண்  பார்க்கும்  படலம் 

பெண்ணைப்  பிடிக்கிறதா ? கல்யாண  மாப்பிள்ளையிடம்  
கட்டாயமாய்  கேட்கப்படும்  அதே  கேள்வி  

மாப்பிளையைப்  பிடிக்கிறதா ? பெண்ணிடம்  
ஏனோ  பெரும்பாலும்  கேட்பதில்லை 

நான்  பார்த்த  மாப்பிள்ளை  என்  பெண்ணுக்கு  
மிகப்  பொருத்தம் . பெற்றோர்  சமூகம்  பிதற்றுகிறது 

என்  பெண்ணுக்கு ஏற்ற  மாப்பிள்ளை  
தாய்க்கும்  தந்தைக்கும்  ஏகப்பட்ட  பெருமை 

விடிந்தால்  கல்யாணம். பெண்ணைக்  காணவில்லை ,
கல்யாணத்துக்கு  ஒரு வாரம் பெண்  விஷம்  குடித்தாள்

     பத்திரிகைகளில்  பலவாறு  பரபரப்புச்  செய்திகள் 
பெற்ற  மகளிடம்  அவள்  விருப்பத்தைக்  கேட்பதில் 

அப்படி  என்ன  கௌரவக்  குறைச்சல் !
  
உங்களுக்காக  நீங்கள்  எடுக்கும்  ஆடையை  
விரும்பாத  பட்சத்திலும் , ஓரிருமுறை  போட்டுவிட்டு  

ஒதுக்கி  விடலாம். ஆனால்  மாப்பிள்ளை  அப்படியா ?
பொருந்தாத  பட்சத்தில்  , அல்லது  அவள்  ஏற்கனவே  

ஒருவரை  விரும்பும்  பட்சத்தில் , வாழ்க்கை  முழுவதும்  
கட்டிக்கொண்டு  அவஸ்தை  அல்லவா 

காலம்  மாறி  விட்டது
  
பெண்ணுக்கு  பிடித்தவன்  எல்லா  வகையிலும் 
 பொருத்தமானவன் என்றால்  

நீங்களே  முன்னின்று  திருமணத்தை  முடித்து  வையுங்கள் 

பெண்  தேர்ந்தெடுத்தவன்  சரியல்லையென்றால் 
பொறுமையுடன்  பேசி  புரிய  வையுங்கள்

மெல்ல  மெல்ல  அவனைப்  பற்றிய  தகவல்களைச் 
சேகரித்து  ஆதாரத்துடன்  அழுத்திச்  சொல்லுங்கள் 

அவள்  எத்தனைப்  பெரிய  ஆபத்தில்  சிக்கியுள்ளாள்  
என்பதை  மீண்டும்  மீண்டும்  எடுத்துச்  சொல்லுங்கள் 

------------தொடரும் -----------

----த .சத்தியமூர்த்தி