கடற்கரை சொல்லும் செய்தி
காசு குறைவாக இருந்தாலும் பொழுது போக்க
தைரியமாய் செல்லுமிடம் கடற்கரை
அனல் பறக்கும் கோடையைச் சமாளிக்க
சாமானியர்கள் கூடுமிடம் கடற்கரை
நீண்ட நெடிய கடற்கரையைத் தன்னகத்தேக்
கொண்டது சென்னைப் பட்டணம்
வேர்த்து , வியர்த்து , வரும் மக்களின் மேல்
குளிர்ந்தக் காற்றை வீசி ஆசுவாசப்படுத்தவது கடற்கரை
தேங்காய் , மாங்காய் ,பட்டாணி , சுண்டல் ,காலங்காலமாய்
கடற்கலையில் விற்கும் நொறுக்குத்தீனி
கடற்கரையின் அழகே இடைவிடாது கரையை
முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கடல் அலைகள் தான்
மணலிலே ஓவியம் வரைந்து அதை அலைகள் வந்து
கலைத்திடாமல் இருக்க குழந்தைகள் படும்பாடு குதூகலமானது
சோர்ந்து கிடந்த மனதையும் , உடலையும் , சுறுசுறுப்பாக்கி
மகிழ்ச்சியோடு திருப்பியனுப்பும் மாமருந்து கடற்கரை
திருமண தம்பதிகளும் , இனிய காதலர்களும்
உறவை வளர்த்துக்கொள்ள உதவும் கடற்கரை
கைகோர்த்து, பாதுகாப்பாய் வரிசையில் நின்று
ஆக்ரோஷமாய் வரும் அலையையே ஆவலாய் எதிர்பார்த்து
ஓங்கியடித்து நம் உடையை நனைத்ததும் சந்தோஷத்தில்
துள்ளிகுதிப்பதும் , கூச்சலிடுவதும் , கடற்கரையில் நிகழும் அற்புதம்
இத்தனை பெருமைமிகு கடற்கரையில் இன்று வடநாட்டு
மக்கள் தான் கூட்டம் கூட்டமாய் கூடுகிறார்கள்
எங்கே போனார்கள் நம் தமிழ் குடிகள் ?
கடற்கரைக்கு வருவதற்கும் முடியாமலா போனார்கள் !
சென்னையை விட்டு வெகுதூரம் புறநகர் நோக்கி
தமிழர்கள் நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்
தம் சொந்த மண்ணிலே ஒவ்வொரு அடையாளத்தையும்
தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்
கடற்கரை சொல்லும் செய்தி இதுதான்
த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment