தானே தனக்கு எல்லாம்
உன்னையே நீ அறிவாய்
-- தத்துவமேதை சாக்ரடீஸ்
தன்னைத் தானே உணர தனக்கொரு கேடில்லை
தன்னைத் தானே வெல்ல தனக்கொரு பகையில்லை
தன்னைத் தானே செதுக்க தனக்கொரு இணையில்லை
தன்னைத் தானே நம்ப தனக்கொரு வீழ்ச்சியில்லை
தன்னைத் தானே தேற்ற தனக்கொரு குறையில்லை
தன்னைத் தானே அளக்க தனக்கொரு கருவியில்லை
தன்னைத் தானே உயர்த்த தனக்கொரு தடைகளில்லை
தன்னைத் தானே காக்க தனக்கொரு தயக்கமில்லை
தன்னைத் தானே வழி நடத்த தனக்கொரு தலைமை தேவையில்லை
தன்னைத் தானே திருத்திக்கொள்ள தனக்கொரு அறிவுரைத் தேவையில்லை
சிலர் தானே தனக்கு சுமையாவான்
சிலர் தானே தனக்கு சுகமாவான்
சிலர் தானே தனக்கு பகையாவான்
சிலர் தானே தனக்கு உறவாவான்
சிலர் தானே தனக்கு விதையாவான்
சிலர் தானே தனக்கு உரமாவான்
சிலர் தானே தனக்கு பலமாவான்
சிலர் தானே தனக்கு வினையாவான்
சிலர் தானே தனக்கு எமனாவான்
சிலர் தானே தனக்கு சிவனாவான்
தன்னை உணர்ந்து ஜெகத்தினை வெல்வோம்
தன்னை இணைத்து தரணியை வெல்வோம்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment