காந்தி ஜெயந்தி
அகிம்சையைப் போதித்த அண்ணலின் ஜெயந்தி
மனிதகுலம் அதிசயத்த மாமனிதனின் ஜெயந்தி
எளிமையின் சின்னமாய் வாழ்ந்த மகாத்மாவின் ஜெயந்தி
சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்த்த புனிதனின் ஜெயந்தி
வெள்ளையரை நடுங்க வைத்த வேங்கையின் ஜெயந்தி
பரங்கியரைத் துரத்தியடித்த பாமரனின் ஜெயந்தி
மண்ணை நேசித்த மனிதருள் மாணிக்கத்தின் ஜெயந்தி
மாபெரும் சரித்திரம் படைத்த சாதனையாளரின் ஜெயந்தி
விடுதலையைப் போற்றிய மாவீரனின் ஜெயந்தி
அனைவரையும் ஒருங்கிணைத்த அதிசயத்தின் ஜெயந்தி
சுதேசியின் சின்னமாய் வாழ்ந்த சுதந்திரத்தின் ஜெயந்தி
கைராட்டையை ஆயுதமாய் பயன்படுத்திய காவியத்தின் ஜெயந்தி
விடுதலைக்குப் பின்பு பதவியை விரும்பாத தியாகியின் ஜெயந்தி
மக்களின் ஒற்றுமைக்காக தன்னுயிரை ஈந்த
மாபெரும் தலைவனின் ஜெயந்தி
அடிமையென்னும் விலங்கை உடைத்தெறிந்த அற்புதச்சுடரின் ஜெயந்தி
வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்த வள்ளலின் ஜெயந்தி
கொலை செய்த பாவியையும் மன்னித்த உத்தமனின் ஜெயந்தி
மக்களின் நம்பிக்கையின் ஒற்றைச் சொல்லாய் ஒலித்த
மகாத்மா காந்தியின் ஜெயந்தி
நன்றியோடு வணங்குவோம் -- அந்த
உத்தம தலைவனின் பாதம் தொட்டு
காலங்காலமாய் இங்கே தொடந்து
வாழ்வது காந்தீயக் கொள்கைகளே
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment