எழுதுகோல்
வரலாற்றைப் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு
நகர்த்திடும் நெம்புகோலே எழுதுகோல்
எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுத்து வடியில்
படிக்கச் செய்யும் எந்திரமே எழுதுகோல்
ஆட்சிகளின் அவலங்களை அம்பலப்படுத்தி ஆட்டங்காண
வைக்கும் வெடிமருந்தே எழுதுகோல்
காவியங்கள் பல பிறக்கக் காரணமாய்
அமைவது ஏற்றமிகு எழுதுகோல்
சிந்தனையின் கதவு மெல்ல சிறகடித்து பறக்கும்போது
கண்டதையெல்லாம் பதிவு செய்யும் காலச்சக்கரம் எழுதுகோல்
எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளை எல்லா
இடத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டும்
காலக்கண்ணாடி எழுதுகோல்
கல்வியறிவில்லாத சமூகத்தையும் கைப்பிடித்து மெல்ல ,
மெல்ல கற்றுத்தந்து , தன்னம்பிக்கை ஊட்டும்
நிலைக்கண்ணாடி எழுதுகோல்
படித்தவனைப் பாராட்டும் பண்புள்ள சமூகத்தில்
பாமரனையும் படிக்கவைக்கும் கருவியே எழுதுகோல்
ஆயுதத்தால் சாதிக்க முடியாததையெல்லாம்
அழுத்தமான வார்த்தையாலே வென்றுகாட்டும்
வலிமையான ஆயுதமே எழுதுகோல்
மக்களையெல்லாம் ஒன்று திரட்டி ,
மண்ணைக் காக்கும் மகத்துவம் எழுதுகோல்
எம் எழுதுகோல் வாய்மையைப் போதிக்கும்
எம் எழுதுகோல் நேர்மையை நேசிக்கும்
எம் எழுதுகோல் உண்மையை உலகுக்கு உரக்க
எடுத்துச்சொல்லும்
எம் எழுதுகோல் தமிழருக்காக , தமிழுக்காக
காலமெல்லாம் போராடும்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment