பொன்னியின் செல்வன்
புலிக்கொடி பறந்து, புயலென புறப்பட்டு, சீறிவரும்
அலை மீதே , சிங்கமென கடற்படை நடத்தி ,
இலங்கை, தென்கிழக்கு ஆசியாவையே தன் வசப்படுத்தி ,
அகண்ட பேரரசை அமைத்த , ஈடு இணையற்ற
ஒப்பற்ற ஒரே இந்தியப் பேரரசு
"சோழ சாம்ராஜ்ய பேரரசு"
சோழ நாடு சோறுடைத்து
கங்கை கொண்டான்
கடாரம் கொண்டான்
இவையெல்லாம் சோழனின் பெருமைக்கு சான்று
கல்லணை அமைத்து, நீர் மேலாண்மையைப் படைத்தது ,
காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தில் புரட்சி செய்து ,
அனைவருக்கும் உணவளித்த மாபெரும் அரசே
சோழப் பேரரசு!!
தமிழனின் பெருமையை தரணிக்கு எடுத்துச்சொல்ல
தஞ்சைப் பெரிய கோயிலை பிரம்மாண்டமாய் வடிவமைத்து,
கட்டுமானத்துறையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
மாபெரும் சரித்திரம் படைத்தது சோழப் பேரரசு!!
மாவீரன் இராஜராஜசோழன், மாவீரன் இராஜேந்திரசோழன்,
இவர்களின் வரிசையில் மாவீரம் மேதகு பிரபாகரன் ,
இவர்களெல்லாம் தமிழனின் மாண்பை உயர்த்திப்பிடித்த
வணக்கத்துக்குரியவர்கள்
சேர , சோழ , பாண்டிய மூவேந்தர்களும்
ஆண்ட காலமே தமிழகத்தின் பொற்காலம்
தலைப்பையொட்டி சொன்ன செய்தி கொஞ்சம்தான்
தமிழனின் உண்மை வரலாற்றை, இளைய சமூகம்
முழுமையாய் கற்றுத் தெளிந்திட வேண்டும்.
வீரம் ,மானம், ஈகை , இன உணர்வு நிறைந்த
தமிழ் சமுதாயம் உருவாக உண்மையாக பாடுபடுவோம்
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment