Saturday, 30 April 2022

Pen Parkkum Padalam- 2

பெண்  பார்க்கும்  படலம் -2

படித்தப் பெண்  என்பதால்  மெல்ல  மெல்ல  புரிந்துக்  கொண்டு 
அவளே  முன் வந்து உங்கள்  ஆசையை  நிறைவேற்றுவாள் 

பிறந்ததிலிருந்து  அவள் ஆசைப்  பட்டதையெல்லாம் 
அப்படியே  வாங்கித்தரும்  நீங்கள்  அவள்  

திருமணத்தில்  மட்டும்  உங்கள்  எண்ணத்தைத்  திணிக்காதீர்கள்  
பெண்ணை   அவள்   விருப்பப்படி வாழ  விடுங்கள் 

ஜாதியின்  பேரால் , மதத்தின்  பேரால், பெண்ணை 
பலியிடுவதைத்  தடுத்து  நிறுத்துங்கள் 

எந்த   மதமும் , எந்த  ஜாதியும்  உங்கள்  
அன்பு  மகளைத்  திரும்ப  தரப்  போவதில்லை 
 
ஆவணக்  கொலைகளைத்    தடுக்க  கடுமையான  
சட்டம்  கொண்டு  வாருங்கள் 
  
ஒவ்வொரு முறை பெண்  பார்க்கும்  படலம்  நடக்கும்  போதும் 
இந்த  வரனாவது  முடியாதா !  என  பெண்ணைப் பெற்றோர் 

ஏங்குகின்றனர் , ஆனால்  
கூட்டமாக  வந்து  அமர்ந்துக்  கொண்டு , கொடுக்கும்  

தின்பண்டத்தைக்   கொறித்துக்   கொண்டு , பெண்ணை 
கண்காட்சி  பொம்மையாகப்  பார்ப்பதும் , 

தங்களுக்குள்  முணுமுணுத்துக்  கொள்வதும்,
எதோ  இந்திரலோகத்திலிருந்து   வந்த அழகு  

சுந்தரிகள்  போல்  தங்களைப்  பாவித்துக் கொண்டு,
பெண்ணை  விமர்சிப்பதும் , எந்தவொரு  பதிலும்  

சொல்லாமல்  எழுந்து  செல்வதும் , காலங்காலமாக  
பெண்   சமூகம் சந்திக்கும்  சகிக்க  முடியாத   கொடுமையாகும் 

பெண்  பார்க்க   வரும்  மாப்பிள்ளை  வீட்டார்  தங்கள் 
வீட்டிலும்  திருமணத்திற்கு  தயாராய்  ஒரு  பெண்  

இருக்கிறாள்  என்பதைப்  புரிந்துக்கொண்டு  
நாகரிகமாக  நடக்க  வேண்டும் 

பெண்ணியம்  பேசும்  நாம்  பெண்ணின்  திருமண 
உரிமையையும்  சேர்த்துப்  பேசுவோம் 

--த .சத்தியமூர்த்தி 


No comments:

Post a Comment