வாய்மை
பொய்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து வான்
உதித்த சூரியன் போல் வெளிபடுவதே வாய்மை
ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தைக் கடந்து கடல்
அலைபோல் பொங்கி மேலெழுவதே வாய்மை
வஞ்சக நரிகளின் பொய் கூடாரத்தில் மறைத்து வைத்தாலும் ,
தக்க சமயத்தில் தன்னை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே வாய்மை
ஜனநாயகத்தின் பேராலே, கொள்ளையடிக்கும் கூட்டத்தை
கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே வாய்மை
காலங்கடந்து தீர்ப்பு வந்தாலும், நீதிமன்றங்களில்
இன்னமும் கர்வத்தோடு நடைபோடுவதே வாய்மை
சாதாரண சாமானியனின் பக்கம் ஆட்சி , அதிகாரம் , இல்லாது
போனாலும் இன்னமும் கவசம் போல் மக்களைக் காக்கும்
கேடயமே வாய்மை
பொய்மை மொத்தமாய் ஆலவட்டம் போட்டு, ஆட்டம் போட்டாலும்,
கடைசியில் வழக்கம் போல் வெற்றி பெறுவது வாய்மை
பச்சை கரன்சி நோட்டுக்காக, பல்லிளித்து வெட்கமில்லாமல்
ஆயிரம் வேடங்கள் போட்டாலும், மக்கள் மன்றத்தில் துரத்தப்பட்டு
பின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதே வாய்மை
நல்லவரை போல் நடமாடும் கபடதாரிகளை நம்மிடத்தில்
காட்டிக் கொடுப்பதே இந்த வாய்மை
அடிமேல் அடிவாங்கி அடித்தட்டு மக்களெல்லாம் ,
ஜாதிவெறியர்களாலும் , மதவெறியர்களாலும் துண்டாடப்பட்டு ,
புழுவாய் துடித்தபோதும், இன்னமும் பொறுமையோடு இருப்பதற்குக்
காரணமே
என்றாவது ஒருநாள் நீதி வென்று வாய்மை வெளிப்படும்
என்ற நம்பிக்கையில் தான்
வாய்மை என்பதே தூய்மை ! நேர்மை !!
அது தான் வெல்லும் என்பதே உண்மை !!!
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment