Sunday, 24 April 2022

Pen Parkkum Padalam

 பெண்  பார்க்கும்  படலம் 

பெண்ணைப்  பிடிக்கிறதா ? கல்யாண  மாப்பிள்ளையிடம்  
கட்டாயமாய்  கேட்கப்படும்  அதே  கேள்வி  

மாப்பிளையைப்  பிடிக்கிறதா ? பெண்ணிடம்  
ஏனோ  பெரும்பாலும்  கேட்பதில்லை 

நான்  பார்த்த  மாப்பிள்ளை  என்  பெண்ணுக்கு  
மிகப்  பொருத்தம் . பெற்றோர்  சமூகம்  பிதற்றுகிறது 

என்  பெண்ணுக்கு ஏற்ற  மாப்பிள்ளை  
தாய்க்கும்  தந்தைக்கும்  ஏகப்பட்ட  பெருமை 

விடிந்தால்  கல்யாணம். பெண்ணைக்  காணவில்லை ,
கல்யாணத்துக்கு  ஒரு வாரம் பெண்  விஷம்  குடித்தாள்

     பத்திரிகைகளில்  பலவாறு  பரபரப்புச்  செய்திகள் 
பெற்ற  மகளிடம்  அவள்  விருப்பத்தைக்  கேட்பதில் 

அப்படி  என்ன  கௌரவக்  குறைச்சல் !
  
உங்களுக்காக  நீங்கள்  எடுக்கும்  ஆடையை  
விரும்பாத  பட்சத்திலும் , ஓரிருமுறை  போட்டுவிட்டு  

ஒதுக்கி  விடலாம். ஆனால்  மாப்பிள்ளை  அப்படியா ?
பொருந்தாத  பட்சத்தில்  , அல்லது  அவள்  ஏற்கனவே  

ஒருவரை  விரும்பும்  பட்சத்தில் , வாழ்க்கை  முழுவதும்  
கட்டிக்கொண்டு  அவஸ்தை  அல்லவா 

காலம்  மாறி  விட்டது
  
பெண்ணுக்கு  பிடித்தவன்  எல்லா  வகையிலும் 
 பொருத்தமானவன் என்றால்  

நீங்களே  முன்னின்று  திருமணத்தை  முடித்து  வையுங்கள் 

பெண்  தேர்ந்தெடுத்தவன்  சரியல்லையென்றால் 
பொறுமையுடன்  பேசி  புரிய  வையுங்கள்

மெல்ல  மெல்ல  அவனைப்  பற்றிய  தகவல்களைச் 
சேகரித்து  ஆதாரத்துடன்  அழுத்திச்  சொல்லுங்கள் 

அவள்  எத்தனைப்  பெரிய  ஆபத்தில்  சிக்கியுள்ளாள்  
என்பதை  மீண்டும்  மீண்டும்  எடுத்துச்  சொல்லுங்கள் 

------------தொடரும் -----------

----த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment