எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
கற்கண்டு சொற்கொண்டு கவிதை நடையில்
காவியம் பல செய்து தமிழுக்கு பெருமை
சேர்த்தது ஒரு காலம்
எல்லா பாடத்திலும் முதன்மையாய் தேர்ச்சி
ஏனோ எம் தமிழில் மட்டும் குறைவாய் பயிற்சி
தமிழ் மட்டும் அவனுக்கு/அவளுக்கு சரியாய் வராது
தமிழ் பெற்றோர் பெருமையாய் சொல்லிக் கொள்வது
பத்திரிகையைப் படித்துத் தான் தமிழைக் கற்றுக்கொண்டேன்
அப்படியானால் பள்ளியில் படிக்கும்போது என்ன செய்தீர்கள் ?
ஒரு மொழி அழிந்தால் , அவன் இனம் அழியும்
இனம் அழிந்தால் , அவன் வாழ்ந்த நிலம் அழியும்
நிலமற்று நாடோடியாய் இன்று திரிபவர்கள் அன்று
தங்கள் தாய் மொழியை கற்க மறந்தவர்கள்
தமிழ்க்குடிகள் முறையாய் தமிழைக் கற்கவில்லையென்றால்
வேறு யார் இம் மொழியைக் காப்பது ?
பள்ளியில் தனிக் கவனம் செலுத்தி தமிழை
முறையாய் கற்றுத் தரவேண்டும்
மாணவர் மன்றம், புலவர் மன்றம் போல் தமிழுக்கு
தேர்வு நடத்தி சான்றிதழுடன் பரிசுகள் தரவேண்டும்
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கம்
அக்கறையோடு பாடுபடவேண்டும்
தமிழ் வழியில் பயின்றவர்க்கு அரசு வேலையில்
முன்னுரிமைத் தரவேண்டும்
விழிக்கு இணையான எம் மொழியை
தமிழை வணங்கி வாழ்த்துவோம்
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment