ஆடம்பரத் திருமணங்கள்
ஒரு இரவில் படோடாபம் காட்ட பல
இலட்சங்கள் வாரி இறைத்து திருமணம்
செய்ய யாரிட்டது கட்டளை ?
பக்கத்தில் இருப்பவனைப் பார்க்கக்கூட மனமில்லாத
மனம் படைத்தோர் கல்யாணத்தில் மட்டும்
கவலையில்லாமல் செலவு செய்வது யாருக்காக ?
சாப்பிட ஆரம்பிக்கும் போது இலையில் வைக்க
ஆரம்பித்தவர்கள் சாப்பிட்டு முடியும் போதும் யாருக்காக வகைவகையாய் வைத்துக்கொண்டே போகிறார்கள்
பாதிக்கும் மேலாக இலையுடன் குப்பைக்கு
போகும் உணவு வகைகளை பசியோடு இருக்கும்
பாமரனுக்கு பகிர மனம் உண்டா ?
சிக்கனமாய் செய்யுங்கள் என சொல்ல வரவில்லை
தேவைக்கு மேலே வீண் செலவு எதற்காக ?
படிப்புக்காக , மருத்துவத்திற்காக , சமூகநலத்திற்காக ,
இன்னும் அரசாங்கத்திடம் உதவி கேட்கும் நிலையில்
மக்கள் உள்ளார்கள்
திருமனச் செலவில் ஒரு பகுதியை இதுபோல
நல்ல காரியத்திற்கு மடை மாற்றம் செய்தால்
மணமக்கள் வாழ்வு சிறக்குமல்லவா !
வசதிப் படைத்தோர் சிந்திப்பீர் !
ஆடம்பரத் திருமணத்தைத் தவிர்ப்பீர் !
கல்யாணம் என்பது இரு மனங்களின்
சங்கமம் தான்
அதற்காக கட்சிக் கட்டிக்கொண்டு
காசை வாரி இறைக்காதீர்!
செல்வம் அதிகமாய் ஆண்டவன் கொடுத்தது
இல்லாத ஏழைக்கும் சேர்த்துத்தான்
வாழ்க! மணமக்கள் பல்லாண்டு!
வளமோடும் , நலமோடும் நூறாண்டு !
த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment