பிரியா விடை -5
தமிழாசிரியரும் அவர் மகளும் பேசுவதைக் கேட்டு
உள்ளே நுழையாமல் வாசலில் நின்றேன்
தமிழாசிரியர் தன் மகளைப் பார்த்து ,
"உதயணனைப் பற்றி என்ன நினைக்கிறாய் ?"
என்று கேட்க
(உதயணன் வேறுயாருமல்ல நான் தான் நானேதான்)
"கவிதையைப் பேசி பேசி காலத்தை
வீணாக்கும் பொறுப்பில்லை
இளைஞன்
-இதற்கு மேல் என்னப்பா சொல்ல "
என்று சொல்லும் மகளைப்பார்த்து ஆசிரியர்
"அவனுக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கும்
அவன் மிக நல்லவன்
ஆண்டவன் அவனை கை விட மாட்டான்"
கேட்டுக்கொண்டிருந்த
என் கண்ணில் கண்ணீர் சுரந்தது
நான் உள்ளே செல்லாமல்
வந்த வழியே திரும்பி விட்டேன்
மானசீகமாக தமிழாசிரியரிடம் விடைபெற்றேன் ..
வேலைக் கிடைத்த மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு
மகளைப் பற்றி பேசத்தான் ஆவலோடு சென்றேன்
நான் அவளிடம் எதிர்ப்பார்த்தது அவள் காதலை
அவளோ என்னிடம் எதிர்ப்பார்த்தது ஒரு
பாதுக்காப்பான வேலையை
அதை யார் வேண்டுமானாலும் தரலாம்
அதற்காக அவள் மீது எனக்கு கோபம் இல்லை
கண்டதும் காதல் என்ற உணர்ச்சி வேகத்தில்
வேலை இல்லாத இளைஞனை ஆசைப்பட்டு
காலமெல்லாம் கவலைப்படும்
அப்பாவிப்பெண் அவளல்ல
அது வரையில் மகிழ்ச்சியே !
அவளிடமிருந்து பிரியா விடை பெரும் உதயணன்
பிரியா விடை முற்றும் ...
----த.சத்தியமூர்த்தி