பிள்ளை நிலா
பட்டுப் போன்ற கன்னம் கொண்டு
பஞ்சுப் போன்ற கையை ஆட்டி ஆட்டி
தொட்டினிலே தெய்வமொன்று அசையுது - நம்
சொந்தமொன்று வந்து இங்கு சேர்ந்தது
கள்ளமில்லா சிரிப்பு ஒன்று
பிள்ளை இங்கு சிரிக்கக்கண்டு
காணும் கண்கள் ஆனந்தத்தில் துள்ளுது -என்
கவலையெல்லாம் காணாமல் போனது
மழலைச்செல்வம் வாரியெடுத்து - என்
மார்போடு அணைத்த போது
மகிழ்ச்சி வெள்ளம் பெருகுது
மனமெல்லாம் இனிக்குது
முத்தமொன்று கன்னத்திலும்
முகத்திலும் மாறி மாறி பதித்த போது
தேனாக இனித்தது - தெம்பாக இருந்தது
கையில் கிடைத்தப்பொருளையெல்லாம் எடுக்குது
உடன் வாயில் போட்டு மெல்ல மெல்ல சுவைக்குது
மண்ணைக்கூட ஆசையோடு தின்னுது
கண்ணைப்போல தாயுள்ளம் காக்குது
செல்வமிங்கு எத்தனையோ மண்ணில் உண்டு
உயிர்த் துடிப்பாகும் மழலைச்செல்வத்திற்கு ஈடாக ஏதுண்டு !
தெய்வம் தந்த பரிசு ஏதேனும் கிடைத்ததென்றால்
அன்பான மனைவியும் அவள் எனக்களித்த மழலையும்
சொர்க்கமென்று ஏதுமில்லை
சொந்தமென்று வந்த
மனைவிபோல - மழலைப்போல
அன்புசெல்வங்கள் எனக்களித்த
ஆண்டவனுக்கு நன்றி சொல்வேன் !!
----------- த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment