காதலும் கடந்துபோகும்
பெண்ணே! நீ புரியாத புதிரென்பேன்
நீயே
குளிர்ச்சித்தரும் நிலவாவாய்
சுட்டெரிக்கும் சுடராவாய்
தென்றலைப்போல் தழுவிடுவாய்
புயலைப்போல் தாக்கிடுவாய்
கலகலப்பாக இருந்திடுவாய்
கடுகைப்போல் வெடித்திடுவாய்
கனவினிலே இனித்திடுவாய்
காதல் தந்து விலகிடுவாய்
எளிதாக மனம் மாற பெண்ணுக்கு இறைவன் கற்றுத்தந்தான்
எண்ணி எண்ணி மாய்ந்து போக ஆணுக்கு வரம் தந்தான்
புலம்ப வைத்து கலங்க வைத்து கவிதையினை வடிக்க வைத்தான்
ஊரெல்லாம் விடிந்த பின்னும் அவன் வாழ்வை இருள வைத்தான்
அன்பாக பேசி அவனை ஏமாற்றிய கலையென்ன
நினைத்தாலே நெஞ்சமெல்லாம் எரிகின்ற கனலென்ன
அவனை துடிக்கவைத்து வெகுதூரம் போன விந்தையென்ன
இடம் விட்டு இடம் சென்றும் அவன் இதயத்தில் இருப்பதனால் -
முள்ளாக குத்தியே அவன் மூச்சுக்கு வேட்டு வைத்தாய்
மறந்து விடுங்கள்
மன்னித்து விடுங்கள்
இரு வரியில் விடைபெற்றாள்
அவளை மன்னித்து விட்டான்
ஆனால் மறக்கவில்லை
அவன் நினைவை இழந்தால் அவளை மறப்பான்
அவன் உயிரை இழந்தால் அவளை மறப்பான்
----த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment