மதிப்பு
மாணவரின் மதிப்பு அவர் வாங்கும் மதிப்பெண்ணிலே
அன்னையின் மதிப்பு மழலையை ஈன்றெடுப்பதிலே
வணிகனிர் மதிப்பு தராசின் நேர்மையிலே
நிறுவனத்தின் மதிப்பு மக்களின் நம்பிக்கையிலே
முதலாளியின் மதிப்பு அவரது இரும்பு பெட்டகத்திலே
தொழிலாளியின் மதிப்பு அவர் சிந்தும் வியர்வையிலே
உழைப்பின் மதிப்பு அவர் உயரும் அந்தஸ்திலே
பணத்தின் மதிப்பு அதை கையாள்பவர் திறமையிலே
தங்கத்தின் மதிப்பு கல்யாண சந்தையிலே
தலைவனின் மதிப்பு தொண்டர்களின் அபிமானத்திலே
உழவனிர் மதிப்பு அவர் செய்யும் உற்பத்தியிலே
உண்மையின் மதிப்பு நீதி வெல்வதிலே
நல்லவனின் மதிப்பு அவனது நடத்தையிலே
நாட்டின் மதிப்பு மக்களின் வருமானத்திலே
கவிதையின் மதிப்பு ரசிக்கும் ரசிகர்களின் ரசனையிலே
காதலின் மதிப்பு காதலர்களின் மன உறுதியிலே
தமிழின் மதிப்பு தரணியெங்கும் எதிரொலிப்பதாலே
தமிழனின் மதிப்பு காதல் , மானம் , வீரத்தினாலே
அழகின் மதிப்பு பார்க்கும் பார்வையினாலே
அன்பின் மதிப்பு கொடுத்து உதவும் தியாகத்தினாலே
மதிப்பு என்பது குறியீடு
அதுவே நமது வாழ்வின் செப்பேடு
பிறர் மதிக்க வாழ்வதே வாழ்வியலின் வரலாறு
எல்லோரையும் சமமாக மதித்து வாழ்வோம்
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment