Saturday, 19 September 2020

Elaiya Thalaimurai

இளைய தலைமுறை 

விடியல்  உதித்ததால்  வெளிச்சம்  வந்தது 
வசந்தம்  வந்ததால்  வாழ்வு   மலர்ந்தது  

அன்பு  பிறந்ததால்  அகிலம்  இணைந்தது 
ஆசை  துறந்ததால்  அமைதி  கிடைத்தது 

நல்லது  நடப்பதால்  நம்பிக்கை  துளிர்த்தது 
காலம்  கனிந்ததால்  நினைத்ததெல்லாம்  நடந்தது 

கவிதையின்  துடிப்பால்  எழிச்சி  பிறந்தது 
காதல்  மலர்ந்ததால்  உள்ளம்  இனித்தது 

மனைவி  அமைந்ததால்  மகிழ்ச்சி  வந்தது 
மழலை  இணைந்ததால்  கடமை  சேர்ந்தது
 
மக்களாட்சியால்  சுதந்திரம்  உருவானது  
மக்களின்  உழைப்பால்  நாடு  செழித்தது 

நாட்டின் வளமை மேட்டுக்குடிக்கு மட்டும் சொந்தமானது
தட்டிக்கேட்கவோ  தலைமையில்லாமல்  போனது 

தலைமையேற்க  இளைய  தலைமுறையே  வாருங்கள்
உழலற்ற சமூகத்தை  உங்களிடமிருந்து  துவக்குங்கள் 

ஏழையின்பால்  பற்று  வைத்து  உண்மையாய்  உழையுங்கள் 
நேர்மையாய்  நடந்து  உண்மையான  சுதந்திரத்தை  உறுதிப்படுத்துங்கள் 

கருணை  பிறப்பதால்  மட்டுமே  வறுமை  ஓழியும் 
கல்வியால்  மட்டுமே  சமதர்ம  சமுதாயம்  சாத்தியமாகும் 

வலிமையான  இந்தியாவை  உருவாக்க 
 தோளோடு  தோள்  சேருங்கள்  

நாடு  உங்கள் மேல் நம்பிக்கை  வைத்து  காத்திருக்கிறது 
நீங்கள்  நிமிர்ந்தால்  வானமும்  தொட்டுவிடும்  தூரம் தான் 

த .சத்தியமூர்த்தி             

  

No comments:

Post a Comment