இல்லம் வந்த அழகு மயில்
பார்த்து வச்ச மாப்பிள்ளை தான்
பக்கத்திலே வந்து விட்டால்
சேர்த்து வைத்த ஆசையெல்லாம்
செயல் வடிவம் ஆகுதடி
நேத்து வந்த மாமன் மேலே
நினைப்பெல்லாம் ஆனதாலே
காத்திருந்த கன்னிப்பூவும் - அவன்
கைப்பட்டு கனிந்ததடி
பொழுது சாய்ந்த பின்னாலே
மச்சான் கூட முன்னாலே
போனதாலே தன்னாலே
மயங்கி நிக்குது பெண்புள்ளே
விழியாலே ஜாடை பேசி
மொழியாலே காதல் பேசி
வளர்ந்து நிற்கும் அழகு பொண்ணு சிரிக்குது
பாவம் ஏதேதோ எண்ணி எண்ணி ஏங்குது
அன்று உள்ளத்திலே குடி புகுந்த உத்தமி
இன்று இல்லத்திலே விளக்கேற்றும் பத்தினி
என்றும் எண்ணத்திலே கலந்து விட்ட தாரகை
என் நெஞ்சமெல்லாம் இனிக்கின்ற தேவதை
அன்பு மொழி பேசும் அழகு மயில் ஓவியமே
இல்லம் அலங்கரிக்கும் பழகு தமிழ்க்காவியமே!!
சொர்க்கமதைக் காண்கின்றோம்
சொந்தமெனக் கொள்கின்றோம்
த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment